Puttalam Online
current

புத்தளத்தில் அமைதியான எதிர்ப்புப் பேரணி

தம்புள்ளை ஜூம்ஆ பள்ளிவாசலை அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் நகரில்இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையினை அடுத்து விஷேட துஆப் பிரார்த்தனைத் தொடர்ந்து அமைதியான பேரணி ஒன்றும் இடம்பெற்றது.

புத்தளம் பெரிய பள்ளி நிருவாகம் மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை இணைந்து நடாத்திய இந்த எதிர்ப்புப்  பேரணியில் ஆயிரக்கணக்காக மக்கள் பல்வேறு சுலோகங்கள் மற்றும் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு வலம் வந்தனர். அத்துடன் புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அஷஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் மற்றும் புத்தளம் சித்தி விநாயகர் ஆலய குருக்களும் உரையாற்றினார்கள்.

 


3 thoughts on “புத்தளத்தில் அமைதியான எதிர்ப்புப் பேரணி

  1. சகோதரர் ஹிஷாம் ஹுசைன் அவர்களையும் இவ்விடத்தில் விஷேசமாக ஞாபகப்படுத்த வேண்டும். தனது சிங்கள மொழி புலமையையும், கணீர் என்ற குரலையும் இவ்வாறான சமூக விழிப்புணர்வு பேரணிகளில் தன்னலம் பாராது பயன்படுத்த தயங்காதவர்..அல்லாஹ் அவருக்கு இன்னும் ஹிதாயத்தை கொடுக்க வேண்டும்…!

  2. mahmood says:

    புத்தளம் வாழ் முஸ்லிம்கள் நாம் – இந்நாட்டிலும் சர்வதேசத்திலும் எமது சமூகம் பாதிக்கப் படும்போது அவற்றில் பங்கு கொண்டிருக்கிறோம். முடியுமான எமது உதவிகளை செய்திருக்கிறோம். கண்டனங்களை வெளியிட்டு ஆர்பாட்டம், ஊர்வலம், பேரணி என எமது எதிர்ப்புகளையும் காட்டுவதற்கு நாம் பின் நின்றதில்லை.

    1990! சம்மந்தப்பட்டவர்கள் மறந்து விட்டாலும், புத்தளம் மக்களின் அன்சாரியத்தை உலக வரலாறு என்றும் பதிந்து வைத்திருக்கும். இந்நாட்டின் அடுத்த கோடியில் சுனாமி பேரலை தாக்கிய போது பெரிய பள்ளியில் ஒன்று கூடி, பொருட்கள் பொட்டலங்களுடன் நாடு பூராவும் பறந்து சென்று, மாதக்கணக்கில் தங்கி நின்று தொண்டு புரிந்தவர்கள், மூதூர் முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோது கந்தளாய் முகாம்களில் தூங்கி எழும்பியவர்கள்… பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக் என சர்வதேச முஸ்லிம்களின் பிரட்சினைகளிலும் தமது மானசீக ஒத்துழைப்புகளை வழங்கியவர்கள் இந்த புத்தளம் மக்கள். அநியாங்களை கண்டும் காணாதவர்களாக தானும் தன்பாடுமாக இருந்துவிடுபவர்களும் நாமல்ல. அதனால் தானே கடத்தி கொலைசெய்து ஆறடி ஆழத்தில் தோண்டிப் புதைக்கப்பட்ட மர்ஹூம் ராசிக் ஜி எஸ் விவகாரம் ஒன்றரை வருடங்களின் வெளிக்கொணரப்பட்டு, நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட்டது…

    அவ்வாறுதான் இன்றைய தம்புள்ளை விவகாரத்திலும் புத்தளம் சமூகம் செயற்பட்டுள்ளது.. ஜம்மியத்துல் உலமாவின் கடுமையான கட்டுப் பாட்டை கவனத்திற் கொண்டு அமைதியான ஒரு பேரணியை நடத்தி நாங்களும் முஸ்லிம்களின் தேசிய விடயத்தில் பங்கெடுத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்… பள்ளி வளாகத்துள்லா? சுப்பர் மார்கெட் வரையா? இல்லை மினாராவா? என்று எமக்குள் பல அபிப்பிராயங்கள் இருந்தாலும், எமது சமூக, சமைய தலைமை பெரிய பள்ளியில் கூடி உலமாக்களின் வழிகாட்டலுடன் இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளது. மிதமான கருத்தை கொண்ட பெரியவர்களும், ஆக்ரோஷமாக நின்ற இளைஜர்களும் மஷூரரா என்ற மையப் புள்ளியில் ஒன்றுபட்டனர். நிகழ்வு வெற்றிகராமாக நடந்து முடிந்தது. வழமைபோல் புத்தளத்திட்கு இந்நாட்டிலுள்ள நற்பெயர் பாதுகாக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் இனிவரும் இவ்வாறான நிகழ்வுகளிலும் இம் முன்மாதிரி பின்பற்றப்படவேண்டும்.

    இதனை ஒழுங்குபடுத்தி ஏற்பாடுசெய்த புத்தளம் பெரிய பள்ளி ஜம்மியத்துல் உலமா மற்றும் மற்றும் சிவில் அமைப்புக்கள் அனைத்தும் பாராட்டப் பட வேண்டியவை. தனிப்பட்ட வகையில் தமது பங்களிப்புகளை வழங்கிய சகோதரர்கள், இதற்காக பணங்களை செலவிட்டவர்கள், பதாதைகள் எழுதிய இளம் இரத்தங்கள்.. அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்க வேண்டும்.. இவ்வாறான சமூக விடயங்களில் சுயநலம் பாராது அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு இன்னும் பல துடிப்பான இளைஜர்கள் முன்வருவதற்கு அல்லாஹ் மன உறுதியை வழங்க வேண்டும்.

    இன்ஷா அல்லாஹ் புதியதொரு புத்தளத்தை நோக்கி பயணிப்போம் வாருங்கள்!

  3. Abo Haafidh says:

    அல்ஹம்துலில்லாஹ்!
    2012 .04.26 வியாழகிழமை மக்ரிபு தொழுகைக்கு பின் பெரிய பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சமூகமளித்து ஒத்துழைப்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All