PuttalamOnline

இளைஞனே உனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது! PART 2 OF 15

| 1 Comment

அஸ்ஸலாமு அழைக்கும்,

எனது கடிதத்தை எதிர்ப்பார்த்து இருக்கும் நண்பனே, உனக்கு அல்லாஹ் நற்கூலி அளிப்பானாக!

இன்று இனம் மதம் பிரதேசம் என்ற வாதங்கள் அதிகாரத்தை தக்க வைப்பதிலும், பெற்றுகொள்வதிலும் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனவே, இனவாதம் மதவாதம் பிரதேசவாதம் போன்றவற்றை எப்படித் தூண்டுவது என்பதை நீ அறியாதிருக்கலாம். அரசியலுக்குள் வந்து குறைந்தது இரண்டு அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டால் அதன் நுட்பங்களை நன்கு அறிந்து கொள்வாய். எனவே அது பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம். உனது கையெழுத்தை அழகாக போடக்கற்றுக்கொள். அதுமட்டுமே உனக்கு உபவோகமாக இருக்கும்.

பல்லின மத கலாச்சாரங்களை கொண்ட மக்கள் கூட்டம் தங்கள் இஷ்டம் போல் வாழத்தொடங்குகின்ற போது அங்கு பிரச்சினைகள் தவிர்க்க முடியாதவைகளாக மாறிவிடுகின்றன. ஒவ்வொரு சமூகமும், குழுவும் தாமே மேலானவர்கள்; ஏனைய அனைவரும் தம்மை விட தாழ்ந்தவர்கள் என்ற மனோநிலையை மேலோங்கச் செய்து வாழ்க்கையை நடாத்த தொடங்கியதால்தான் உலகம் பல்வேறு யுத்தங்களை சந்தித்ததுடன் பல மில்லியன் உயிர்களை இழந்தது. ஆனாலும் இதிலொரு வியப்பு என்னவென்றால் “ஒரு சமுகம் தனது மோலாதிக்கத்தை எம்மீது சுமத்துகிறது என்று அதற்கெதிராகப் போராடும் மற்ற சமுகம், தன்க்குகீழ் வாழும் அல்லது தன்னைவிட குறைந்த அளவுள்ள சமூகத்தின் மீது தனது மேலாதிக்கத்தை செலுத்த முற்படுகின்றது” என்பது தான்.

எனவே, மனிதன் வாழ்கின்றான் என்றால் அங்கு பிரச்சினை என்பது தவிற்க முடியாதொன்றாகி விடுகிறது என்பது உனக்கு புரிகிறதல்லவா. யுத்தங்கள் மூலம் தான் பல புதிய அரசுகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் தோற்றம் பெற்ற புதிய அரசுகளை நாம் உதாரணமாக கொள்ளலாம்.

இருந்தாலும், இந்த வேற்றுமைகளைக் களைந்து எல்லோரும் ஒரே நட்டு மக்கள் என்ற உணர்வோடு சகலருக்கும் சம உரிமை வழங்கி நிருவகிக்கும் ஒரு முறையாக இந்த அரசு தோற்றம் பெற்றது. அரசியல் என்பதை அறியும் போது அது பொதுவாக அரசாங்கம் பற்றிய அறிவாகவே நோக்கபடுகிறது. இங்கு அதிகாரமே மேலோங்கி நிற்கும். மனிதனின் நடத்தை மீதான அதிகாரத்தின் கட்டுப்பாடு தான் அரசியல் என்பது கடந்த காலங்களில் கோடிட்டு காட்டப்பட்ட ஒரு விடயமாகும். எனவேதான் அதிகாரம் செலுத்தல் என்பது அரசியல்வாதிகளுக்கும் மிகவும் முக்கியமானது. அதே நேரம் மக்களுக்கு உன்னிடமிருந்து அதைத்தான் விரும்புவர்.

இன்று உலகில் எங்கும் இலட்சிய அரசு என்பதோ இலஞ்சிய அரசியல்வாதிகளோ இல்லை. மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலாவின் பின்னர் இலட்சியம் என்ற வார்த்தை அரசியலிலிருந்து அந்நியமாகி விட்டது. இப்போதெல்லாம் இலட்சியப் பற்றி பேசுகின்றவர்கள் தம்மை ஒரு மகாத்மாவாகவோ மண்டேலாவாகவோ காட்டிக்கொள்ளப்ப்டுகின்ற வேடமேயன்றி வேறொன்றுமில்லை.

கடந்த கால வரலாறுகளை ஆய்வதன் மூலம் அரசு பற்றிய பல்வேறு தகவல்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும். அவை நமக்கு கற்றுத்தருவது என்ன? தனி மனிதன் தனி இஷ்டம் போல் வாழ்ந்த பின்னர் குடும்பத்தை நிர்வாகிக்கத்தொடங்கினான். அதன் வளர்ச்சியடைந்த நிலையாக அரசியலில் தோற்றம் காணப்படுகின்றது. சமுகத்தின் இறுக்கமான பிடிப்பின்மேல் தோற்றம் பெற்ற இவ் அரசானது இன்று பொருளாதாரத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு கட்டடம் போன்றாகி விட்டது. குடும்ப உறவுகளையே பொருளாதாரம் தீர்மானிக்கும் இக்காலப்பகுதியில் , அரசியல்வாதிகள் தமது மேலாதிக்கத்தை வாக்காளர் மீது திணிக்கின்றனர்.

வாக்காளர்களை உனக்கு அடிபணிய வைப்பதில் பொருளாதாரம் கூடிய செல்வாக்கு செலுத்தும், ஆகையால் உனது பொருளாதாரத்தைப் பெருக்குவதில் கூடுதல் கவனம் செலுத்து. அதற்கொரு கருவியாக இந்த அரசியலை உபயோகிக்க முடியும்.

மனிதன் என்று வாக்களிக்கும் உரிமையைப் பெற்றானோ அன்றே அவன் அரசியல்வாதியாவதட்குரிய தகுதியை பெற்று விடுகிறான். இந்த உண்மையை அவன் விளங்காமல் இருப்பதனாலேயே நீ அரசியல்வாதியாக வர ஆசைப்படுகிறாய் என்பதையும் நான் நன்கு உணர்ந்துள்ளேன். இவர்கள் உனக்கு வாக்களிக்கும் வரை உனது எஜமானர்கள். நீ வெற்றி பெற்றுவிட்டால் உனது அடிமைகள். வாக்களித்து விட்டான் என்பதற்காக இவனை தோளில் சுமக்க வேண்டும் என நீ நினைத்து விடாதே. ஏனென்றால் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் வாக்காளனை மதித்ததில்லை. நீ அவர்களை அதிகம் மதித்தான் அவர்கள் சில நேரம் உன்னைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க நேரிடும்.

இந்த அரசு தோற்றம் பெற்ற காலங்களில் மன்னர்கள் தம்மை இறைவனின் பிரதிநிதிகள் என்றும், தமது வசனங்கள் இறைவனின் வசங்கள் எனவும், மக்களை நம்ப வைத்தார்கள். அரசர்கள் அல்லது ஆட்சியாளர்கள் இறைவனின் பிரதிநிதிகள். இறைவனிடம் இருந்து அதிகாரங்களைப் பெறுபவர்களே அரசர்கள். இவ் அரசர்களே சமுதாய சட்டங்களை உருவாக்கின்றார்கள். அதனால் அச்சட்டங்களுக்கு கட்டுப்படுதல் மக்களின் கடமை. சமுதாய மக்கள் சட்டங்களை உருவாக்க முடியாது. விரும்பிய விரும்பாமலோ அச்சட்டங்களுக்கு கட்டுப்படுதல் மக்களின் கடமை என தெய்வீக உரிமைக்கோட்பாடு கூறுகின்றது.

அதற்குப் பிறகு எத்தனையோ கோட்பாடுகள் வந்து மக்களே எஜமானர்கள், ஆட்சியாளர்கள் அல்ல என வலியுறுத்தியுள்ள போதிலும், மக்கள் இன்றும் அரசியல்வாதிகளை கடவுளின் பிரதிநிதிகள் என்று நேரடியாக விளிப்பதை விடுத்து அவர்கள் அப்படியே காண விளைவது மக்கள் தொடர்ந்தும் அரசியல் ரீதியில் பின்னோக்கியே செல்கின்றனர் என்பதை உணர்த்துகின்றது. இதனால்தான் பாராளுமன்றத்தில் அடிக்கடி பிரச்சினைகளும் உறுப்பினர்களின் உண்மையான குணங்களும் பிரதிபலிக்கத் தொடங்குகின்றன. நிச்சயமாக ஒருவனால் இப்படியான பிரதிபலிப்புக்கலையே உடனேயே ஏற்படுத்திவிட முடியாது. எந்த விடயங்களுக்கு அவர்கள் இயற்கையாக பலக்கப்படிருக்கிரார்களோ அதுதான் முதலில் பிரதிபலிக்கும். எனவே, நீ இப்படியான விடயங்களை கண்டிக்கக் கூடாது. ஏனெனில், உனது குறைகளை மறைப்பதற்கு இவைகளை நீ பயனடுத்த முடியும்.

இங்கு மன்னனின் நிலை இறைவனுக்கு சமமாக மதிக்கப்படுகின்ற காரத்தால் அச்சமுகத்தில் மன்னனே மிக உயர்வானவனாகக் கருதப்படுகின்றான். இது தற்போதைய அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். எனவே அம்மன்னனும் தெய்வீக சட்டத்துக்கு கட்டுப்பட்டவன் எனக் கூறப்பட்டபோதிலும் உரிமை மன்னனுக்கே இருப்பதால் அச்சமுதாயத்தில் மன்னனே மிக உயர்தவனாகக் கருதப்படுபவன். எனவே இன்றும் வாக்காளர்களுக்கிடையே மிகவும் செல்வாக்குச் செலுத்தும் கோட்பாடாக தெய்வீக உரிமைக் கோட்பாடு காணப்படுகிறது.

தொடரும்..

One Comment

  1. பின்னூட்டல் எழுதும் சஹோதரர் நிஸ்தார் அவர்களுக்கு ஒரு முற்கூட்டிய வேண்டுகோள். முதல் கடிதத்தைபோல இந்த கடிதத்தினதும் வார்த்தைகளுக்கு வார்த்தை விமர்சனம் எழுதாமல் (தற்போதைய அரசியல்வாதிகளைபோல) சமகால அரசியல் நெறிகளை சரிகான்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் உங்கள் கருத்துக்களையும் கட்டுரையாகவோ அல்லது கடிதமாகவோ எழுதி வெளியிடலாமே.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)