PuttalamOnline

களுத்துறையில் தம்புள்ள மஸ்ஜிதை உடைக்குமாறு ஆர்ப்பாட்டம்

| 1 Comment

இன்று களுத்துறையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜிதை உடைக்குமாறு கோரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் பல பெளத்த தேரர்கள் வழிநடத்தலில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்பாட்டதிற்கு பௌத்த பாதுகாப்பு அமைப்பு மற்றும் தேசப்பற்று மிக்க பௌத்த சக்தி என்று குறிப்பிட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் வழமையாக கலந்து கொள்ளும் குறித்த பெளத்த தேரர்களே கலந்து கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

குறித்த ஆர்பாட்டகாரர்கள் அனுராதபுர சியாரம் தாக்குதல், தெகிவளை, தம்புள்ளை மஸ்ஜித் தாக்குதல் ஆகியவற்றில் கலந்து கொண்டவர்கள் இன்று இடம்பெற்றுள்ள ஆர்பாட்டத்திலும் கலந்து கொண்டுள்ளனர்.

One Comment

  1. ஒரு எறும்புக்கு கூட தொந்தரவு செய்ய வேண்டாம் என்று புத்த மதம் கூறுவதை இன்னும் இந்த புத்த பிக்குஹல் அறியாமல் இருபது மிஹவும் கவலை பட வேண்டிய விசயமஹும்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)