PuttalamOnline

குடிசன மதிப்பீட்டுப் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

| 0 comments

(அபூ முஸ்னா)

இவ்வருடம் இடம்பெறவுள்ள குடிசன மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளன. சுமார் 30 வருடங்களின் பின்னர் இவ்வருடம் நாடு முழுவதும் இந்த கணக்கெடுப்பு இடம்பெறுகின்து.

இலங்கையில் பத்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த குடிசனக் கணக்கெடுப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. 1981ம் ஆண்டு நாடு முழுவதும் இந்தக் கணக்கெடுப்பு இடம்பெற்றதுடன், நாட்டில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக 1991ம் ஆண்டு இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் இடம்பெறவில்லை.

எனினும் 2001ம் ஆண்டு வடக்கு கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது. அதில் நாட்டில் மொத்த குடிசன மதப்பீட்டினைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இந்நிலையிலேயே இம்முறை இந்தக் கணக்கெடுப்பு பணிகள் வடகிழக்கு உட்பட நாடு முழுவதிலும் மன்னெடுக்கப்படுகின்றது.

நாளை ஆரம்பமாகும் கணக்கெடுப்பு பணிகள் அடுத்த மாதம் 21ம் திகதிவரை இடமபெறும். இந்தப் பணிகளுக்காக ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுளுக்கும் கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு முழுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே வீடுகளுக்கு நாளை முதல் வருகை தரும் கணக்கெடுக்கும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு சகல வீட்டு உரிமையாளர்களும் கேட்கப்பட்டுள்ளனர். அவர்கள் கேட்கும் விபரங்களை வழங்கி நாட்டினதும், கிராமங்களினதும் அபிவிருத்திக்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இது ஒரு தேசிய வேலைத்திட்டம் என்பதை ஒவ்வொருவரும் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என கேட்கப்படுகின்றனர்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)