(அபூ முஸ்னா)
மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கங்களுக்கு ஏற்ப சுகாதாரமான, ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நல்லாந்தழுவைக் கிராமத்தில் வடமேல் மாகாண சபையினால் நிர்மாணிக்கப்பட்ட ஆயூர்வேத வைத்தியசாலை கடந்த வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. வடமேல் மாகாண சுகாதார, சுதேச வைத்திய, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அசோக வடிகமங்கா மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான விக்டர் எண்டனி பெரேரா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு இந்த வைத்தியசாலையினைத் திறந்து வைத்தார்கள்.
வடமேல் மாகாண சுகாதார, சுதேச வைத்திய, விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பீ.வி.எம். சிரிசேனவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட ஆயூர்வேத வைத்தியசாலையில் முதலாவதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஏ. எஹியா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விக்டர் எண்டனி ஆகியோர் தங்களின் இரத்த அழுத்தத்தினை பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த ஆயூர்வேத வைத்தியசாலை வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஏ. எஹியாவின் முயற்சியின் காரணமாக நல்லாந்தழுவைக் கிரமத்தில் வடமேல் மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ. எம். கமறுதீன், ஏ. எச். எம். றியாஸ், எஸ். ஏ. எஹியா, என். டி. எம். தாஹிர், புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ், முன்னாள் வடமேல் மாகாண அமைச்சர் எம். எச். எம். நவவி, முந்தல் பிரதேச செயலாளர் ஏ. சி. எம். நபீல், வடமேல் மாகாண ஆயூர்வேத ஆணையாளர் டாக்டர் டப். டி. பிரேமாவதி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






March 19, 2012 at 11:21 pm
நல்ல முயற்சி பாராட்டுக்கள் மக்கள் மத்தியில் வளரட்டும்
March 19, 2012 at 11:20 pm
நல்ல முயற்சி
பாராட்டுக்கள் மக்கள் மத்தியில் வளரட்டும்
March 19, 2012 at 3:15 pm
புத்தளத்தின் ஏனைய பிரதேசங்களைப் போல சமாந்தரமான அபிவிருத்தியை நோக்கி அனைத்து துறைகளிலும் அக்க்காயப்பற்றுப் பிரதேசமும் முன்னேறிவருவது மகிழ்ச்சியை தருகிறது.