Puttalam Online
art-culture

முஹம்மதின் ஈத் கவிதை – நீங்க இல்லாத ஈத்

நீங்க இல்லாத  ஈத்…………….   
அலை மோதும்       நினைப்புகளிலே
மேலாடும்  புத்தளத்து பெருநாட்கள்
ஊட்டோடு  இல்லாத நாடு கடந்த
பெருநாள் கூட பழகி போச்சு
உம்மம்மா  நீ  இல்லாத  பெருநாள  நெனச்சு தான்
மனம் பூரா கனமா வலிக்குது ………

சீன வெடியும் புஷ்வானமும்
கொளுத்தி  திரிஞ்ஞ  பெருநாட்கள்
எல்லாம் நான் கடந்து பல நாளாச்சு

உன் பேரன்  எனக்கும்  வயசு
இப்ப இருபதுக்கு மேலே போச்சு

பொட்டானி முடிச்சுள்ள
ஒழிச்சு வச்சு தந்த ஒங்க   காசாள
நான் கூட பில்கேட்ஸ் தான்
அதிகாலை பெருநாள்ள……அன்று

மெளத்தாகி போன என் உம்மம்மா.
உங்க நினைப்பில்லா  ஈத் தினங்கள்
எனக்கேது   வாழ்வில்
படைச்ச ரப்பு எழுதி வச்ச
ஆயுள் முழுவதும் இனியும்  இன்ஷா அல்லாஹ்…………

உம்மம்மா
தக்கா  பள்ளி நேசரிக்கு  கை புடிச்சி
கூட்டி போவிங்க
சில தருணம் போக  மறுக்கும் என் கால்களை
நகர வைக்க
பாணா கடைச்சந்தி வாகமரத்தோட
கதை சொல்லி பாசத்தோடு
கச்சிதமாய்  நகர வைப்பிங்க …..
.
காலம் கடந்து போன வாழ்வில்
நாடு கடந்து இருக்கும்
உங்க பேரன  வாழ்த்த ………

இந்த ஈத்-  இல் ………..
நீங்களும் இல்லை
நீங்க கதை கதையாய் சொன்ன
வாக மரங் கூட
பாணா கடை சந்தில
இப்ப  இல்ல …….

எம். எச். முஹம்மத்

INTERNATIONAL ISLAMIC UNIVERSITY,

CHITTAGONG –    BANGLADESH.


3 thoughts on “முஹம்மதின் ஈத் கவிதை – நீங்க இல்லாத ஈத்

  1. Puttalam mahal says:

    புளிய மரத்தையும் வாக மரத்தையும் இழந்து நாம் பெற்றது எதுவுமில்லை. அது எமது கவனயீனம்.

    ஒன்றை பெறுவதற்காக ஒன்றை இழப்போம் எனின் அதற்கு பெயர் இழப்பல்ல இராஜதந்திரம். நம்மிடம் இல்லாத ஒன்று!

  2. Puttalam mahal says:

    வாக மரமுமில்ல, புளிய மரமுமில்ல! இன்னும் எத்தனையை இழக்க வேண்டி வருமோ? படைத்தவன் அறிவான்!

    • Zawmy Shifran says:

      எதாவது ஒன்றை பெற்றுக்கொள்ள இருப்பதை இழக்கத்தான் வேண்டும். எப்போதும் இழப்பதை மாத்திரமே யோசிக்காமல் பெறுவதையும் சிறிது யோசிப்போமா? எப்போதும் நெகடிவ் கமெண்ட் மாத்திரமே தரும் புத்தள மகளிடமிருந்து ஒரு போசிடிவன கமெண்ட் எதிர்பார்க்கும் ஒரு ஜீவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All