Puttalam Online
current

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் – புத்தளத்தில் அமைதி பாத யாத்திரை

  • 26 April 2012
  • 721 views

கடந்த 20 ஆம் திகதி தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிவாசல் தாக்கப்பட்டதை கண்டிக்கும் முகமாக, நாளை புத்தளம் நகரில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் அமைதி பாத யாத்திரையும், சர்வ மத தலைவர்களின் கண்டன கருத்துரையும் நடத்துவதென இன்று (2012.04.26) இஷாத் தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் பெரியபள்ளிவாசலில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இச் சந்தர்ப்பத்தில் கொடும்பாவி எரித்தல், துவேஷ வார்த்தைகள் தாங்கிய பதாதைகளைக் காட்சிப்படுத்தல் ஆகியன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டுதல்களைப் பேணி நடந்துகொள்ள வேண்டும் எனவும் புத்தளம் பெரியபள்ளிவாசலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில், மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் முன் வைத்த அபிப்பிராயங்களை புத்தளம் பெரியபள்ளி நிருவாக சபைத் தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில், செயலாளர் இஸட்.எம். ரஸ்மி உட்பட மெளலவிகளான எச்.எம். மின்ஹாஜ், எம்.எச்.எம். முனீர், அப்துல் கஹ்ஹார் ஆகியோரும் உன்னிப்பாகக் கவனத்திற்கொண்டனர். இறுதியாக மேல் குறித்த தீர்மானத்தை மக்களிடம் சமர்ப்பித்தனர்.

இதன் பிரகாரம் நாளை ஜும்ஆத் தொழுகையின் பின் பெரியபள்ளிவாசலில் இருந்து ஆரம்பிக்கும் அமைதி பாத யாத்திரை ஷொப்பிங் கம்பிளக்ஸ் சுற்று வட்டத்தின் ஊடாக, கங்காணிக் குளம் பள்ளிவாசல் சந்திக்கு வந்து மீண்டும் அல்குர்ஆன் நினைவு கோபுரத்தை வந்தடையவுள்ளது. அவ்விடத்தில் சர்வ மதத் தலைவர்கள் குறித்த தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை கண்டித்து தமது கருத்துக்களை சமர்ப்பிக்கவுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All