Puttalam Online
art-culture

கவிதை – தேசத்தின் மனிதம்… (எம்.எச். முஹம்மத்-புத்தளம்)

  • 11 November 2011
  • 674 views

தேசத்தின்   மனிதம்…

இந்த தேசத்தில்
முடிந்து போன யுத்தத்தின் வரலாறு
பேசப்படுவதை புறந்தள்ளுங்கள்
அவை ஒவ்வொரு சமூகளுங்களினதும்
படிந்துப்போன இரத்தக்கறைகளாள்
சந்ததி சந்ததியாய் மீட்டிச்செல்ல கூடும்
வங்குரோத்தையும் பகைமையுணர்வையும்
இன்னுமொரு தலைமுறைக்கு……………

தினசரிகளிள் மாத்திரம் வெறுமனே உதட்டளவில் உயிர்பிக்காதீர்கள்
பல தாசாப்தங்களாய் உங்களையும் எங்களையும் விட்டு
நெடுந்துரம் விடைபெற்றுச் சென்ற
பரஸ்பரம்,  புரிந்துணர்வு பற்றியெல்லாம்
தமிழ் சிங்கள புத்தாண்டுகளிளும்,
தினக்கலன்டரில் விடுமுறை குறிக்கப்பட்ட பெருநாட்களிளும்

பாசமிகு இலங்கையனே

கிளிநொச்சி சமரில் மணியும்
தலதா குண்டுவெடிப்பில் கீர்த்தியும்
சுக்குநூறாய் சிதறி கிடந்த செய்தி கிடைதத்த போது
தென்னனிலங்கை அம்மேயின் துடிப்பிலும்
வட இலங்கை அம்மாவின் கதறளிலும்
அழுகையிலும்,

காத்தமண் பள்ளியிலேஅப்துல்லாஹ்
சுஜித்திலே சஹித் ஆன தருணத்தில்
கிழக்கிலங்கை உம்மாட பதைப்பிலும்
………..வலியிலும்

இனவாதமும்  மொழிக்கொள்கையும் ஏது ?????
மனிதநேயம் கற்றுக்கொடுத்த
பந்த பாசம் தவிர்த்து
உங்களை  போன்ற   இவர்களுக்கும்
இவர்களை போன்ற
….எங்களுக்கும்

(இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் யாவும் கற்பனையே.)

எம். எச். முஹம்மத் (புத்தளம்)
சர்வதேச     இஸ்லாமிய பல்கலைக்கழகம் – சிட்டாக்கொங்
பங்களாதேஷ்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All