(SLJI Puttalam Branch – media Unit)
மனித இனம் படைப்புகளில் உன்னத இனம். முஸ்லிம்கள் இஸ்லாத்தை சுமந்தவர்களாக இருப்பதால் உன்னதமானவர்கள். முஸ்லிம்கள் இஸ்லாத்தை சுமந்ததினால் தான் உன்னதமானவர்கள், அன்றி அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக உன்னதமானவர்கள் அல்லர்.
முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பெருமையை, மதிப்பை இன்று மறந்து இருக்கிறார்கள். இதன் நிலை பரிதாபமானது. அன்று சஹாபாக்கள், இஸ்லாத்தை, அதன் பெருமையை நன்றாக விளங்கி இருந்தார்கள்; இதன் காரணமாக அவர்கள் பொறுத்த துன்பங்கள் ஒன்றா? இரண்டா? அவை எண்ணிலடங்காதவை. தீயில் காயவைக்கப்பட்டார்கள். சுடு மணலில் பொசுக்கப்பட்டார்கள்.
இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருந்த அதீத நம்பிக்கை, யுத்தக்களத்தில் எதிர்பாரத வெற்றிகளை பெற்றுக்கொடுத்தது.
இன்று உலகைப் பாருங்கள், முஸ்லிம்களுக்கு எத்தனை சவால்கள், எத்தனை சோதனைகள், எத்தனை போராட்டங்கள். இந்த நிலைகளிலிருந்து மீள அவர்கள் எடுக்கும் முயற்சி, துஆ மட்டுமே, ஆனால் இஸ்லாத்தின் பெருமையை விளங்கி வாழ இன்னும் ஆரம்பிக்கவில்லை.
ஆக, இஸ்லாத்தின் பெருமை, இன்னும் விளங்காத நிலையில் முஸ்லிம்களுக்கு எஞ்சி இருப்பது நீடிக்கும் சுக வாழ்வா? ஓடி மறைவைத் தேடும் வலிகளா? விடை உங்களிடம் உண்டு என்று நினைக்கிறேன்.

