PuttalamOnline

வாழ்வை ரசிக்கட்டும் நம் குழந்தை!

| 1 Comment

காலை எழுந்த உடன் டியூஷன், பின்னர் பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்திலும் பரீட்சை, ஆசிரியர்களின் கண்டிப்புகள், மாலை மீண்டும் டியூஷன், வீடு திரும்பியதும் பெற்றோரின் வற்ப்புறுத்தல் பேரில் மீண்டும் படிப்பு, ஹோம் வொர்க்…

இப்படி, படிப்பு மட்டுமே வாழ்க்கை என்கிற சிந்தனை குழந்தைகளின் மனதில் பதிகிற காரணத்தால் , அந்த படிப்பில் அவர்கள் கோட்டை விடுகிற சமயத்தில், அதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

சிலர், தங்களையே அழித்துக்கொள்ளவும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மீது வெறுப்பை காட்டவும் இந்த தவறான சிந்தனையே காரணமாக இருக்கிறது.

படிப்பு மட்டும் தான் வாழ்க்கை என்கிற சித்தாந்தத்தை முதலில் பெற்றோர்கள் களையுங்கள்.

பாடபடிப்பை தவிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்த உலகில் உள்ளன, வாழ்க்கை என்பது பள்ளிகல்வி மட்டுமே அல்ல, என்கிற எண்ணத்தை பெற்றோர்கள் நம் குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.

படிப்பு, படிப்பு என்று இருந்த காலம் மலையேறி விட்டன.. இந்த தலைமுறை குழந்தைகளை வாழ்வை ரசிக்க கூடியவர்களாக மாற்ற வேண்டிய கடமை பெற்றோர்களாகிய நமக்கு உள்ளது!

மேலும், முந்தைய காலங்களில் குழந்தைகள் வெளி விளையாட்டுகளில் அதிகம் ஈடுபடுபவர்களாக இருந்தனர். அதில் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி ஏற்படும். ஒரு முறை தனது நண்பன் தோற்றால் மற்றொரு முறை தானும் தோற்போம் என்பதை நிதர்சனத்தில் கண்டு கொள்ளும் குழந்தைகள், வெற்றியும் தோல்வியும் சகஜமான ஒன்று தான் என்பதை உள ரீதியாகவே புரிகிறார்கள்.

ஆனால், இன்றைக்கோ குழந்தைகளின் விளையாட்டு முழுவதுமே கம்பியூட்டர் கேம்ஸ் என்று ஆகி விட்டது. அதில் தோல்வி பெறப்போகிறோம் என்கிற நிலை வரும் போது உடனே கட் செய்து மீண்டும் துவக்கத்தில் இருந்து விளையாட்டை ஆரம்பிகிறார்கள்.

இதன் மூலம், தோல்வியை ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் இன்றைய தலைமுறையினரிடத்தில் குறைந்து வருகிறது!

இது உண்மையில் வேதனையான விஷயம் என்று சொல்வதை விட மிகவும் ஆபத்தான ஒரு விஷயம் !!

மூலம்: நாஷித் அஹமத்

நன்றி: முஹம்மத் மபாஸ்

One Comment

  1. we can’t educate our parent’s it is impossible. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல, when we became parents we do it for a healthy society

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)