(M. A. M. Riskhan)
பாலாவி கல்பிட்டி வீதியில் சுமார் முப்பத்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் அழகிய கிராமமே சம்மட்டிவாடி ஆகும். வரலாற்றில் முஸ்லிம் களின் அடையாள சின்னமாக விளங்கும் தர்ஹா ஒன்றும் இங்குள்ளது. இந்த தர்ஹாவின் முன்னால் அமைந்திருந்த மொஹிடீன் ஜும்மா பள்ளி தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கான நிதி உதவியினை இரண்டு தனவந்தர்கள் வழங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே அமைந்திருந்த பள்ளிவாயிலானது இடப்பற்றாகுறையினை எதிர்நோக்கியது. சம்மாட்டிவாடி ஊர் ஜமாத்தார்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் இப்பள்ளிவாயலில் தமது ஜும்மா கடமையினை நிறைவேற்றி வருகின்றனர்.
தலைவர் மற்றும் நிர்வாக சபையினரின் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் இந்நிர்மான பணிகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

