Puttalam Online
social

புத்தளம் வாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக விடுக்கப்படும் பகிரங்க அறிக்கை

கடந்த இருபத்தி ஓராம் திகதி இரவு கலக்கக்காரர்களினால் படுகொலை செய்யப்பட்ட புத்தளம் பொலிஸ் நிலைய அதிகாரி நவரத்ண பண்டார அவர்களின் மரணமும் அதனைத் தொடர்ந்து சில பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்தும் புத்தளம் வாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக விடுக்கப்படும் பகிரங்க அறிக்கை

முதலில், மனிதாபிமானமற்ற இந்தச் செயலை நாம் வன்மையாகக் கண்டித்தோம், இனியும் நாம் அவ்வாறே கண்டிக்கின்றோம். அதுபோல, மரணமடைந்த பொலிஸ் அதிகாரி நவரண்த பண்டார் அவர்களின் இறுதி கிரியை நடைபெற்ற தினத்தில் புத்தளம் நகரின் வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகளிலும் வெள்ளைக் கொடி ஏற்றி எமது சோகத்தை பகிரங்கமாக வெளியிட்டோம்.

மனிதாபிமானமற்ற இந்த செயலின் காரணமாக எல்லா மக்களுடனும் சகவாழ்வுடனும் நட்புறவுடனும் வாழும் இலங்கை வாழ் முஸ்லிம் பொது மக்களுக்கும் குறிப்பாக புத்தளம்வாழ் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு மிகப் பாரதூரமானதாகும். இந்த துரதிருஷ்டவசமான மரணம் புத்தளத்தில் வாழும் சமாதான விரோத கலகக்காரர் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான செயலாகும். ​இந்தக் கொலையினை கேள்விப்பட்ட புத்தளம் வாழ் முஸ்லிம்கள் கவலைக்கும் மன வேதனைக்கும் உட்பட்டனர். கொலையாளிகளை சட்டத்திடம் பிடித்து கொடுப்பதற்கு சிவில் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு உதவுமாறு புத்தளம் பெரியபள்ளிவாசலினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை புத்தளம் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொண்டனர். மரணம் சம்பவித்து ஓரிரு தினங்களில் குற்றவாளிகளை கைதுசெய்ய முடிந்தது என்பதையும் இவ்விடம் கூறிவைக்க வேண்டும். இவ்வாறான பின்னணியில் ஒரு சிலரின் பாதகச் செயலின் குற்றத்தை புத்தளம் வாழ் முஸ்லிம்கள் அனைவர் மீதும் சுமத்துவது நியாயமற்றது என்பதையும் பொறுப்புடன் கூறுகின்றோம்.

இலங்கையின் வரலாற்றில் எல்லா சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்களின் அரச விசுவாசத்திற்கு வரலாறே சாட்சியாகவுள்ளது. அதுபோல சுதந்திர போராட்டத்தின் போது முஸ்லிம் தலைவர்கள் ஆற்றிய பணி சிறப்பானது. சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுடன் சேர்ந்து தேசிய அபிவிருத்திக்காக முஸ்லிம்கள் ஆற்றிய கடமைகளுக்கான சான்றுகள் எங்கும் காணக்கூடியதாக உள்ளன. வரலாற்றின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையை கைப்பற்றும் முயற்சியில் முஸ்லிம்கள் ஈடுபட்டதில்லை. குறிப்பாக 30 வருட போரின் போது பயங்கரவாதிகளுடன் கூட்டுசேரவில்லை என்பதுடன், பயங்கரவாதிகளினால் விரட்டப்பட்டு இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அரவணைப்பளிப்பதையும் இங்கு குறிப்பிடவேணடும்.

மேலும் வருடந் தோறும் நடாத்தப்படும் பெருநாள் விளையாட்டுப் போட்டிகளைக் கூட நிறுத்திவிட்டு, எமது பெருநாள் மகிழ்ச்சியை வணக்க வழிபாடு சார்ந்த விடயங்களுடன் மட்டுப்படுத்திக் கொண்டோம்.

இவ்வாறான சகவாழ்வு வரலாற்றுக்கு உரிமை கூறும் புத்தளம்வாழ் முஸ்லிம்கள் பற்றியும், அவர்களின் பக்திக்கும் அன்புக்கும் பாத்திரமான சமய ஸ்தாபனங்கள் பள்ளிவாசல்கள் குறித்தும் ஏனைய இனத்தவரின் மனங்களில் குரோதமும் துவேசமும் தூண்டப்படும் விதத்தில் செய்திகளை பிரசுரிக்கின்றதையிட்டு எமது கடும் விசனத்தையும் எதிர்ப்பையும் மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றோம். இலங்கைவாழ் பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் விதத்திலான அடிப்படைகளற்ற செய்திகளை வெளியிடுவதிலிருந்து விடுபட்டு பொறுப்புடன் செய்திகளை வெளியிடுமாறும் அனைத்து செய்திப் பத்திரிகைகள் மற்றும் இணையத்தள சஞ்சிகை ஆசிரியர்களிடன் இம் மக்கள் ஒன்றுகூடலின் போது, பொறுப்புணர்வுடன் கேட்டுக்கொள்கின்றோம்.


6 thoughts on “புத்தளம் வாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக விடுக்கப்படும் பகிரங்க அறிக்கை

 1. Mohamed SR Nisthar says:

  அன்புள்ள புத்தளம் மகள்,

  யாம் புள்ள அத ஒருக்கா நல்ல புள்ளயாட்டம் தமுழ்ள எழுதி உட மாட்டிங்களா? யாண்டாக்கா ஆங்கிலம் வெளங்காத ஆள்க்களுங் பெரிய பள்ளி நிருவாகத்தில இரிப்பாங்கயில்யா? அதோட மத்த ஆள்க்களுக்கிட்டையுங் நெறைய ஐடியா ஈக்கும்மில்யா? அப எல்லாருக்குங் வெளங்கிற மாதிரி இரிந்தாதானே நல்லது. செயவீங்கண்டு நெனெக்கிறேன்.

 2. Puttalam mahal says:

  ப்ச்! நெருப்பு என்றால் வாய் வெந்துவிடுமா? சித்திரவதையும் பிரச்சினையும் ஒன்றாகிவிடுமா? தலைமைத்துவம் என்பது இலேசான விடயமல்ல. அது மக்களின் அங்கீகாரத்துடன் பெறப்பட வேண்டும். எப்போது மக்கள் நம்பிக்கை இழக்கின்றார்களோ அன்றே தலைமைத்துவம் பொய்த்துவிடும்.

  கலகக்காரர்கள் சரணடைய வேண்டும் என கூக்குரலிட்டவர்கள் எம்மில் எத்தனை பேர்? இந்த கைதுகளை கண்டும் காணாது இருப்பவர்கள் எத்தனை பேர்? இந்த கலகம் எத்தனை அரசியல் காய் நகர்த்தல்களுக்கு உதவியுள்ளது? சிந்தித்து செயற்பட கடமைப்பாலுள்ள நாம் செய்வது என்ன? எத்தனை கூட்டங்கள் நடத்தினோம் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க? கேள்விகள் அதிகம். விடை தருவது யார்? கடைசியில் இந்த பழமும் புளிக்குமோ? நிர்வாகம் தனக்கு முன்னாலுள்ள கடமைகளை உணரும் என நம்புகிறோம். நன்றி.

  • Mohamed Razmi says:

   சகோதரி. உங்கள் ஆதங்கம் புரிகிறது! கேள்வி கேட்பது விமர்சிப்பது இலேசான விடயம். நிர்வாகத்தில் இருப்போருக்கு, அதிலும் ஊர் விவகாரங்களில் அர்ப்பணிப்போடு பணியாற்றுவோருக்கு தான் தெரியும் அவர்கள் கஷ்டமும் நிலைமையும். எந்த ஒரு விவகாரத்திலும் ஆரம்பத்தில் இருக்கும் உற்சாகம் பின்னர் இருக்காது. புத்தளத்தின் பண்புகளில் இதுவும் ஒன்று. ஓரிருவர் தான் கடைசி வரை ஒரு சுமையை சுமப்பார்கள்.

   புத்தளத்தை பொறுத்த வரை ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம். இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம். இது தான் நிலைமை.

   பல்வேறு தரப்பினரும் அவரவர் இஷ்டத்துக்கு பெரிய பள்ளி தலைமைத்துவம் வளைந்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

   புத்தளம் சமூகம் எதிர் நோக்கும் உண்மையான சவால்கள் என்ன, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள், நம்மிடம் அதற்காகாக இருக்கும் வளங்கள் பற்றிய அரசியல், இயக்க, வர்க்க பேதங்களுக்கு அப்பற்பட்ட ஒரு மனம் திறந்த கலந்துரையாடல் தான் இப்போது அவசியம். அதுவரையில் இந்த இணையத் தளம் நிஸ்தார் சொல்வது போல புத்தளத்தில் “எல்லாமே நன்றாய் நடப்பதாய்” காட்டும் ஒன்றாகவே இருக்கும். மக்களின் ஆத்மாவாக, இதயத் துடிப்பாக இந்தத் தளம் மாற வேண்டிது காலத்தின் கட்டாயம்! தொடர்ந்தும் கேளுங்கள் புத்தளம் மகள். வாழ்த்துக்கள்!

   • Puttalam mahal says:

    My dearest brothers, thanks a lot for your supports and responses! I really appreciate them.

    I got an opportunity to meet two family members of the detainees during this weekend. The pain they go through.. can’t be explained by words. The bread winners are inside of the prison, do we care about it? Do we have any obligation to make sure at least the families are supported with their day to day lives? Some are innocents and we do understand that, but we are here without doing anything. Or it was not shared with us! It’s killing me! Why don’t we format a committee to check the welfare of these families? There are volunteers!

    The government servants were bailed out but still they are paying a lot for their cases! If we have power to bring the peace keepers into our town, what is stopping us to maintain the same peace in our town now?

    Actually you are right, we need some opened discussion to focus on the strength and weakness of ours, sorry, our town! We should include males and females of our society. You have to train and guide the young generation to lead on it. We, the population of Puttalam should understand our resources and our capacity!

    I have seen incidents where people were very keyed up and lost interest on the way of process. There were very few to work on the left over! But definitely they will get the reward from the right person on the right time! The pure hands and enthusiastic minded never need to worry about it!

 3. Mohamed SR Nisthar says:

  அன்புள்ள பெரியபள்ளி நிருவாகத்திற்கு,

  அவ்வொ சொல்றதில நிஜாயம் ஈக்கிறாப்பில ஈகிதில்யா?

 4. Puttalam mahal says:

  இது தொடர்பாக இடம் பெற்ற கைதுகள் எத்தனை? கைதானவர்கள் அனுபவித்த பிரச்சனைகள் தொடர்பான தகவல்கள் எத்தனை? இது தொடர்பாக புத்தளம் பெரிய பள்ளிவாசல் முன்னெடுத்த நடவடிக்கைகளை எம்மோடு பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும். நாம் சட்டத்தை மதிப்பவர்கள் மட்டுமல்ல! அனைவரும் மதிக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர்கள்.. இதனை வலியுறுத்த பெரிய பள்ளி நிர்வாகம் முன்வர வேண்டும் இல்லையேல் மீண்டும் வேதாளங்கள் புளியமரத்தில் ஏறிவிடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All