கொழும்பு தேசிய நூதனசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தை அடுத்து அவ்விடத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதனால் நூதனசாலை அதிகாரிகளிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார்.
எனினும் கொள்ளை தொடர்பில் மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
விசாரணைகளை துரிதப்படுத்தி கொள்ளையிடப்பட்ட பொருட்களையும் கொள்ளையர்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

