Puttalam Online
puttalam-news

இன்று புத்தளத்தில் அமைதி ஊர்வலமும், கண்டனக் கூட்டமும்

(அபூ ஹம்னா)

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலை கண்டித்து இன்று புத்தளத்தில் அமைதி ஊர்வலமும், கண்டனக் கூட்டமும் ஜும்மாவிற்கு பின்னர் நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு பெரிய பள்ளியின் முன்னாள் அமைதி ஊர்வலமாக தொடங்கி மன்னர் வீதி வழியாக கொழும்பு சுற்று வட்டத்தை அடைந்து குருநாகல் வீதி ஊடாக ஹிஜ்ரி மினாரா சுற்று வட்டத்தை அடைந்தது.

அங்கு நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பிள்ளையார் கோவில் பிரதம குருக்களும், புத்தளம் மாவட்ட ஜமீயத் உலமாவின் தலைவர் மௌலவி அப்துல்லா மஹ்மூத் ஆலிம்மும் உரை நிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து கண்டன அறிக்கைகள் தமிழிலும், சிங்களத்திலும் முறையே மௌலவி மின்ஹாஜ் மற்றும் சகோ. ஹிஷாம் ஹுசைன் ஆகியோரால் வாசிக்கப்பட்டன.

மௌ. மின்ஹாஜ் அவர்களுடைய துஆ பிரார்த்தனையுடன் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நிகழ்ச்சி முடிவடைந்தது.

இதன் பொது பெறப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.


7 thoughts on “இன்று புத்தளத்தில் அமைதி ஊர்வலமும், கண்டனக் கூட்டமும்

 1. Ifthicar says:

  சின்ஹல ஹெல உருமய, கட்சியைச் சேர்ந்த,உதய கம்மன்பில, கூறு கிறார்-தம்புள்ள ஜூம்ஆ மஸ்ஜித், 5௦ வருடம், பழமை வாய்ந்த,கட்டிடம், சட்ட புர்வமற்றதாம். காணி அமைச்சர் ஜனக பண்டார தெண்னகோன் , கூறுகிறார்- சட்ட புர்வமான கட்டிடம், என்பதால், வரிவிலக்கு, அளிக்கப் பட்டுள்ளதாம். ஒரே அரசில, முரன்பாடான, கருத்துக்கள்.

 2. Salih Mohamed says:

  அமேரிக்கா சொன்னது என்றதும் பறந்து சென்றோம் தடுபபதட்காக இன்னொரு சிறு பான்மை இனம் பாதிக்கப்பட்டது என்பதை மறந்து போனோம்.
  எங்கள் ஜனாதிபதியை தூய்மை படுத்த அனுமதி வழங்கி இருக்கலாமே . “ஜெனிவாவில் எம்முடைய பரிந்துரை நாம் செய்த பாவமோ?”.
  ஒரு மாதத்துக்குள்ளே எமக்கு எதிராக திருப்பி விட்டானே இறைவன்.
  முதலில் தவுபா செய்வோம் அடுத்து பிராத்திப்போம். நிச்சயம் இறைவன் அங்கீகரிப்பான் எமது பிரர்த்தனையை இன்ஷா அல்லாஹ்.

 3. rinasmohamed says:

  Ya Allah (SWT) save us from the misguidance of personal whims and from all trials whether they are open or secret.
  Ameen!!!

 4. mahmood says:

  புத்தளம் வாழ் முஸ்லிம்கள் நாம் – இந்நாட்டிலும் சர்வதேசத்திலும் எமது சமூகம் பாதிக்கப் படும்போது அவற்றில் பங்கு கொண்டிருக்கிறோம். முடியுமான எமது உதவிகளை செய்திருக்கிறோம். கண்டனங்களை வெளியிட்டு ஆர்பாட்டம், ஊர்வலம், பேரணி என எமது எதிர்ப்புகளையும் காட்டுவதற்கு நாம் பின் நின்றதில்லை.

  1990! சம்மந்தப்பட்டவர்கள் மறந்து விட்டாலும், புத்தளம் மக்களின் அன்சாரியத்தை உலக வரலாறு என்றும் பதிந்து வைத்திருக்கும். இந்நாட்டின் அடுத்த கோடியில் சுனாமி பேரலை தாக்கிய போது பெரிய பள்ளியில் ஒன்று கூடி, பொருட்கள் பொட்டலங்களுடன் நாடு பூராவும் பறந்து சென்று, மாதக்கணக்கில் தங்கி நின்று தொண்டு புரிந்தவர்கள், மூதூர் முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோது கந்தளாய் முகாம்களில் தூங்கி எழும்பியவர்கள்… பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக் என சர்வதேச முஸ்லிம்களின் பிரட்சினைகளிலும் தமது மானசீக ஒத்துழைப்புகளை வழங்கியவர்கள் இந்த புத்தளம் மக்கள்.

  அநியாங்களை கண்டும் காணாதவர்களாக தானும் தன்பாடுமாக இருந்துவிடுபவர்களும் நாமல்ல. அதனால் தானே கடத்தி கொலைசெய்து ஆறடி ஆழத்தில் தோண்டிப் புதைக்கப்பட்ட மர்ஹூம் ராசிக் ஜி எஸ் விவகாரம் ஒன்றரை வருடங்களின் பின் வெளிக்கொணரப்பட்டு, நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட்டது…

  அவ்வாறுதான், இந்த நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட தூரோகமான தம்புள்ளை விவகாரத்திலும் புத்தளம் சமூகம் செயற்பட்டுள்ளது..

  ஜம்மியத்துல் உலமாவின் கடுமையான கட்டுப் பாட்டை கவனத்திற் கொண்டு அமைதியான ஒரு பேரணியை நடத்தி நாங்களும் முஸ்லிம்களின் தேசிய விடயத்தில் பங்கெடுத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்… பள்ளி வளாகத்துள்லா? சுப்பர் மார்கெட் வரையா? இல்லை மினாராவா? என்று எமக்குள் பல அபிப்பிராயங்கள் இருந்தாலும், எமது சமூக, சமைய தலைமை பெரிய பள்ளியில் கூடி உலமாக்களின் வழிகாட்டலுடன் இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளது. மிதமான கருத்தை கொண்ட பெரியவர்களும், ஆக்ரோஷமாக நின்ற இளைஜர்களும் மஷூரரா என்ற மையப் புள்ளியில் ஒன்றுபட்டனர். நிகழ்வு வெற்றிகராமாக நடந்து முடிந்தது. வழமைபோல் புத்தளத்திட்கு இந்நாட்டிலுள்ள நற்பெயர் பாதுகாக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் இனிவரும் இவ்வாறான நிகழ்வுகளிலும் இம் முன்மாதிரி பின்பற்றப்படவேண்டும்.

  இதனை ஒழுங்குபடுத்தி ஏற்பாடுசெய்த புத்தளம் பெரிய பள்ளி ஜம்மியத்துல் உலமா மற்றும் மற்றும் சிவில் அமைப்புக்கள் அனைத்தும் பாராட்டப் பட வேண்டியவை. தனிப்பட்ட வகையில் தமது பங்களிப்புகளை வழங்கிய சகோதரர்கள், இதற்காக பணங்களை செலவிட்டவர்கள், பதாதைகள் எழுதிய இளம் இரத்தங்கள்.. அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்க வேண்டும்.. இவ்வாறான சமூக விடயங்களில் சுயநலம் பாராது அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு இன்னும் பல துடிப்பான இளைஜர்கள் முன்வருவதற்கு அல்லாஹ் மன உறுதியை வழங்க வேண்டும்.

  இன்ஷா அல்லாஹ் புதியதொரு புத்தளத்தை நோக்கி பயணிப்போம் வாருங்கள்!

 5. Mohamed SR Nisthar says:

  அன்புள்ள Badboy!

  காக்கி உடை அணிந்தவர்கள் தங்களுக்கு கட்டளை வராமல் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே இதை தடுக்க கட்டளை இடாதவர்களையும், தாக்க கட்டளையிட்டவர்களையுமே சட்டத்தின் முன் நிறுத்துவது நியாயம். ஆனால் சகல சட்டங்களையும் தன் அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பவர்கள் தான் பள்ளியை தாக்கவும், தாக்கியவரை தாக்காமல் இருக்கவும் உத்தரவு பிறப்பித்திருந்தால் யாரை சட்டத்தின் முன் நிறுத்துவது?

  ஆகவே, இது ஒரு மதத்திற்கு எதிரான பயங்கரவாதம் என்ற அடைப்பிடையில் அதை தெரிந்து கொண்டு செய்த குற்றத்திற்காக அந்த தேரரை நீதியின் முன் நிறுத்துவது பொருத்தமானது.

  ஒரு அரசாங்க கட்டிடத்துக்கு கைக்குண்டு எறிந்திருந்திருந்தால் அல்லது அரசாங்க கூட்டமொன்றை ஒரு பிக்கு அல்லது ஒரு ஐயர் அல்லது ஒரு பாதிரி அல்லது ஒரு மெளலவி குழப்பி இருந்திருந்திருந்தால் இந்நேரம் அந்த நபர் உள்ளே.

  ஆனால் என்ன செய்வது பயங்கரவாதத்தை துண்டிய போதும் அதை செய்த போதும் காவி உடை என்பதற்காக அவர் சுதந்திரமாக வெளியே.
  வெளி நாடுகளும் தலைஇட முடியாதல்லவா. தலையிட்டால் ஜமியத்துல் உலமா சொல்லிவிடும் “இது உள்வீட்டு விடயம் தலையிடாதீர்” என்று.

  • Iraynesan says:

   அனாவசியமான விடயங்களுக்கெல்லாம் சமயம் , சமூகம் என்று கூறிப் பம்மாத்துக்காட்டி பத்திரிகைமூலம் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் சில அரசியல்வாதிகளின் மௌனம் , மஸ்ஜித் விவகாரத்தில் அவர்கள் சமூக விரோதிகளுக்குச் சார்பாக உள்ளார்கள் என்பதையே காட்டுகின்றது. இவர்களுக்குச் சமுதாயம் வழங்கப்போகும் தண்டனை என்ன? இனியாவது இவர்களை நாம் இனங்காண வேண்டாமா ? அல்லது இவர்கள்தான் நம் சமூகத்தின் ஆபத்சகாயர்கள் என்று நம்பி இன்னும் அவர்கள் பின்னாலேயே செல்லப்போகிறோமா?

 6. Badboy says:

  காக்கி உடை அணிந்து அரச பின்புலத்தில் இருண்டு கொண்டு இனத் துவேசத்தை பரப்பும் அனைவரையும் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All