Puttalam Online

header

header

gggg

gggg
social

ஒரு சமூக ஊடகம் : கடந்து வந்த பாதை…

சமூக மாற்றம் என்பது ஒரே இரவில் நடந்து முடிந்துவிடுவதல்ல. சமூக மாற்றத்தை நோக்கிய பயணமும் அப்படி இலகுவானதல்ல.. அது கற்களும் முற்களும் நிறைந்த கரடுமுரடான பாதை.. அதில் பயணிப்பவர்கள் சமூகத்திற்காக எதையாவது சாதிக்க வேண்டும் என தமக்குள்ள கங்கணம் கட்டிக்கொண்டவர்களே.

அவர்கள் சமூகத்தில் ஒரு சிலரே இருப்பர்.இதுவே நியதி, சுன்னாவும் கூட. எனினும் இம்மாற்றத்திற்கு பல்துறை சார்ந்தவர்களின் கூட்டுப் பங்களிப்பு இன்றியமையாததது. இந்த வகையில் சமூக மாற்றத்தில் ஊடகத்துறையின் பங்களிப்பு அல்லது தேவை அனைத்திலும் முதன்மையானது எனக்குறிப்பிடலாம்.

சமூக மாற்றத்தில் ஊடகத் துறையின் பங்களிப்பு பற்றி இஸ்லாமிய அறிஞ்சர் அஷ்- ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்;

“உலக அரங்கிலே பல வேகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற ஒரு கால கட்டத்தில் நானும் நீங்களும் இருக்கிறரோம். குறிப்பாக அரபு இஸ்லாமிய உலகிலே எழுச்சி, புரட்சி, கிளர்ச்சி என்ற பெயர்களில் பாரிய பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன… இந்த மாற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும்தான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்”.

எனவேதான் இன்று இந்த மாற்றங்களை ‘மீடியாப் புரட்சி’ என்று வர்ணிக்கிறார்கள் சிலர் ‘பேஸ்புக் புரட்சி’ என்று வர்ணிக்கிறார்கள் மற்றும் சிலர் ‘அல்ஜஸீரா புரட்சி’ என்று வர்ணிக்கிறார்கள். சர்ச்சைக்குரிய ‘விக்கிலீக்ஸ்’ உரிமையாளர் ஜூலியன் அஸான்ஞ் “நான்தான் இந்த மாற்றங்களுக்கு வழி கோலியவன்’’ என்று பகிரங்கமாக உரிமை கோரியிருக்கிறார். இந்த மாற்றங்களின் சாதக, பாதகங்கள் எப்படி இருந்தாலும் உலகில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிக்குப் பின்னாலும் இந்த ஊடக வியலாளர்கள் இருக்கிறார்கள் ஊடகங்கள் இருக்கின்றன என்பது உண்மை.

இப்பின்னணியில், எமது பிரதேசமும் உலகில் ஏற்பட்டுவரும் எழுச்சி, மறுமலர்ச்சி, சமூக மாற்றம்.. என்ற விடயங்களில் மிக விரைவாக இரண்டறக் கலக்க வேண்டியுள்ளது. கல்வி, சுகாதாரம், சமூக சமய, பொருளாதார, அரசியல் என்ற அனைத்து துறைகளும் உடனடியான மாற்றத்தை வேண்டி நிற்கின்றன. இம்மாற்றத்தின் தேவை பல மட்டங்களிலும் கலந்துரையாடப்பட வேண்டியுள்ளது. எமது பிரச்சனைகள் புத்தளம் பிரதேசம் என்ற எல்லையை தாண்டி தேசிய மயப்படுத்தப்படுவதுடன் தேவையான பொது சர்வேதேச மயப்படுத்தப்பட வேண்டியுமுள்ளது.

எமது சமூகத்தில் காணப்படும் அவலங்கள், அழுகைகள் யாவும் வெளிக்கொனரப்படவேண்டியுள்ளது. எரிந்து கொண்டிருக்கும் சமூகக் கொடுமைகள் சுரண்டல், ஏமாற்று, கப்பம் போன்ற அக்கிரமங்கள் கலையப்படுவதுடன் இது போன்ற சமூக அநீதிகளுக்கெதிரான குரல் அவ்வப்போது ஓங்கி ஒலிக்க வேண்டியுள்ளது.

இவைதவிர எமது பிரதேசத்திற்கே சொந்தமான பாராட்டப்பட வேண்டிய சிறப்பம்சங்கள் பல இருப்பது போன்றே, எமது பிரதேசத்திகேயுரிய தீர்வு காணப்படவேண்டிய பல பிரட்சினைகளும் காணப் படுகின்றன. அறுநூறு வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியத்தையும், பதினான்காம் நூற்றாண்டில் இப்னு பதுதா கரை இறங்கியது முதல் சர்வதேச தொடர்புகளையும் தன்னகத்தே கொண்ட எமது பிரதேசத்தைப் பற்றிய பதிவுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. இருபது வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட ஈமானிய உறவுகளை அரவணைத்து, இதுவரை வரையறுக்கப்பட்ட வளங்களைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் இன்று நாம் எதிர் நோக்கும் சமூக அரசியல் பிரட்சினைகள் எமக்கே உரியதாகும். இரண்டு சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு சாத்தியப்பாட்டு தீர்வுகளை மிக விரிவாக ஆராய்ந்து, விடயத்தை தேசிய மற்றும் சர்வதேசியமயப் படுத்தல் என்பது எமக்கென்று, எமது பிரதேசத்துக்கென்று ஒரு ஊடகம் இல்லாத நிலையில் சாத்தியமற்றதாகவே தொடர்ந்தும் இருந்துவந்தது.

ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் தொடர்ந்த பள்ளிவாயல் படிக்கட்டுக் கலந்துரையாடல்கள், ஜும்மா தொழுகையின் பின்னர் மரநிழலில் கூடிநின்று -வயிற்றுப் பசியையும் மறந்து- சமூக விடியலுக்காக இடப்பட்ட திட்டங்கள் புத்தளத்துக்கென ஒரு இணையத்தளம் வேண்டும் என்ற கருத்தை எமது உள்ளத்தில் ஆழமாக வேரூன்டச் செய்தது. திட்டங்கள் பாதியில் இடைநடுவில் நின்று போனாலும் தொடர்ந்த முயற்சிகள் பலனளிக்காமலில்லை.புத்தளம் டுடே என்ற பெயரில் சஞ்சிகை ஒன்றை கொண்டுவருவதற்காக சில சகோதரர்கள் முயற்சி செய்தனர். அல்லாஹ் அவர்களுக்கு கூலியை வழங்க வேண்டும். இன்னும் வெளிவந்துக்கொண்டிருக்கும் புத்தெழில் செய்திப்பத்திரிகை காத்திரமான ஒரு சேவையை வழங்கி வருவது இங்கு குறிப்பிட தக்கதாகும். அதே போன்று எமது பிரதேசத்திட்காக பிரத்தியேகமாக நடத்தப்பட்ட அன்- நூர் போன்ற வானொலி சேவைகள் மற்றும் அஸ் – ஷபா தொலைகாட்சி சேவை என்பனவும் எமது பிரதேசம் ஊடகத்துறையில் படிப்படியான வளர்ச்சியை கண்டுவந்துள்ளமைக்கு சிறந்த உதாரணங்களாகும்.

இவ்வாறன ஒரு முயற்சியே புத்தளத்துக்கென சமூக இணையத் தளமொன்றின் அவசியம் உணரப்பட்டு, றாபிதா – நளீமியா பழைய மாணவர் அமைப்பின் புத்தளம் கிளை புத்தளத்திலுள்ள இத்துறையில் ஆர்வமிக்க பலரையும் இணைத்துக்கொண்டு puttalam.com என்ற பெயரில் இணையத் தளமொன்றினை உருவாக்குவதற்கு பல முயற்சிகளை எடுத்தது. இதன் முதலாவது கூட்டம் 02.01.2004 திகதி இஸ்லாமிய முன்னணி இயக்கம் (IFM) இல் இடம்பெற்றறது. தொடர்ந்து பல அமர்வுகள் சன்ஹிர் ஆசிரியர் வீட்டிலும், இன்னும் சில சந்திப்புகள் இப்தார் நிகழ்வுகளாகவும் இடம்பெற்றன. இக்கூட்டங்களில்; ஆசிரியர் எம். எச். எம். நதீர் (ராபிதா தலைவர்), சட்டத்தரணி பஸ்லூர் ரஹ்மான் (ராபிதா செயலாளர்), ஆசிரியர் இசட்.ஏ.எம். சன்ஹிர், எச்.அஜ்மல், இசட்.ஏ.எம்.ரஸ்மி, வை.ஐ.எம்.ஹனீஸ், எஸ்.ஆர்.எம்.முஹ்சி, ஏ.ஆர்.எம்.பர்சான், ஐ.எம்.ருஷ்தி, எஸ்.ஏ.சி மரிக்கார் மற்றும் ஆசிரியர் எஸ் .ஐ .எல் முசம்மில் ஆகியோர் கலந்துகொண்டனர்.          இம்முயற்சி கடைசிவரை சென்று ஒருதொகை பணத்தை செலவிட்டு கொழுபிலுள்ள Real IT Providers நிறுவனத்திடமிருந்து Website Proposal ஒன்றினையும் பெற்றதன் பின்னர் ஏதோ சில காரணங்களினால் (இறைவனின் நாட்டம்) கைவிடப்பட்டது.

இரண்டாயிரத்திப் பத்தின் பின்னர் எமது பிரதேசம் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகவேகமாக முன்னேறியதுடன் எமது இளை ஞர்களில் பெரும்பாலானவர்கள் சமூக இணையத்தளங்களையும், பேஸ்புக் போன்ற வற்றையும் தாராளமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். புத்தளத்து மக்களின் வாழ்வியல் ஒழுங்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.இடம்பெயர்ந்த சகோதரர்களுக்கும் புத்தளம் பூர்வீக மக்களுக்குமிடையில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டதுடன், அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலைகள் அவற்றை கூர்மைப்படுத்தின. ராசிக் ஜி எஸ் படுகொலை சம்பவம் இந்நிலைமைக்கு வித்தியாசமான புதிய பரிணாமம் ஒன்ரைக்கொடுத்தது. சமூகம் மீள முடியாத பல்வேறு சிக்கல்களுக்குள் சிக்குண்டிருந்தது.

இப்போதும் அதே சகோதரர்கள் சிந்தித்தார்கள். சமூகத்தை சரியான பாதையில் இட்டுச்செல்ல வேண்டுமென்றால் இவ்வாறன ஒரு இணையத் தளம் கட்டாயம் தேவை என்பதை உணர்ந்து செயற்பட ஆரம்பித்தனர். முடியுமான வளங்களைக்கொண்டு பல மணி நேரங்களை தியாகம் செய்து இந்த இணையத்தளத்தை Puttalam Online என்ற பெயரில் ஆரம்பித்தனர்.

சமூகத்தில் எல்லா விடயங்களுக்கும் தலைமைத்துவத்தை வழங்கும் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் இணக்கப்பாட்டுடன், இந்த சமூகத்தளம் பெரியபள்ளியை தலைமையமாகக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. பெரிய பள்ளி நிர்வாக சபை தலைவரையும் புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவரையும் போஷகர்களாகக் கொண்டு உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் பல்துறை சார்ந்தவர்களையும் கொண்ட ஒரு குழு இதனை செயட்படுத்துகின்றது. இச் சமூகத்தளம் 2011.02.16 திகதி (மீலாத் தினம்) பெரிய பள்ளியில் வைத்து முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்விமான்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்வில் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்ஹாஜ் எஸ் ஆர் எம் முசம்மில் மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ் சேய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் என்பவர்களினால்    உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அன்றுமுதல் ஒருவருட காலத்திற்குள் இத்தளம் பல பாரிய சமூகப் பணிகளை காத்திரமாக மேட்கொண்டுள்ளது. ராசிக் ஜி எஸ் படுகொலை செய்யப்பட்டமைக்கெதிராக கடைசிவரை குரல் கொடுத்ததுடன்,புனித ரமழானில் புத்தளத்தில் இடம் பெற்ற கிரீஸ் மனிதன் விவகாரமும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட போது நிலவிய பதட்ட நிலமைகளிளின் போதும் நடுநிலமையான செய்திகளை வழங்கியதுடன் அவ்வப்போது மக்களுக்கு தேவையான வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது.

கடல்கடந்து வாழும் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் எமது பிரதேச செய்திகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளதுடன் மரண அறிவித்தல் பகுதியின் மூலம் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் புத்தளத்தில் இடம்பெறும் மரணங்களை உடனுக்குடன் அறிந்து பயன்பெற்றுள்ளனர். பாடசாலைகள் தோறும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்விணயத்தலத் திற்கு பாடசாலை நிகழ்வுகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. சிறப்புக் கட்டுரைகள், சமூக விவகாரம், ஆக்கங்கள் என்பவற்றை வெளிநாடுகளிலிருந்தும் எமது சகோதர சகோதரிகள் அனுப்பிவைக்கின்றனர்.

இதுவரைக்கும் 271473 பேரினால் தரிசிக்கப்பட்டுள்ள இத்தளத்தின் வாசகர்கள் இலங்கையினை (43.9%) விட வெளிநாடுகளிலேயே அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக புத்தளம் ஒன்லைன் வாசகர்களில் 31 வீதமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐக்கிய இராட்சியத்திலும் இருக்கின்றனர். புத்தளம் ஒன்லைன் ஒருவருட சாதனைப் படைப்பதட்கு காலாக அமைந்தவர்கள் அதன் வாசகர்களே. மேலும் இதற்கு உறுதுணையாக நின்று கட்டுரைகளையும் படைப்புக்களையும் அனுப்பிவைத்தவர்களை நாம் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

மேலும், இவ்விணயக் குழுவுக்கு இருபத்தி நான்கு மணிநேரமும் உறுதுணையாக நின்ற சகோதரர் ருஷ்தி பாராட்டப்பட வேண்டியவர். இப்பணிக்காக அவர் செலவிட்ட காலம் அனைத்தயும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவருக்கு நிறைவான நன்மையை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம். அதேபோன்று புத்தளத்துக்கென ஒரு இணையத்தளம் அவசியம் என ஆரம்பத்திலிருந்து செயற்பட்ட தற்பொழுது ஐக்கிய இராட்சியதிட்கு உயர்கல்விக்காக சென்றுள்ள எமது சகோதரர் ஒருவர் புத்தளம் ஒன்லைநின்முதலாவது பிறந்த தின பரிசாக ரூபா 12,000/- இனை அனுப்பி வைத்துள்ளமையினை நாம் இவ்விடத்தில் குறிப்பிடாமல் இருக்கமுடியாது.

இறுதியாக சமூக மாற்றத்தை நோக்கிய இந்த நீண்ட நெடுகிய பயணத்தில் இன்னும் பல பத்து வருடங்கள் எம்முடன் கைகோர்த்துக் கொள்ள வருமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மத் அவர்கள் ஓர் ஆழமான கருத்தைச் சொல்லியிருந்தார்.

“யாருடைய கரங்களில் கப்பல் படை இருந்ததோ அவர்கள்தான் 19ஆம் நூற் றாண்டில் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள் விமானப்படை வைத்திருந்தவர்கள் 20ஆம் நூற்றாண்டின் பலசாலிகளாக திகழ்ந்தார்கள். யாரிடம் ஊடக பலம் இருக்கிறதோ அவர்கள்தான் 21 ஆம் நூற்றாண்டின் சக்தியாக இருப்பார்கள்.”


3 thoughts on “ஒரு சமூக ஊடகம் : கடந்து வந்த பாதை…

 1. hiflur says:

  அல்ஹம்துல்லிஅஹ் , இதன் வளர்சிக்கு உருதுதுனையாக இருந்த எல்லோருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன் . மேலும் இதன் வளர்சிக்கு அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்

 2. Mohamed SR Nisthar says:

  ( Dear poets and readers, please forgive me for any mistake in style and contents of my attempted poem)

  கல் என்று சொன்ன நம் வேதம்
  கொல் என்று சொல்வதாய் எண்ணி
  கையில் வாளும் குண்டுமாய் இளையவர் அலைய,

  உசுப்பேறி, உருவேற்றி சொர்க்கத்தில் கன்னியர் பலர்
  காத்திருப்பதாய் கதை கூறி உயிரை தட்கொடையாய்
  வழங்க உரமேற்றி வலுவேற்றும் மஸ்ஜீது என்று உலகம்
  அலர,

  இது உண்மையோ, பொய்யோ ஏன் இந்த பழி
  நம்மீதென்று சிந்தை கலங்கி செய்வதறியாது மக்கள் தவிக்க,
  சற்று பொறுங்கள் அடுத்த அடி இங்கே உங்களுக்குதான்
  என பத்திரிகைகள் பல பயமுறுத்த,

  சமூகப் பணியாளன் கொலை, நகர் காவலன் கொலை,
  ஊருக்குள்ளே கொள்ளை, போதைபொருள் பாவணை,
  அதிகாரத்துக்காய் அடிதடி, அற்ப ஆசைக்கய் ஊர் சேவை,
  அதற்காய் சேறடிக்கும் துண்டுப்பிரசுர சேவை
  என தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரனாய் மாற
  வேட்டை மிருகங்களாய் நம்மூர் மக்கள் விழி பிதுங்கி
  மெளமாய் அழ,

  சகோதரன் செய்தாலும் கொலை, சகோதர இனத்தவனை
  நம் சகோதரன் கொன்றாலும் கொலை என திராணியுடன்
  எழுந்து முழக்கமிட்டு இனத்துகுள்ளே கொலை பல தடுத்து
  இனங்களுக்கிடையிலும் அதையே செய்து, கோவக்காரனிடமே
  பெருநாள் தொழுகைக்கு பாதுகாப்பும் பெற்று நீதியாய்,
  நியாமாய், நாகரீகமாய் காரியமாற்ற கற்றுக் கொடுத்தது ஒரு மஸ்ஜீத்.

  கொல்வதல்ல நம் வேதம் கற்பதே அது சொல்லும் மார்க்கம்
  கற்றதை கற்பிப்பதும், கல்லாததை கற்பதும், கற்றதை கடமையாய்
  செய்வதும் கட்டாயம். இதற்கு இந்த நூற்றாண்டில் இணையம் ஒரு மார்கம்
  என சொல்லியதும் ஒரு மஸ்ஜீத்.

  இனியென்ன தடுமாற்றம் முட்டி மோதட்டும் உங்கள் எண்ணங்கள் இங்கே
  கவியாய், கட்டுரையாய், கதையாய், பின்னூட்டமாய் பின்னிப்பிணையட்டும்
  உங்கள் கருத்துக்கள், அத்தனையும் சமூக மாற்றத்துக்காய் அமையட்டும்.

  சமூக உடலின் மையத்துள் ஊடுருவிப்பாருங்கள், அங்கே பளுதாகிப்
  போன பாகங்களை எடுத்து வெளியே எறியுங்கள்.
  புழுபிடித்த புண்ணுக்கு ஒத்தடம் போடாதீர்கள்.
  இத்தளத்தில் அதற்கு அறுவை சிகிச்சை செய்யுங்கள்.
  புது ரத்தம் பாய்ச்சுங்கள்.

  எத்தளம் போனாலும் புத்தளம் போகாதீர் என்றார். புத்தளம் புகுவீர்
  புத்துணர்வு பெறுவீர், அத்தளத்தார் அறிவுடையார், அன்புடையார், அநீதி
  கண்டு வெகுண்டெழுவார். அணைத்துக் கொள்ளுங்கள் அவர்களை
  இணைந்த கரத்தோடு இந்த இணையத்தளத்தையும் இயங்கவையுங்கள்
  பல்லாண்டு.

  நன்றி.

  முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்.

 3. isham says:

  அஸ்ஸலாமு அழைக்கும்,

  உருவாக்கிய குழுவையும் இங்கே போட்டு இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் நண்பர்களையும் தான் பாராட்ட வேண்டும்.

  அத்தனை அத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் தங்களுடைய வேலைகளையெல்லாம் ஒதுக்கு வைத்துவிட்டு இப்படி ஒரு வலைத்தளம் வேண்டும் என்று பல வருடங்கள் செலவழித்து ஏதோ ஒருவிதமாக அதனை முடிவுக்கு கொண்டு வந்து புத்தளம் மக்களுக்காக புத்தள மக்கள் முன்னிலையில் இதை ஆரம்பிப்போம் என நினைத்து பலருக்கு அழைப்பு விடுத்த காத்திருந்த போது. இவர்களுக்கு ஊக்கம் அழிக்க இதற்காக செலவழித்த காலங்கள் வீணாகவில்லை என உறுதி செய்ய இங்கே வந்து தங்கள் பங்களிப்பை கொடுத்த னைவருக்கும் நன்றிகள்.

  நீ பயணிக்கும் பாதை இன்னும் இருக்கிறது. பயப்பட வேண்டாம் 19ஆம் நூற்றாண்டில் கப்பல் படையில் தான் திறமை சாலிகள் இருந்தார்கள், 20 ஆம் நூற்றாண்டில் விமானப்படையில் புத்திசாலிகள் இருந்தார்கள். ஆனால் இன்று எம்மிடத்தில் ஊடகத்துறை மட்டும் அல்ல அந்த துறைக்குள் இருக்கும் நபர்களுக்குள் புத்திசாலித்தனம் கொண்டவர்கள் , திறைமைசாலிகள், வீரர்கள் , தியாகிகள், போராட்டக்காரர்கள் , புரட்சி வீரர்கள் என பல நண்பர்கள் இருக்கிறார்கள். அதற்கும் மேலாய் உண்மை வெல்ல வேண்டும் என்பதற்காய் வல்ல நாயன் அல்லாஹ்வும் நிச்சயம் எமக்கு உதவி செய்வான்.

  நன்றி ! வஸ்ஸலாம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
ஒன்லைன் வணிகம்View All
 • RIVERSIDE CAMP

  a day with nature

  Print PDF Share the post "RIVERSIDE CAMP" FacebookTwitterGoogle+Pinterest

  9 April 2015
 • House for Rent

  House-for-rent

  Print PDFcall now 0789 706899 Spill Road   Near    Al Abbaya Share the post "House for Rent" Face...

  25 March 2015
 • Well-equipped Saloon for Rent in Masjid Road, Puttalam

  IMG-20150310-WA0003

  Print PDFWell-equipped Saloon in Masjid Road, Puttalam available for Rent or Lease. Employment oppor...

  16 March 2015
 • House for Sale at Colombo Road, Thillayadiya

  Photo0190

  Print PDF Contact Detail :                 0775668104  Location:                 ...

  10 March 2015
 • LED head Light 

  hx-t6_bright_cree_xm-l_t6_led_headlight_01

  Print PDFOutput bright can come to max 1800-2000 lumens [lm] Internal wiring applies the high effici...

  1 March 2015
 • House For Sale

  IMG-20150225-WA0012

  Print PDF No.16/6,  Lane no 6  , 5th cross Street , Puttalam Rs. 25 Lakhs 075 575 62 30 Share the ...

  26 February 2015
சுவடிக்கூடம்View All
Radio licence (5)
20150402_074733
20150328_091133
20150328_085607
20150328_091400
20150328_092204
zahira primary puttalam
puttalam meelad
sabir engineer 1