PuttalamOnline

ஜும்மா சுருக்கம் – அஷ்ஷேய்க் H M மின்ஹாஜ், 27-04-2012, மொஹிடீன் ஜும்மா மஸ்ஜித்

| 0 comments

(SLJI Puttalam Branch Media Unit)

மனித படைப்பை சிறப்பான படைப்பாக அடையாளப்படுத்தும் அல்லாஹ் முஸ்லிம்களை மனிதப்படைப்பில் சிறப்பானவர்களாக அடையாளப்படுத்தக் காரணம், முஸ்லிம்கள் உலக மாந்தர்களுக்கு முன்மதிரியானவர்கள், தனித்துவமானவர்கள், அவர்கள் தா’வா சமூகத்தினர்.

முஸ்லிம்கள், இஸ்லாத்தின் குறியீடுகள் அன்றி முஸ்லிம் என்ற இனத்தின் குறியீடுகள் அல்லர்.  தூய இஸ்லாமிய கொள்கையால் பிணைக்கப்பட்டவர்கள் அன்றி, குறுகிய மனப்பாங்குகளுக்கு அடிமைப்-பட்டவர்கள் அல்லர். தேசப்பற்றுள்ளவர்கள் அன்றி, தேசவதிகள் அல்லர்.

இலங்கையின் வரலாற்றில், முஸ்லிம்கள் தேச மாண்பு உள்ளவர்களாக ஆற்றிய பங்கு, போர்த்துக்கேயரை நாட்டினுள் பிரவேசிக்க தடையாக அரசனோடு கைக்கோர்த்ததிளிருந்து, அரசனின் உயிரைக்காக்க உயிர் துறந்ததுவரை நீண்டு செல்கிறது.

தலதா மாளிகைக்கு யானை ஒன்றை வழங்கியதும், பெரகராக்களின் போது தலைமைத்தாங்குமாறு அழைக்கப்பட்டதும், தலைமைத்தாகியதற்கு பகரமாக பள்ளிவாசல்களின் பரிபாலன செலவை புத்த பிக்குகள் பொருப்பேற்றதும, முஸ்லிம்களும் புத்தர்களும் எந்தளவு புரிந்துணர்வுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள்.

இன்று, தம்புள்ளை பள்ளி வாசல் சம்பவத்தின் மூலம், சில பேரினவாதிகள், துவேசக்காரர்கள் இந்த உறவை பிரிக்க எடுக்கும் முயற்சி வலையில் சிக்கு படாமல், முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டியது; இஸ்லாமிய வழிமுறை. முஸ்லிம்களுக்கு எந்த பிற சமய ஸ்தாபனங்களை சேதப்படுத்தும் அதிகாரம், அனுமதி இஸ்லாத்தில் வளங்கப்படவில்லை. அப்படியிருக்க அல்லாஹ்வின் இல்லத்தை சேதப் படுத்தியதற்கான எங்களது கண்டனத்தை எப்படி செலுத்துவது?

அது நிச்சயமாக இந்த பேரினவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக மட்டுமே அன்றி, ஏனைய சிங்கள சகோதரர்களுக்கோ அல்லது சமய தபனங்களுக்கோ எதிரான நடவடிக்கையாக இருக்கக் கூடாது. இதுவே இஸ்லாத்தின் வழிமுறை.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)