Puttalam Online
current

புத்தளம் நகர சபையின் பழமை வாய்ந்த வடிகாலமைப்பு திறப்பு

(முகமத் அஸ்வர்)
சுமார் 75 வருடங்கள் பழமை வாய்ந்ததும் பல தசாப்தங்களாக துப்பரவு செய்யப்படாமலும் புத்தளம் நகர மத்தியில் இருந்த சுமார் 1 கிலோ மீட்டர் நீளமான பிரதான கால்வாயை மீட்கும் அதிரடி நடவடிக்கை-யொன்று புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

புத்தளம் பிரதான தபால் நிலைய சந்தியிலிருந்து குருநாகல் வீதி, கொழும்பு வீதி ஆகியவற்றைக் கடந்து புத்தளம் ஏரியை சென்றடையும் இந்த கால்வாய் சுமார் 75 வருடங்களுக்கு முன்னர் அப்போதய நகர சபையால் நிர்மாணிக்கப்பட்டது. ஆயினும் கால ஓட்டத்தில் நகர வியாபாரிகள் தமது வர்த்தக நிலையங்களை நீடிப்பு செய்வதற்காக இந்த கால்வாயின் மேல் கட்டிடங்கள் நிர்மாணம் செய்ததால் இந்த கால்வாய் தடைபட்டு வருடக்கணக்கில் மலை காலங்களில் புத்தளம் நகருக்கு வெல்ல அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. தபால் நிலைய சந்தியிலிருந்து புத்தளம் ஏறிவரை கட்டப்பட்டிருந்த பல மாடிக் கட்டிடங்கள் நட்டஈடோ அல்லது மாற்று இடமோ வழங்கப்படாமலேயே தகர்க்கப்பட்டு கால்வாய் திறக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் மேற்கொண்ட இத்துணிகர நடவடிக்கைக்காக நகர வரியிருப்பாளர்கள் நகர பிதா கே.ஏ. பாயிஸுக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.


One thought on “புத்தளம் நகர சபையின் பழமை வாய்ந்த வடிகாலமைப்பு திறப்பு

  1. Ramzeen says:

    தபால் நிலைய சந்தியிலிருந்து புத்தளம் ஏறிவரை கட்டப்பட்டிருந்த பல மாடிக் கட்டிடங்கள் நட்டஈடோ அல்லது மாற்று இடமோ வழங்கப்படாமலேயே தகர்க்கப்பட்டு கால்வாய் திறக்கப்பட்டது.

    வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் மேற்கொண்ட இத்துணிகர நடவடிக்கைக்காக நகர வரியிருப்பாளர்கள் நகர பிதா கே.ஏ. பாயிஸுக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
    முகமத் அஸ்வர் அவர்களே நகர வரியிருப்பாளர்கள் நகர பிதா கே.ஏ. பாயிஸுக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள் ஏன் ஊர் நலன் கருதி செயல் பட்டமைகே தவிர இங்கு துணிகர நடவடிக்கைக்காக என்பது புத்தள மக்களுக்கு விலகலேய்யே சாரி நீக போட்டாத?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All