Puttalam Online
star-person

அல்ஹாஜ் அப்துல் ஒப்பார் : தொய்வின்றி தொண்டாற்றும் மஸ்ஜித் இமாம்

நம்மவர்களில்….. இன்றியமையதவர்கள்.

இப்பகுதி எமது பிரதேசத்தில் வாழும் விஷே ஆற்றல்மிக்கவர்கள் எமது சமூகத்திற்கு பிரத்தியேகமான சேவைகளை வழங்கிவரும் தனித்துவமானவர்கள் எனக்குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாகும். இம்முயற்சி, பிறர் புகழ்பாடும் நோக்கமல்லாது    அல்லாஹ் வழங்கிய ஆற்றல்களையும் அருட்கொடைகளையும் பயன்படுத்தி சமூகப்பணி புரிபவர்களை முன்னுதரணமாக காட்டி, எம்மில் பலரையும் இச்சமூகப் பணிக்காக தூண்டுவதாகவும்.

இந்த வகையில் இம்முறை கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தனித்துவமானதொரு சமூகத்தொண்டு புரிந்து வரும் மஸ்ஜிதுல் பகா இமாம் அல்ஹாஜ் அப்துல் ஒப்பார் அவர்களை இங்கு அறிமுகம் செய்து வைக்கின்றோம்.

அஹ்மத் ஜலால்தீன் அப்துல் ஒப்பார். இவர் அஹ்மத் ஜலால்தீன், மொஹிடீன் இப்ராகிம் நாச்சியா ஆகியோருக்கு 1945 மார்ச் 23 ல் புத்தளம் மரிக்கார் வீதியில் பிறந்தார். இவரது குடும்பம் மார்க்க பின்னணி கொண்ட குடும்பமாக காணப்பட்டது. இவரது தாய், தாயின் சகோதரி ஆகியோர் பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதி கொடுப்பவர்களாக இருந்தனர். இவர் தனது இளமை கல்வியை பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 8 வரை கற்றார். பின் 9 ம் தரத்தில் கற்பதற்கு சாஹிரா பாடசாலைக்கு சென்றார். அனால் தனது கல்வியை தொடரவில்லை. பாடசாலை சென்று வந்த பின் பீடி சுற்றும் வேலையை செய்பவராக இருந்தார். அதனை பாடசாலை கல்வியை நிறுத்திய பின் முழுநேரமாக செய்து வருமானம் ஈட்டுபவராக இருந்தார்.

1972 ம் ஆண்டு சித்தி பரீதா என்பவரை திருமணம் செய்தார். இரு மாதங்களின் பின் ஆரம்பத்தில் பெரிய பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கிய வெட்டுக்குளம் பள்ளி அல்லது மையத்து பள்ளி என்றழைக்கப்பட்ட மஸ்ஜிதுல் பகாவில் இமாமாக கடமையாற்றிய பாச்சா என்ற அபூபக்கர் என்பவர் சிலவேளைகளில் அப்துல் ஒப்பார் ஆகிய இவரை தொழுகை நடத்துமாறு கூறிச் செல்வார். பின் பெரிய பள்ளி நிர்வாகம் பெரிய பள்ளி முஅத்தினாக இவரை நியமிப்பதற்கு முடிவெடுத்தபோது பாச்சா என்பவர் தான் பெரிய பள்ளி முஅத்தினாக இருப்பதாகவும் இவரை வெட்டுக்குளம் பள்ளி இமாமாக நியமிக்குமாறு கூறியதற்கிணங்க அன்று முதல் இன்று வரை வெட்டுக்குளம் பள்ளிக்கே தன்னை அர்பணித்துவிட்டார். இமாமாக மட்டுமல்லாது முஅத்தினாகவும், மையத்து அடக்குதல் பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தல், கப்ர் வெட்டுதல் போன்ற பணிகளையும் செய்பவராக இருந்தார். அதன் பின் பரவலாக குர் ஆன் மத்ரசாக்கள்  காணப்பட்டதனாலும், பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்ததனாலும் குர்ஆன் ஓதிக் கொடுப்பது நிறுத்திவிட்டார்.

1990ம் ஆண்டு முதல் மஸ்ஜிதுல் பகா தனி நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது. திருமணம் முடிப்பதற்கு, வீடு கட்டுவதற்கு உதவி கேட்டு வருவோருக்கு பல உதவிகளை பெற்றுக் கொடுப்பவராக காணப்படுகிறார். குத்பாக்கள், பயான்கள், சஞ்சிகைகள், நூல்கள் மூலம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கி இன்றுவரை அதனை செயட்படுத்துபவராக காணப்படுகிறார்.


13 thoughts on “அல்ஹாஜ் அப்துல் ஒப்பார் : தொய்வின்றி தொண்டாற்றும் மஸ்ஜித் இமாம்

 1. அல்லாஹ் அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தைத் கொடுப்பானாக

 2. Anfath Hifans says:

  அல்லாஹு தஆலா இவருக்கு மென்மேலும் உடல் சக்தியையும், இளைஞர் போன்ற சுறுசுறுப்பையும் வழங்குவானாக!. ஆமீன்.

  மேலும், இவர் போன்று எத்தைனையோ பேர் இலை மறைக்காய் போன்று சமூகத்திற்கு பாரிய சேவை செய்கின்றனர். அவர்களையும் வெளிக்கொண்டுவர வேண்டும்…….:)

 3. Razeen says:

  அல்லாஹுதலா அவரது செயல்களை ஏற்றுக்கொல்வானஹா அவரது ஆயுளை நீடிப்பானாஹா

 4. nadeer says:

  அல்லாஹ்வின் வீட்டில் இருப்பதுக்கு அல்லாஹ் அவருக்கு மேலும் மேலும் சக்தியையும் ஆரோகியத்தையும் கொடுதருளுவானஹா ஆமீன்

 5. fameen says:

  அல்லாஹ் அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தைத் கொடுப்பானாக ஆமீன்

 6. Abusalihu says:

  Assalamu Allikum
  Puttalam online, Greetings for your Long Life

 7. yusri says:

  ஒப்பார் மாமாவுக்கு வாழ்த்துக்கள்

 8. maza says:

  இலை மறை காய்களுக்கு ஒரு விடிவுக்காலம்….இனிதாய் அமைய இறைவன் துணை இருப்பான்.

 9. Dilhasan Siraj says:

  இவ்வாறான எம்மவர்களை உலகுக்கு இனங்காட்டும் இம் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை.

 10. nawas says:

  அல்லாஹ் அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தைத் கொடுப்பானாக

 11. Arhab says:

  மண்ணின் மைந்தர்கள் பகுதி மிகஊம் வரவேற்கப்பட வண்டிய முயற்சி..

  மனிதர்களை வாழ்த்துவதும் புகழ்வதும் அல்லாஹ்வின் அருளை நிநைஉ படுத்தி அவனை புகழ் பாடுவதாகும். மாத்திரமல்ல சமூகத்திற்காக தம்மை அற்பநித்தவர்கள் அறிமுகப்படுத்தப்படும் பொழுது பிறருக்கு முன்மாதிரியாக இருப்பதுடன் பிறரை இவ்வாறான சமூக பணிகளை புரிவதற்கும் தூண்டுகோலாக அமையும்…

  இப்பகுதியில் எமது சமூகத்தில் வாழும் முஸ்லிமல்லாத சகோதரர்களையும் அறிமுகம் செய்து வைத்தால் சிறப்பாக இருக்கும்.

 12. Reader says:

  ஸலா ம்
  இந்த அளப்பரிய சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 13. Puttalamaindhan says:

  சமூகத்திற்கு பாரிய சேவை செய்து வரும் இவர் போன்றோரை உலகுக்கு அறிமுகம் செய்யும் இந்த கன்னி முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All