Puttalam Online
art-culture

கவிதை – நீங்களும் நாங்களும்… (எம்.எச். முஹம்மத்-புத்தளம்)

  இயற்கை  சொன்னது
உங்களையும் எங்களையும் மனித இனமென்று
சராசரி கருவரை வாழ்க்கையும்,
தொப்புள் கொடி அறுத்த எச்சமும்
பிறப்புரிமையாய் மிதமிறுக்கு
உங்களைப் போன்றே எங்களுக்கும்…………!

எங்கள் பிறப்போடு…..
முடியிறக்கி மொட்டைப்போட்டு
பிஞ்சு இதழ்கொண்டு முலையில்
வாய் வைத்து
சிரட்டைச்சீவி கண் ஓட்டைப்போட்டு
குளிப்பாட்டி………!

பக்குவமாய் தலைத்துவட்டி
இமைகளை சிமிட்டி அழுகையில்……….

சீலையாலே தொட்டில் கட்டி
மெட்டில்லா தாய்பாட்டோடு
மழலை வாத்தியம் கிளுகிளுப்பின்
இசையோடு  தாலாட்டும்……..

அண்ணன்   அக்கா
மாமன்      மாமி
அப்பபா    சித்தப்பா
போன்ற     ……….

சொந்த  பந்தங்களின்
சீராட்டும் பாராட்டும்
உங்கள் வாழ்கையோடு ஒன்றானதால் …
இவை எதுவும் இல்லையென்பதால்
எங்களை ஏன் அனாதை என்றீர்கள்…..?????
இவ் உலகில்

 

எம்.எச். முஹம்மத் (புத்தளம்)

சர்வதேச     இஸ்லாமிய பல்கலைக்கழகம் – சிட்டாக்கொங்
பங்களாதேஷ்


One thought on “கவிதை – நீங்களும் நாங்களும்… (எம்.எச். முஹம்மத்-புத்தளம்)

  1. Fathima Shanas says:

    சொந்த பந்தங்களின்
    சீராட்டும் பாராட்டும்
    உங்கள் வாழ்கையோடு ஒன்றானதால் …
    இவை எதுவும் இல்லையென்பதால்
    எங்களை ஏன் அனாதை என்றீர்கள்…..?????
    இவ் உலகில்…..

    மனதை தொட்டதாக அமைந்தன இவ்வரிகள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All