PuttalamOnline

முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார் அவர்களின் ஒரு கவிதை

Dear poets and readers, please forgive me for any mistake in style and contents of my attempted poem – Mohamed S. R. Nisthar

கல் என்று சொன்ன நம் வேதம்
கொல் என்று சொல்வதாய் எண்ணி
கையில் வாளும் குண்டுமாய் இளையவர் அலைய,

உசுப்பேறி, உருவேற்றி சொர்க்கத்தில் கன்னியர் பலர்
காத்திருப்பதாய் கதை கூறி உயிரை தட்கொடையாய்
வழங்க உரமேற்றி வலுவேற்றும் மஸ்ஜீது என்று உலகம்
அலர,

இது உண்மையோ, பொய்யோ ஏன் இந்த பழி
நம்மீதென்று சிந்தை கலங்கி செய்வதறியாது மக்கள் தவிக்க,
சற்று பொறுங்கள் அடுத்த அடி இங்கே உங்களுக்குதான்
என பத்திரிகைகள் பல பயமுறுத்த,

சமூகப் பணியாளன் கொலை, நகர் காவலன் கொலை,
ஊருக்குள்ளே கொள்ளை, போதைபொருள் பாவணை,
அதிகாரத்துக்காய் அடிதடி, அற்ப ஆசைக்கய் ஊர் சேவை,
அதற்காய் சேறடிக்கும் துண்டுப்பிரசுர சேவை
என தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரனாய் மாற
வேட்டை மிருகங்களாய் நம்மூர் மக்கள் விழி பிதுங்கி
மெளமாய் அழ,

சகோதரன் செய்தாலும் கொலை, சகோதர இனத்தவனை
நம் சகோதரன் கொன்றாலும் கொலை என திராணியுடன்
எழுந்து முழக்கமிட்டு இனத்துகுள்ளே கொலை பல தடுத்து
இனங்களுக்கிடையிலும் அதையே செய்து, கோவக்காரனிடமே
பெருநாள் தொழுகைக்கு பாதுகாப்பும் பெற்று நீதியாய்,
நியாமாய், நாகரீகமாய் காரியமாற்ற கற்றுக் கொடுத்தது ஒரு மஸ்ஜீத்.

கொல்வதல்ல நம் வேதம் கற்பதே அது சொல்லும் மார்க்கம்
கற்றதை கற்பிப்பதும், கல்லாததை கற்பதும், கற்றதை கடமையாய்
செய்வதும் கட்டாயம். இதற்கு இந்த நூற்றாண்டில் இணையம் ஒரு மார்கம்
என சொல்லியதும் ஒரு மஸ்ஜீத்.

இனியென்ன தடுமாற்றம் முட்டி மோதட்டும் உங்கள் எண்ணங்கள் இங்கே
கவியாய், கட்டுரையாய், கதையாய், பின்னூட்டமாய் பின்னிப்பிணையட்டும்
உங்கள் கருத்துக்கள், அத்தனையும் சமூக மாற்றத்துக்காய் அமையட்டும்.

சமூக உடலின் மையத்துள் ஊடுருவிப்பாருங்கள், அங்கே பளுதாகிப்
போன பாகங்களை எடுத்து வெளியே எறியுங்கள்.
புழுபிடித்த புண்ணுக்கு ஒத்தடம் போடாதீர்கள்.
இத்தளத்தில் அதற்கு அறுவை சிகிச்சை செய்யுங்கள்.
புது ரத்தம் பாய்ச்சுங்கள்.

எத்தளம் போனாலும் புத்தளம் போகாதீர் என்றார். புத்தளம் புகுவீர்
புத்துணர்வு பெறுவீர், அத்தளத்தார் அறிவுடையார், அன்புடையார், அநீதி
கண்டு வெகுண்டெழுவார். அணைத்துக் கொள்ளுங்கள் அவர்களை
இணைந்த கரத்தோடு இந்த இணையத்தளத்தையும் இயங்கவையுங்கள்
பல்லாண்டு.

நன்றி.

முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்.

2 Comments

  1. புத்தளம் பெரிய பள்ளியை பற்றிய மிக அழகான ஒரு கவிதை. பாராட்டுகள் சகோ. நிஸ்தார் அவர்களே!

  2. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய இடம்
    அறியப்பட்டுள்ளது
    ஆனால் அந்த அறுவை சிகிச்சை
    அப்படி விடப்பட்டால் பள்ளமாகிவிடும்
    ஆகவே அதனை பல பாகம் கொண்டு மூடப்பட வேண்டும், மூடுவதற்கான பாகங்கள் தேடப்படுகின்றன. நிச்சயம் மூடி முடிப்போம் இளம் சமுதாயமாய்

Leave a Reply

Required fields are marked *.

CAPTCHA Image

*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)