Puttalam Online
editorial

புத்தளம் ஒன்லைனுக்கு உற்சாக இரத்தம் பாய்ச்ச முன்வாருங்கள் !

அல்லாஹ்வின் உயர் நாமம் போற்றி…

“புத்தளம் ஒன்லைன்” றபீஉல் அவ்வல் எனும் முதல் வசந்த காலத்தில் முதலாவது அகவையை நிறைவு செய்து நிற்கின்ற இளம் தளிர்.

வளரும் போதே சுழன்றடிக்கும் சூறாவளியை எதிர்கொண்டது! சட்ட ரீதியற்ற தேவையற்ற குழந்தை என விமர்சனக் கணைகள் சரமாரியாக வந்தபோது சாணக்கியம் என்னும் கேடயம் தரித்து தன்னைத் தானே தற்காத்துக்கொண்டது. இதனை வேலி கட்டி வளர்த்தோரை நன்றி உணர்வுடன் நினைவு கூறிகின்றோம்!

புத்தளம் ஒன்லைன் தனக்கென ஒரு தனித்துவமான பாதை அமைத்து பயணிக்கின்றது. இதன் வாசகர் வட்டமும் மெல்ல மெல்ல விசாலித்துச் செல்கின்றது. வெறும் தகவல்களை பரிவர்த்தணை செய்கின்ற ஊடகச் சாதனமாகவன்றி புத்தளம் வாழ் மக்களின் கல்வி, சமய, சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டுப் பெறுமானத்தையும் கலாசார விழுமியங்களையும் பாதுகாக்கின்ற அரணாகவும், மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்க சிந்தனைக்கு களம் அமைத்துக் கொடுத்து பொதுசன அபிப்பிராயத்தைத் திரட்டி சமூக தளத்தில் ஆரோக்கியமான மாற்றத்திற்கு வித்திடுகின்ற ஒரு சமூக வலைப் பின்னலாக புத்தளம் ஒன்லைன் பரிமாணம் கண்டுள்ளது.

இது தொடர்ந்தும் தளிராகவே இருக்க முடியாதல்லவா?

ஆழ வேர்பதித்து வானளாவ கிளை பரப்பி நிற்கும் விருட்சமாக வளர்ந்தோங்க உரப்பசளை இடுகின்ற தார்மிக பொறுப்பை அறிவாளுமைகள் ஏற்று செயற்பட வேண்டுமல்லவா? நீங்கள் புத்தளம் ஒன்லைனுக்கு உற்சாக இரத்தம் பாய்ச்ச வேண்டும். நோய் தொற்று ஏற்படா வண்ணம் தடுப்பூசி ஏற்ற வேண்டும். இளம் தளிர் ஒரு வருட நிறைவின் பின்னர் முகம் பார்த்து சிரிக்கின்றது. அது வேர்விட்ட பூமியை மீள்பார்வைக்கு உட்படுத்துவோம்! அதன் உச்சிக் கிளையை வின்னை முட்டச் செய்வோம்!!

எழுதுங்கள் விசன விமர்சனங்களையல்ல! ஆக்கபூர்வ விமர்சனங்களை! உங்கள் ஆலோசனைகள் எங்கள் செவிப்பறைகளில் இனிமையான சங்கீதமாகவே ஒலிக்கும். முதிர்ச்சி கண்ட விரல்களும் பேனா பிடிக்கலாம்! பிஞ்சு விரல்களும் பேனா பிடிக்கலாம்!

 உங்கள் படைப்பாக்கங்களின் வர்ஷிப்புக்களால் ஒன்லைனின் பக்கங்கள் செழுமை காணும் இன்ஷா அல்லாஹ்!

புத்தளம் ஒன்லைன்  இணையக் குழு

16.02.2012


2 thoughts on “புத்தளம் ஒன்லைனுக்கு உற்சாக இரத்தம் பாய்ச்ச முன்வாருங்கள் !

  1. hiflur says:

    அல்ஹம்துல்லிஅஹ் , இதன் வளர்சிக்கு உருதுதுனையாக இருந்த எல்லோருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன் . மேலும் இதன் வளர்சிக்கு அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன் .

  2. isham says:

    இது எமது ஊரின் வலைத்தளம், எம்மை பற்றி எடுத்து சொல்ல எட்டுத்திக்கும் பயணிக்க ஆரம்பிக்கப்பட்டு பல நாடுகளை சென்று ஒரு வருடத்தை பூர்த்தி செய்து இருக்கிறது. உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இதனை பெற்ற எடுத்த நல்லுங்கள் அனைத்துக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. நீ குழந்தையாக இருந்தாலும் பயப்படாத சிசுவாக வளர்ந்து வரவேண்டும். கடத்தும் கொள்ளையர்களை உனக்கு தெரியும், கப்பம் கேட்கும் காடையர்களையும் உனக்கு தெரியும் , மிரட்டும் அடியார்களை உனக்கு தெரியும் அது மட்டும் அல்லாது அரவணைக்கும் கைகளையும் உனக்கு தெரியும். நிச்சயம் காலம் செல்ல செல்ல இன்னும் படித்துக்கொல்வாய் , அதன் பின் சாதிப்போம் சாதனைகளை. உன்னை எப்போதும் தூரம் இருந்து அணைத்துக்கொண்டிருக்கும் உனது கூட்டாளி இஷாம் மரைக்கார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All