(SLJI Puttalam Branch Media Unit)
உலகில் ஒரு பக்கம், பல சித்தாந்தங்கள் பெண்ணை பிணிகள் என்று கருதி அவர்களின் உரிமையை மீறி, அவர்களை அடிமைப்படுத்தும் போது, மறுபுறம் பெண்ணியம், பெண் விடுதலை பற்றி சர்வதேசமும் குறிப்பாக மேற்கும் பேசிக்கொண்டிருக்கின்றன. இதனால் பெண்கள் வரம்பு மீறி சென்றிருக்கிறார்கள். இதன் விளைவு விபச்சாரம், பெண்-பெண் தகாத உறவுகள் போன்ற சமூக சீர்கேடுகள் உருவாகி இருக்கின்றன. இப்பிடிக்குள் சிக்கிய முஸ்லிம்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கி-றார்கள்.
பெண்களின் கல்வி பற்றிய தீர்மானங்களில் ஆண்களுக்கு நிகராக அல்லது அவர்களை விட மேலானவர்களாக தம்மை நினைத்துக்கொண்டு, கற்புக்கு பாதுகாப்பில்லாத நிலையிலும் கல்வியை தொடர விளைந்திருப்பது மேற்கத்தேய பிடிக்குள் சிக்கி இருப்பதன் விளைவே. பெண்களின் திருமணம் விடயத்தில் அவர்களின் விருப்பம் வினவப்படாமல் இருப்பதும், கணவன் காலஞ்சென்ற நிலையில் மறுமணம் மறுக்கப்படுவதும் சித்தாந்தங்கள் பிடிக்குள் சிக்கி இருப்பதன் விளைவே.
இவை காரணமாக விபச்சாரத்தின் பல வகைகள் உருவாகி, அவற்றை நியாயப்படுத்தி அல்லது சட்டபூர்வமாக தொடரும் நிலை கூட உருவாகி இருக்கிறது.
மொத்தத்தில் முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது, ஆண் ஆண்தான் பெண் பெண்தான், இஸ்லாம் பெண்களை வைத்திருக்கும் இடமே உயர்வானது.


March 6, 2012 at 9:51 am
அந்த வெப் தளத்தை இயக்குவது இந்த மீடியா unit அல்ல. அது வேறு சில சகோதரர்களால் நடாத்தப்படுகின்றது…!
March 8, 2012 at 4:31 am
sorry
March 5, 2012 at 4:09 pm
மொத்தத்தில் இந்த மீடியா unit எமக்கு பல்வேறு வைகையில் உதவிக்கொண்டு இருக்கிறது. அதில் ஒரு தனித்துவமான பகுதிதான். இவர்கள் ஜும்மா உரைகளை http://www.slicp.com/ எனும் வலைப்பக்கத்தில் ஏற்றி வைப்பது which is always welcome.