Puttalam Online
current

புத்தளம் நகர சபையின் சிங்கள, தமிழ் புத்தாண்டு விழா

  • 5 May 2012
  • 722 views

(முகமத் அஸ்வர்)

புத்தளம் நகர சபை ஏற்பாடு செய்த நகர சபை ஊழியர்களுக்கான சிங்கள தமிழ் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி நிகழ்வு 04.05.2012 வெள்ளிக்கிழமை புத்தளம் நகரசபை மைதானத்தில் நகர பிதா K.A. பாயிஸ் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில் சைக்கில் ஓட்டப் போட்டி, மரதன் ஓட்டப்போட்டி, முட்டி உடைத்தல், மூட்டை அடித்தல், கிரீஸ் மரம் ஏறுதல், ஓலை பின்னுதல், குதிரை ஓட்டம், கயிறு இழுத்தல்,போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பல பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன.

மேலும் இவ் விளையாட்டுப் போட்டியில் முக்கிய அம்சமாக நிகழ்வாக கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது நகர சபை ஊழியர்கள் காரியாலயம், வேலை,சுகாதாரம் என மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற போட்டியில் நகர பிதா தலைமையிலான காரியாலயம் அணியும் M.S.M. ரபீக் தலைமையிலான வேலை அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டியின் முடிவில் நகர பிதா கே.ஏ. பாயிஸ் தலைமையிலான காரியாலய அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டி இவ்வருடத்திற்கான செம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.

மேலும் இவ் விழாவில் இடம் பெற்ற சிறுவர்களுக்கான மாறுவேடப் போட்டி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் வெற்றியீட்டிய குரங்கும் குரங்கு வித்தைக் காரனும் என்ற மாறு வேட சிறுவர்களின் சாகசம் மக்களை மேருகூட்டச் செய்ததுடன் அவர்களிருவருக்கும் நகரபிதா 2000 ரூபாவை சன்மானமாக வழங்கினார்.

இந் நிகழ்விற்கு புத்தளம் யபா பொலிஸ் அதிகாரி, வர்த்தக சங்கத்தினர், நகர சபை அங்கத்தவர்கள் ஊர்மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All