Puttalam Online
art-culture

முஹம்மதின் ஒரு கவிதை : ஏக்கம்

மஹர் தந்த உறவின் பிரிவோடு
நிழலாய் உறவாடத்தொங்கிய  வறுமையின் அரவணைப்பு
முதுமையின் படிக்கட்டை
நெருக்கி தந்த
கால ஓட்டம்…..

கலங்க வைக்க முடியாத
இவள் வாழ்க்கையில்

ஜந்து ஆறுன்னு பெத்தப்போ இல்லாத வலியொன்று
தூக்கம் இல்லாம புரளும்
இரவொன்றில் வதைக்கிறது :  இவளை

“சோத்து புட்டு செஞ்சு விற்கும் பொலப்ப செய்ய”

மாடி வீட்டுநோய்கள்  சுமந்த
அரைக்கிழட்டு கண்கள் ரெண்டும்
பதறி விழிக்கிறது.
ஆலாரம் வைச்ச  மணிக்கூடு சீராமலேயே…..

அது சரி விடிஞ்சா
சீர் செஞ்து கைபுடிச்சு கொடுக்க வேண்டிய
மூத்த மகள் வயது முப்பது ஆச்சே……


One thought on “முஹம்மதின் ஒரு கவிதை : ஏக்கம்

  1. mahmood says:

    இளம் கவிஞர் முஹம்மத்!
    உங்கள் கவி வரிகள் எம்மை மகிழ்ச்சியூட்டுகின்றன.
    தொடர்ந்தும் எழுதுங்கள்…
    எம் ஊரின் அவலங்களை பாடுங்கள்…
    நாம்படும் இன்னல்கள், துயரங்களை பதியுங்கள்
    புத்தளத்தின் முன்மாதிரிகள், பெருமைகள் நாம்புரியும் சேவைகள் மற்றும்
    எமது வரலாற்றுப் பாரம்பரியங்களை உலகரியச்செய்யுங்கள்!
    மொத்தத்தில், நீ ஒரு புத்தளம் கவிஞனாக…
    எம் சமூகத்தின் விடியலுக்காக…
    உன் கவிவரிகளை நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All