Puttalam Online
star-person

கிருஷ்ணன் ஸ்ரீகந்தராசா : ஓய்வுபெற்ற அதிபர், தமிழ் வளர்த்த கலைஞ்சர்

நம்மவர்களில்… இன்றியமையாதவர்கள்…!

இப்பகுதி எமது பிரதேசத்தில் வாழும் விஷேட ஆற்றல்மிக்கவர்கள், எமது சமூகத்திற்கு பிரத்தியேகமான சேவைகளை வழங்கிவரும் தனித்துவமானவர்கள் எனக்குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாகும்.

 

இம்முயற்சி, பிறர் புகழ்பாடும் நோக்கமல்லாது அல்லாஹ் வழங்கிய ஆற்றல்களையும் அருட்கொடைகளையும் பயன்படுத்தி சமூகப்பணி புரிபவர்களை முன்னுதரணமாக காட்டி, எம்மில் பலரையும் இச்சமூகப் பணிக்காகத் தூண்டுவதாகும்.

 

இந்த வகையில் மண்ணின் மைந்தர்கள் பகுதியில் இம்முறை கல்வியியலாளர் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றோம்.

puttalamonline ஆரம்ப விழாவில் உரையாற்றும்போது.....

கடந்த 36 வருடங்களுக்கு மேலாக கல்வித் தொண்டாற்றிய ஒர் ஆசிரியர், அதிபர், இலக்கியவாதி, கவிஞர், ஆய்வாளர், பன்நூல் ஆசிரியர்…

அவர்தான் எமது பிரதேசத்தின் தமிழர் பாரம்பரியத்தினை பரைசாற்றி நிற்கும் அழகிய கிராமமான உடப்பினைப் பிறப்பிடமாகக் கொண்ட 62 வயதையுடைய கிருஷ்ணன் ஸ்ரீகந்தராசா அவர்கள்.

தற்பொழுது கொத்தாந்தீவு, புதுப்பனிச்சவில்லு கிராமத்தில் வசித்து வரும் இவர் புத்தளம் இந்து மகா வித்தியாலயத்தின் முன்னால் அதிபராவார்.

ஆரம்பக் கல்வியை உடப்பு அரசினர் தமிழ் வித்தியாலயத்தில் பெற்றுக் கொண்டதுடன் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இளமாணிப் பட்டத்தையும் (BA) தமிழ்மொழி தொடர்பான விஷேட கற்கையில் முதுமாணிப் பட்டத்தினையும் (MAQ) பெற்றுக் கொண்டார். நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள பாடசாலைகளில் 15 வருடங்கள்  ஆசிரியராக சேவையாற்றியதுடன் 21 வருடங்கள் அதிபராகவும் சேவையாற்றி பல நூற்றுக் கணக்கான மாணவ செல்வங்களை உருவாக்கி விட்டு தற்போது தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ஆற்றலும் திறமையுமிக்க இந்த ஆசான் இலங்கை அதிபர் சேவையின் தரம் ஐ வரைக்கும் பதவியுயர்வு பெற்றததுடன், கல்வியியல் டிப்ளோமா, ஆசிரியர் பொதுப் பயிற்சி, பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா, பட்டப்பின் கல்வி டிப்ளோமா போன்ற பல கற்கை நெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார். தனது கல்வித் துறையை விட்டும் வெளியே மேலதிக தேடல் விருப்புக் கொண்ட இவர் மனித உரிமைகள் தொடர்பான டிப்ளோமா கற்கை நெறியினையும் பூர்த்தி செய்துள்ளது சிறப்பம்சமாகும்.

கற்பித்தல், பயிற்சியளித்தல் என்பவற்றில் சிறந்த தேர்ச்சிமிக்க ஸ்ரீகந்தராசா அவர்கள் 02 ஆம், 03 ஆம் தர அதிபர்களுக்கான முகாமைத்துவ வளவாளராகவும் சேவையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கலை இலக்கியத்தினை வெகுவாக நேசிக்கும் இவரின் படைப்புக்கள் பல. அவற்றுள் நாடகங்கள், வீதி நாடகங்கள், வில்லுப்பாட்டு, கவிதைகள் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் என பலதை பட்டியலிட்டுக் காட்டலாம்.

கலைவாணி நாடக மன்றத்துடன் ஈடுபாடு கொண்டிருந்த இவர், நாடக எழுத்தாளர், நெறியாளர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என அனைத்து பாத்திரங்களையும் வகித்துள்ளார்.

இவரால் எழுதி மேடையேற்றப்பட்ட நாடகங்கள் வருமாறு:

1.    கல்லுக்குள் ஈரம்
2.    கலிங்கத்துப் போர்முனை
3.    சட்டத்தின் கரங்கள்
4.    சத்தியம் அழிவதில்லை
5.    காதிதப் பூக்கள்
6.    தந்தை சொல் மிக்க…
7.    சிலம்பின் சீற்றம்
8.    சொந்தம்
9.    இன்னொரு புதிய நாள்
10.    தூண்டில் புழுவினைப் போல்

பல முறை மேடையேற்றப்பட்ட வீதி நாடகங்கள்

1.    பெண்ணடிமை தீர்ப்போம்
2.    அதோ பாதாளம், விலகிப் போங்கள்
3.    தீயினில் தூசு படிவதில்லை
4.    பூக்களும் புழுதியும்

இவை தவிர வில்லுப்பாட்டுக்கள் எழுதப்பட்டு நாட்டின் பல பிரதேசங்களிலும் மேடையேற்றப்பட்டுள்ளன.

பாடசாலை கீதங்கள், வாழ்த்துப் பாடல்கள், நாடகப் பாடல்கள் விழாப் பாடல்கள், தன்ணுணர்ச்சிக் கவிதைகள் என பல கவிதைகள் இவரினால் ஆக்கப்பட்டுள்ளன.

சிறந்த கட்டுரையாசிரியர் என்ற புகழுக்குரிய இவர் சமூகவியல், நாட்டார் இயல் மானிடவியல், உளவியல், மெய்யியல், அரசியல், இலக்கியம் சார்ந்தவை என அனைத்துத் துறைகளிலும் தனது எழுத்தாற்றலை வெளிக்காட்டியுள்ளார்.

தான் பிறந்த மண்ணின் மாண்புகளை உலகுக்கு எடுத்துச் சொல்வதற்கு பின் நிற்காத இவர் உடப்பு பற்றிய பல ஆய்;வுக்  கட்டுரைகளை எழுதியுள்ளார் அவற்றுள் சில:

1. உடப்பு பிரதேசத்தின் கிராமிய மொழி வழக்குகள்
2. உடப்பு பிரதேசத்தின் கிராமிய தெய்வ மொழி
3. உடப்பு பிரதேசத்தின் மக்கட் பெயர்கள்
4. உடப்பு பிரதேசத்தின் மந்திர மருத்துவச் சடங்குகள்
5. உடப்பு பிரதேசத்தின் அப்பாப் பாடல்கள் – சமூகப் பின்னணி
6. உடப்பு பிரதேசத்தின் நாட்டார் நம்பிக்கைகள்.
7. உடப்பு பிரதேசத்தின் சித்திரைச் செவ்வாய் விழா
8. உடப்பு பிரதேசத்தின் அம்பாப் பாடல்கள் – பன்முகம்.

இவற்றோடு ஆசிரியர் வரலாறு, சமூகப் பிரச்சினைகள், நாட்டார் வழக்காறுகள் முதலான ஆய்வுகளுடன் புத்தளப் பிரதேச வரலாறு, வாழ்வியல் பற்றிய ஆய்வுகள் என்பவற்றையும் தற்பொழுது திரு ஸ்ரீகந்தராசா அவர்கள் மேற்கொண்டு வருகிறார்;;.

பல்துறை ஆற்றலும் திறனுமிக்க கல்வியியலாளர் ஒருவரை எமது பிரதேசம் பெற்றிருப்பதன் மூலம் பெருமை அடைந்திருக்கின்ற அதேவேளை இவரின் மூலம் இன்னும் பலவற்றையும் இச்சமூகம் எதிர்பார்த்திருக்கின்றது.

இவரின் சமூகப் பணி தொடர்ந்தும் இப்பிரதேச மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் அதற்கான வாய்ப்புக்கள் அனைத்தையும் இறைவன் அவருக்கு வழங்க வேண்டும் எனவும் பிராத்திக்கின்றோம்.


12 thoughts on “கிருஷ்ணன் ஸ்ரீகந்தராசா : ஓய்வுபெற்ற அதிபர், தமிழ் வளர்த்த கலைஞ்சர்

 1. Parthiban_M says:

  கிரிஷ்ணன் கந்தராசா வின் தொண்டு வளர என் வாழ்த்துக்கள்…

 2. ummu nidhaa says:

  என் பாட சாலை அதிபர் இவர் என்பதில் பேர் ஆனந்தம். இவரது கலை ,இலக்கியங்களுக்கு அளவே இல்லை.இவரது அழகிய கையெழுத்துக்கள் நம்மில் பல பேர் அறிந்தாரில்லை . சிலம்பின் சீற்றம் எனும் மேடை நாடகம் என்னால் மறக்க முடியாத ஒன்று.,என் சகோதரி கண்ணகியாகவும்,நான் அரச சபை பனிப் பெண்ணாகவும் நடித்து பரிசில் பெற்ற அந்த நாள்…………….
  எத்தனை மாணவர்க்கு கிடைக்கும் இந்த பாக்கியம்??????

 3. sri jeyapragash says:

  இப்பணி தொடர எனது நல்வாழ்த்துக்கள் ……….

 4. Croos S. Rajan says:

  Thank you Puttalam Online for giving due respect to one of the Puttalam educationists, Mr Sriskandarasa. I am happy that I was one of his students in a tutorial college in Puttalam when I was working there as a teacher a few years back.
  May Almighty God bless him.

 5. Dayan pathmanathan says:

  நம் பிரதேசத்தின் தலைமைத்துவம் மிக்க ஒரு உன்னதமான மனிதரை சுட்டி காட்டிய புத்தளம் ஆன்லைன் நன்றி தெரிவிக்றேன் .
  தயான்( கட்டைகாடு)
  London

 6. Jaleel JP says:

  அடையாளப்படுத்தப்பட வேண்டிய ஒரு திரு. ஸ்ரீகந்தராசா BA , இந்த இணையத்தளம் ஒரு சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் எமது பிரேதேசத்தில் வாழும் அனைத்து சமூகம்களையும் சார்ந்த கற்றவர்கள்,
  His is our assets . ஜலீல் JP (பிரோம் QATAR)

 7. இந்த நல்ல பணியில் உழைக்கும் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

 8. இப்ராஹீம் நிஹ்ரீர் says:

  வெறும் சம்பளத்துக்கு என்றில்லாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய எத்தனையோ பேர் சமூகத்தால் அடையாளம் காணப்படாமலேயே போய் விட்டனர். திரு ஸ்ரீஸ்கந்தராஜா ஒரு மிகச் சிறந்த அதிபர். அவரை நினைவு படுத்திய Puttalamonline க்கு வாழ்த்துக்கள்.

 9. அடையாளப்படுத்தப்பட வேண்டிய ஒரு பெருந்தகை திரு. ஸ்ரீகந்தராசா அவர்கள். புத்தளம் online இன் முயசிக்கு வாழ்த்துக்கள்.

 10. mohamed Fazeel says:

  இப்பணி தொடர இறைவன் துணைபுரிவானக
  நமவர்கள் வாழ வேண்டும் அவர்களை வாழ்த்த வேண்டும் புத்தளம் மண் கலை வளம் செழிக்க வாழ்த்துக்கள்.

 11. Arhab Mahmood says:

  வரவேற்கத் தக்க முயற்சி..

  இந்த இணையத்தளம் ஒரு சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் எமது பிரேதேசத்தில் வாழும் அனைத்து சமூகம்களையும் சார்ந்த கற்றவர்கள், முக்கியமான பிரபலங்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைப்பதுடன் அவர்கள் எமது பிரதேசத்துக்கு ஆற்றியுள்ள சேவைகளை பாராட்டி கெளரவிப்பது சிறப்பானவிடயமாகும்.

  இந்த நல்ல பணியில் உழைக்கும் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

  • Anver Adam (Casimi) says:

   وموقع هذا ليس لمجتمعنا الاسلامية فقط بل يشمل كل مجتمع الذي يعيش في هذه المنطقة
   ويعرض جميع المعلمين والباحثين والمشهورين وغيرههم في حقل مختلف ولله يرحم ويساعد لتواصل هذه الخدمة الطيبة
   أنور آدم (قاسمي
   ,.وزارة الداخلية بدولة قطر

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All