PuttalamOnline

புத்தளம் லிவெர்பூல் வெற்றி

| 0 comments

(முகமத் அஸ்வர்)

புத்தளம் உதைபந்தாட்ட லீக் நடாத்திய லிவெர்பூல் வெற்றிக் கிண்ணத்திற்கான உதை பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி கடந்த 21/04/2012 சனிக்கிழமை மாலை மிக கோலாகலமாக இடம்பெற்றது.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த அனுசரணை அணியான லிவெர்பூல் அணியும், நடப்பு செம்பியானான (united) யாழ் முஸ்லிம் அணியும் மோதிக் கொண்டன. போட்டி நிறைவு பெரும் வேலை இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலினை பெற்று சம நிலையில் காணப்பட்டதால் நடைபெற்ற தண்ட உதையில் லிவெர்பூல் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று செம்பியன் ஆனது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் வெற்றி கேடயங்களை வழங்கி வைத்தார். Champion அணியான லிவெர்பூல் அணிக்கு 20000ரூபா ரோக்கப் பணத்துடன் 25 வீரர்களுக்கு தங்கப்பதக்கங்களும் அணிவிக்கப்பட்டது.

ரணரப் அணிக்கு 15000 ரூபா ரொக்கப்பணமும் 25 வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கங்களும் அணிவிக்கப்பட்ட தோடு 3ம் இடத்தைப் பெற்ற நியூ ஸ்டார் அணிக்கு10000ரூபா ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)