Puttalam Online
uncategorized

வரலாற்றுப் பெருமைமிகு புத்தளம்

கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி நீர் கொழும்பு பாதையூடாக நேராக வந்தால் 116 வது கி.மீ. தூரத்தில் புத்தளம் கடல் நீரேரியைத் தொட்டவாறு காட்சி தரும் அழகான சிறிய நகரம் புத்தளம். கல்பிட்டி நகரையும் புத்தளம் நகரையும் இணைத்து 30 கி.மீ. நீண்டு கிடக்கும் புத்தளம் அல்லது கல்பிட்டிக் கடல்நீர் ஏரி புத்தளம் நகரை அண்மித்ததாகத்தான் தனது இறுதி எல்லையைப் பூர்த்தி செய்கிறது.

புத்தளம் நகரிற்கும், கல்பிட்டிக்கும் இன்னும் பல கிராமங்களுக்கும் உயிரோட்டமான அழகைத் தருவதில் இக்கடல் நீர் ஏரிக்கு முக்கிய பங்குண்டு. டச்சுக்காரர் காலத்தில் இந்த ஏரியைப் பயன்படுத்தித்தான் கல்பிட்டி, புத்தளம் நகர்களை இணைத்த கொழும்பு வரைக்குமான டச்சுக் கால்வாய் நீர்ப் போக்குவரத்து ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட காலம் வரை நடைபெற்றது. உள் நாட்டிற்குள் அமைந்த உலகின் மிகப் பெரிய நீர்ப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக இதைக் குறிப்பிட முடியும். ஆங்கிலேயர் காலத்தின் பிற்பகுதியில் கொழும்பிலிருந்து கல்பிட்டி வரை தரைப்பாதை திறக்கப்பட்டதன் பின்னர்தான் இந்நீர்ப் போக்குவரத்து படிப்படியாக நிறுத்தப்பட்டது.

இரு நூறு வருடங்களுக்கு முன்னர் புத்தளம் நோக்கி கடல் ஏரியூடாக வந்த ஐரோப்பிய யாத்திரிகர்களில் சிலர் இரண்டு, மூன்று மைல்களுக்கு அப்பாலிருந்து பார்க்கும் போது தலை நிமிர்ந்து நிற்கும் உயர்ந்த மினாராக்கள் சிலவற்றைக் கொண்ட பள்ளிவாசல்களைக் கண்டதாகவும் அதை அண்மித்ததும் புத்தளத்தை வந்தடைந்துவிட்டதைத் தாம் அறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் குறிப்பிட்ட அந்த வரலாற்று பூர்வமான பள்ளி (அல்லது தர்ஹா) இன்று இல்லை. ஆனால் அதே இடத்தை அதேவகையில் தூரத்திலிருந்து பார்க்கக்கூடிய பிரமாண்டமான பல கட்டிடக் கலையழகுடன் கூடிய புத்தளம் முஸ்லிம்களின் பெரிய பள்ளிவாசல் கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது. அது புத்தளம் நகரினதும் புத்தளம் பிரதேசத்தினதும் மாற்றமுடியாத ஒரு பெரிய அடையாளத்தைக் காட்சிப்படுத்தும் ஒரு வரலாற்றுச்  சின்னமுமாகும். புத்தளம் பெரிய பள்ளிவாசல் தனக்குள் 600 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றை உள்ளடக்கியுள்ள ஒரு மகத்தான கட்டிடக் கலைச்சின்னம் என்பதை உணர்ந்திருப்பவர்கள் ஒரு சிலர் தான்.

‘புத்தளம்’ நகரின் பெயர் தான் மாவட்டத்தின் பெயருமாகும். புத்தளம் என்பது நகரையும் குறிக்கிறது மாவட்டத்தையும் குறிக்கிறது. சிலாபம், குருநாகல் நகரங்கள் பெற்றுக்கொள்ளாத பல முக்கியத்துவம் நவீன வரலாற்றில் புத்தளம் பெறக்கூடியதாக இருந்தது ஒரு பெரிய வரலாறு.

12ம் நூற்றாண்டின் பின்னர் மத்திய மலை நாட்டிலும் குருநாகல் இராச்சியத்திலும் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கும் குருநாகல் உட்பட மத்திய மலை நாட்டிற்குத் தேவையான கடல் வழிப்பாதை, துறைமுகம், பொருட்களைக் களஞ்சியப்படுத்தல், சிங்கள அரசர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் தேவையான ஆயுதங்கள், ஆடம்பரப் பொருட்கள், உணவுப்பதார்த்தங்கள், உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தல், வெளி நாடுகளுக்கு அனுப்புதல், வெளிநாடுகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளுதல் ஆகிய பல தேவைகளை புத்தளமும் கல்பிட்டியும் தான் நிறைவேற்றின.

புத்தளம் உள்துறைமுகமாகச் செயற்பட்டது. கல்பிட்டி கிட்டத்தட்ட சர்வதேசத் துறைமுகமாக இருந்தது. இவற்றிற்கு சுமார் 20 , 30 மைல் தொலைவில் இரண்டாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த குதிரை மலைத் துறைமுகம் அமைந்துள்ளது. புத்தளம், கல்பிட்டி ஆகிய இரண்டும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்திய இரு முக்கிய துறைமுகங்களாக சுமார் 2000 ஆண்டு வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுபூர்வமான நகரங்களாகும்.

இந்த இரு நகரங்களினதும் துறைமுக வர்த்தக நடவடிக்கைகளும், கடல் வாணிபத்திற்கான  வசதியும், புவியியல் ரீதியான அமைவிடமும், கேந்திர முக்கியத்துவமும் வரலாற்றில் எப்போதுமே உரோமர், பாரசீகர், பீனிஷியர், சபாயியர், அரேபியர் போன்றோரையும் பின்னர் போர்த்துக்கேயரையும், டச்சுக்காரர்களையும், ஆங்கிலேயர்களையும் கவரத்தூண்டிய விடயங்களாக இருந்தன.

போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும் கல்பிட்டியையும் புத்தளத்தையும் கைப்பற்றித் தமது வர்த்தகத்தையும் அரசியல் இராணுவ நடவடிக்கைகளையும் பாதுகாத்தனர். கோட்டைகள் அமைத்தனர். இந்த வரலாறுகள் அனைத்தினதும் மற்றொரு சான்றாகத்தான் கல்பிட்டிக் கடல்நீரேரியைத் தொட்டவாறு கம்பீரமாகத் தோற்றமளிக்கும் டச்சுக்கோட்டை இன்றும் காட்சி தருகிறது.

கல்பிட்டி துறைமுகத்தையும் புத்தளம் துறைமுகத்தையும் கண்டி மன்னன் தனது இரு கண்களாகக் கருதினான். வரலாற்றுக் காலம் முழுக்க கண்டி, குருநாகல், அனுராதபுர இராச்சியத் தொடர்புகளும் வடமாநிலத் தொடர்புகளும், தமிழ் நாட்டுத் தொடர்புகளும் தொடர்ந்து இருந்து வந்தது. அதனால் புத்தளம் மாவட்டம் தமிழ் மொழிக்கும் தமிழர் தொடர்புக்கும் அதே போல் சிங்களவர்களின் அரசியல் பொருளாதார குடியேற்றத் தொடர்புகளுக்கும் தொடர்ந்து ஆளாகி வந்துள்ளதால் முஸ்லிம்களை உள்ளிட்ட மூவினமக்கள் தொடர்பும் உறவும் இஸ்லாம் சமயத்தோடு பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ சமயத் தொடர்புகளும் நீண்ட வரலாற்றைக் கொண்டதாக அமைந்துள்ளதுன. பரந்து கிடக்கும் பல முஸ்லிம் கிராமங்களோடு சங்கமிக்கும் தமிழ், கிறிஸ்தவ, சிங்களக்கிராமங்களும் புத்தளம் மாவட்டத்தின் ஆள்புலத்தொடர்பின் பல்பரிமாணங்கள் எனலாம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம் வரலாற்றை தன்னுள் அடக்கி இன்னும் சுறுசுறுப்பாக இயங்கும் கேந்திர நிலையங்களில் புத்தளமும் ஒன்று. கல்பிட்டித் துறைமுகம், குதிரைமலைத் துறைமுகம் கூறும் பாரசீகர், பீனிஷியர், அரேபியர் வரலாற்றிலிருந்து இங்கு வந்த வரலாற்றுத் தொடர்புகள் ஆரம்பமாகின்றன. 16ம் நூற்றாண்டிற்குப் பின்னர் கேரளத்துடனும், தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் வர்த்தகப் பெருமையுடன் வாழ்ந்த பகுதிகளுடனும்  இத்தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

புத்தளம் என்ற பெயர் எப்போது பதிவாகியது என்பது சரியாகத் தெரியவில்லை ஆனால் 14ம் நூற்றாண்டில் இங்கு கால் பதித்த இப்னு பதூதா ‘பத்தாளா” என்று குறிப்பிட்டுள்ளார். ‘புத்தளம்’ என்றோ அதற்கு கிட்டிய மற்றொரு பெயரிலோ இது அழைக்கப்பட்டதற்கும் , அது ஒரு சுறுசுறுப்பான கடல் வணிக நகராக இருந்ததற்கும் முஸ்லிம் ‘சுல்தான்’ ஒருவர் அதை ஆட்சி செய்து கொண்டிருந்தான் என்பதற்கும் இபுனு பதூதாவின் ‘ரேஹ்லா’ வில் பல சான்றுகள் உள்ளன.

இன்று புத்தளம், கல்பிட்டி இரண்டும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கடலோர நகரங்களாகவும், வர்த்தக நகரங்களாகவுமே தலைநிமிர்ந்து நிற்கின்றன. சிறிய, பெரிய அளவில் பலநூறு கிராமங்கள் ஒன்றிணைந்து கைத்தொழில், கல்வி, வர்த்தகம், மீன்பிடி, உப்பு உற்பத்தி, இறால் பண்ணை என்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இந்த மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்கேற்றுவருகின்றன.


20 thoughts on “வரலாற்றுப் பெருமைமிகு புத்தளம்

 1. டியர் ஷரூபி ,நீங்கள் எடுத்த முயற்சி மிகவும் வரவேட்ககூடியது.
  .நன்றிகள் பல.உங்கள் முயற்சி தொடர அல்லாஹ்வின் ஆசிகள் கிடைக்க வேண்டுகிறேன்.

 2. mohamed abusalih says:

  புத்தளம் மண்ணில் பிறந்தவன் கட்டாயம் அறிய வேண்டிய விடயம் தான்.நன்றி

 3. nadeer says:

  கட்டுரை நன்றாஹா இருந்தது. இது உண்மையும் கூட அதனால் இதை போன்று நமது வூரை தெரிந்ததை போடுங்கள் நன்றி..

 4. ShamAjee says:

  அன்பின் ரஸ்மி சஹோதரருக்கு…..

  உங்கள் முயற்சி மிஹவும் வரவேற்கதக்க விடயம். உங்கள் முயற்சி வெற்றி அடைய அங்கள்போன்றோர்களின் ஆதரவு இருக்கும் தொடர்தும் செயட்படுகங்கள் இதற்கான பலன் மறுமையில் உண்டு…

  சில நல்ல விடயங்களை செய முற்படும் போது மேட்கனவறு மட்டம் தட்டி பேசுபவர்கள் தான் எமது ஊரில் அதிஹம் மனம் தளவடயது உங்கள் சேவையை தொடருங்கள்.
  மேல காணப்பட்ட சில பின்னூடல்கள் பார்த்த போது பழைய பழமொழி நினைவுக்கு வாருஹிறது ” கைக்கிற மரத்துக்கு தான் கல் அடி அதிஹம் ” என்பார்கள் அது போல் தான்

  உங்கள் முயற்சி மென்மேலும் வளர வல்ல நயனை பிரதிக்கிரோம் ………..

  உங்கள் முயற்சிக்கு அல்லாஹ் இம்மையுளும் மருமயுலிம் உங்களை உயர்வக்குவனஹா “ஆமீன்”

 5. Mohamed SR Nisthar says:

  அன்புள்ள ரஸ்மி,

  பொயின்ட சரியா புடிச்சிங்க. நம்ம ஆளுங்க இப்டிதான், புத்தளம் அப்டி, இப்டின்னு கத உடுவாங்க. தேடிப்பாத்தா ஒன்னும் ஈகாது.

  இப்படிதான் அமெரிக்கன் வானத்தில எதாச்சும் கண்டுபிடிக்கங்காட்டியும் சும்மா ஈபானுவோ, கண்டுபுடிச்சி சொன்னாக்கா, எங்களுக்கு தெரியாதாக்குங் குரான்ல இப்டி ஈக்கிதுதானேண்டு சொல்லுவானுவோ. அப்பயாண்டா இத அமெரிக்கனுக்கு முன்னுக்க நீ சொல்லயில்ல ண்டா? சொல்லயில்ல ண்டு தலய சொறிவானுவோ.

  மத்தப்படி உங்கட்ட மாத்திரமில்ல, நமட்டடையும், நம்ம பரம்பரையிட்டையும் கூட இந்த யானை எல்லாங்யில்ல. யானைய உடுவோமே ஒரு ஆடு, கோழி ஒன்னுமில்ல. இப்பதான் நம்ம மக லண்டன்ல ஹொபிண்டு சொல்லி ஊட்ல கோழி வளக்கிராஹா.

  மத்த வெசயத்த சொன்னா நம்ப மாட்டிங்க, அதுல ஒரு கோழி நீலக் கலர்ல முட்ட உடுது. நம்பாட்டி போடோ காட்டிருவேன் கவனம்.

 6. Mohamed Razmi says:

  அன்பின் நிஸ்தார், புத்தளம் மகள், மற்றும் மஹ்மூத்! “என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது” இந்த தொடர் மிகவும் பிரபல்யமானது. இலக்கியம் படித்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். முனோர்களின் பெருமையை பேசிப் பேசிக் காலம் கழிப்பதை இது சூசகமாகக் குறிப்பிடுகிறது. அவ்வளவு தான். மற்றும் படி எங்கள் தாதாவுக்கு யானை எல்லாம் இருக்கவில்லை. யானை வைத்திருந்தவர்கள் ஊரில் இருந்தார்கள் தான். நான் அந்த ‘வர்க்கத்தில்’ உள்ளவன் அல்ல. நிஸ்தாருக்குத் தெரியும். அந்த வகையில் தான் நானும் இந்தத் தொடரைப் பாவித்தேன். வைக்கம் முஹம்மது பஷீர் என்ற பிரபலமான மலையாள எழுத்தாளரின் நாவல் தான் “என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது” இந்த இத்தளம் ஆக்கபூர்வமான விவாதங்களை நோக்கி நகர வேண்டும். தெரியப்படுத்த வேண்டிய, கருத்து பரிமாற்ற வேண்டிய எத்தனையோ விடயங்கள் நம் முன் இருக்கின்றன. அதன் அடியாக மக்களை செயல்படத் தூண்டுவது. அதில் நாம் முன்னணியில் நிற்பது. அதன் ஊடாக புத்தளம் மக்கள் பயனடைய வேண்டும். இது தான் எனது எதிர்பார்ப்பு. இணையம் பொழுது போகாதவர்கள் அரட்டை அடிப்பதற்கு அல்ல. இது அல்லாஹ்வின் அற்புதமான ஒரு அருட்கொடை. பயன்படுத்துவோம். செயல்படுவோம்!

  • Puttalam mahal says:

   அன்பின் ரஸ்மிக்கா, நீங்கள் யானை மக்காரோட செல்ல மகளின் செல்ல மகன் இல்லையென தெரியும். எங்கள் தாத்தாவின் யானை குழி யானை என்று சொல்வீங்கள் என எதிர்பார்த்துதான் அந்த பின்னூட்டத்தை விட்டேன்.

   மற்றபடி, உங்கள் கருத்தை என்னால் ஏற்க முடியாது. பொழுது போகாது இப்பக்கம் புகுவோரையும் உங்கள் கருத்து சென்றடைய வேண்டும். அவர்களை ஆக்க பூர்வமான வழியில் செல்ல உதவுங்கள். இப்புத்தளத்தில் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர நீங்கள் அனைவரையும் உள்வாங்கிதான் ஆக வேண்டும். உங்கள் அல்லது எமது கனவுகள் நனவாக பொறுமையோடு வீசப்படும் கற்களை பொறுக்கி நம் முன்னாலுள்ள குழிகளை நிரப்ப முயற்சிக்கலாம். நீண்ட காலம் உழைக்க வேண்டும். முடிந்தவரை முயற்சிக்க அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

 7. Mohamed SR Nisthar says:

  அன்புள்ள வாசகர்களுக்கு,

  “என்ன நடந்தது?” என்ற கேள்விக்கு, யானை நடந்து என்று பதில் வந்துள்ளது. ஆனா ரஸ்மி சொல்லவந்தது ” …., பெரிய யானை இருந்தது(கமா)(,) ண்டு சொல்லவந்தேன். அப்பத்தான் பாட்டி சொன்னஹா அட எழவு பேரன் ஓம் தாத்தாகிட்டே யானையில்ல ஒரு சின்ன ஆட்டுக்குட்டி கூட இல்லன்னு. அதாலேதான் கதய நீட்டாம குத்து, குத்தா(….) போட்டுடேன் ண்டு சொன்னா என்னா செய்விங்க?

 8. Mohamed Razmi says:

  எங்கள் தாத்தாவிடம் பெரிய்ய யானை இருந்தது ………………………………………………!

  • Puttalam mahal says:

   அச்சச்சோ, அப்புறம் என்ன நடந்தது?

  • mahmood says:

   அப்படின்னா ரஸ்மி அங்கிள், “அப்புறம் நடந்தது உங்கள் தாத்தாவின் பெரிய யானைதான்” என்றுதானே புத்தளம் மகளுக்கு சொல்ரிங்கே……………………….?!

 9. admin says:

  (ரியாதிலிருந்து, அஷ்பா அஷ்ரப் அலி)
  புத்தளம் online வாசகர்களில் நானும் ஒருவன். தங்களின் இப்புதிய முயற்சிக்கு புத்தளம் வாழ்
  சகலரும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள் . புதுப் பொலிவுடன் புத்தளம் இணய தளம் தொடர்ந்து பிரகாசிக்க எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

 10. M.A.M. says:

  வரலாறு என்பதற்கு புத்தளம் பெர்மிதம் கட்டியுள்ளது .இதனை அனைவருக்கும் செல்லும் வகையில் ஆக்கத்தினை மேற்கொண்ட எமது ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகலித் தெருவித்து கொள்வதுடன் .இன்னும் சிலவற்றை இதோடு செற்பதட்கு வேஹு விரைவில் எங்கள் அறிவுக் குட்பட்ட தகவல்களை அனுப்பி வைக்கின்றோம் .நன்றி ,ரமழான் கரீம் ,

 11. m.n.najimudeen says:

  புத்தளத்தான்.

  பலருக்கு தெரியாத வரலாற்று விடயங்களை தெரிய படுத்திய புத்தள ஆன்லைனுக்கு நன்றிகள்………………………

 12. hazzan karaitiv says:

  மண் வாசனை வீசுகிறது

 13. siraj says:

  ninaikkayile ullam nekilkirathe, enppothu anthanaal varum en iniyavalin poorvigaththai thasikka, antha manvaasanayai nugara… kaaththirukkiren kaalangalai kanakkittukkondu… en iniya puttalame

 14. hamim says:

  தொட்டுயிளுகும் மண்வாசனை வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் தொடர …………..

 15. வாரவேக்க தக்க விடயம். வாழ்த்துகள்.

 16. Rasoolsha Sharoofi says:

  வலை வனத்தில் பூத்திருக்கும் புதுப் பூவே
  அறிவுத் தேன் குடிக்க அலையும் வண்டுகளாய் நாங்கள்; மண் வாசத்துடன் கலந்த உன் புது வாசம் வலை வனம் எங்கும் வீசிட, இறைவன் உதவட்டும் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All
 • சைமன் காசிச்செட்டி – கல்பிட்டி

  Saiman kaasichetty

  உலக உருண்டையில் இலங்கைத் தீவு அமைந்த...

  8 July 2016
 • Zahira books (1)

  Share the post "" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  20 February 2016
 • Zahira books (2)

  1980 Share the post "" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  20 February 2016
 • Zahira books (3)

  Share the post "" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  20 February 2016
 • Zahira book

  Share the post "" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  20 February 2016
 • Zahira books (4)

  Share the post "" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  20 February 2016
 • Zahira books (5)

  12.02.2008 Share the post "" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  20 February 2016
 • Zahira books (6)

  2010 Share the post "" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  20 February 2016
 • Zahira books (7)

  2015.05.01 Share the post "" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  20 February 2016
 • Zahira books (8)

  Share the post "" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  20 February 2016
 • cup and saucer

  cup and saucer

  Share the post "cup and saucer" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  4 July 2015
 • Tea pot

  bochi

  Share the post "Tea pot" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  4 July 2015
 • சமீரகம – கம் உதாவ

  Sameeragama

  Share the post "சமீரகம – கம் உதாவ" FacebookTwitterGoogle+Pinterest P...

  4 July 2015
 • தென்னை மரம் – கனமூலை

  Kanamoolai

  Share the post "தென்னை மரம் – கனமூலை" FacebookTwitterGoogle+Pi...

  4 July 2015
 • அரை மூடி

  850518786_41944_9676990356407184259

  அரை மூடி சிறுமிகளின் பாலுறுப்பை மறைத...

  30 June 2015
 • அரிசி சேரு

  Rice Seru

  Share the post "அரிசி சேரு" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  7 June 2015
 • கொண்டைக் குச்சி

  Kondai kuchchi

  Share the post "கொண்டைக் குச்சி" FacebookTwitterGoogle+Pinterest Print P...

  7 June 2015
 • பால் வடி

  paal vadi

  Share the post "பால் வடி" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  7 June 2015
 • புலவர் செய்கு அலாவுதீன்

  Pulavar seihu alavudeen

  Share the post "புலவர் செய்கு அலாவுதீன்" FacebookTwitterGo...

  6 June 2015
 • தேசிய மீலாத் 1999

  Poster (3)

  Share the post "தேசிய மீலாத் 1999" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  31 May 2015
 • HS இஸ்மாயில் Post card

  HS ismail post card (2)

  H.S. Ismail H S இஸ்மாயில் அவர்கள் தனது மருமகன்...

  16 May 2015
 • Zahirian perade 2010

  puttalam zahira

  Share the post "Zahirian perade 2010" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  16 May 2015
 • Plate

  20150509_202603

  Share the post "Plate" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  10 May 2015
 • Poster

  poster (1)

  Share the post "Poster" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  5 May 2015
 • ஹிஜ்ரி 1400

  2015-05-04 11.48.29

  Share the post "ஹிஜ்ரி 1400" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  5 May 2015
 • Certificate of Insurence

  za (3)

  Share the post "Certificate of Insurence" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  4 May 2015
 • Sports Certificate

  Certificate sports

  Share the post "Sports Certificate" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  4 May 2015
 • Radio Licence

  Radio licence (5)

  முன்னைய காலங்களில் வீடுகளில் வானொலி...

  12 April 2015
 • புத்தளம் கோட்டை

  20150402_074733

  Puttalam map – 1892 Share the post "புத்தளம் கோட்டை" FacebookTwitt...

  2 April 2015
 • DEED

  20150328_091133

  Share the post "DEED" FacebookTwitterGoogle+Pinterest Print PDF

  28 March 2015