Puttalam Online
current

நாளை 17.05.2012 கொழும்பில் நடைபெறவிருக்கின்ற “மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்” என்ற நூல் வெளியீட்டு விழா தொடர்பாக விடுக்கப்படும் அறிக்கை

2010ல் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த பட்டாணி ராசிக் அவர்களின் கடத்தல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான வாழைச்சேனை காவத்தமுனையைச் சேர்ந்த முஸ்டீன் என்பவர் நாளை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்த விருக்கும் கவிதைத் தொகுப்பு வெளியீடு தொடர்பில் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா மற்றும் புத்தளம் பெரிய பள்ளி ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது.

தீய அரசியல் நோக்கம் கொண்டு ஒரு சமூகத்துக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட இந்த பாதகச் செயலுக்கு உறுதுணையாய் இருந்தவர் என்ற முறையில் அவரது வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நல்லெண்ணத்துடன் பங்களிப்பு செய்தோர் தவறாய் வழி நடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சுகிறோம். இவ்வாறான நிகழ்வுகள் மோசமான ஒரு முன்னுதாரணமாய் அமைந்துவிடக்கூடாது என்ற நன்நோக்கிலிருந்து இக்கவலை எழுகிறது.

எனவே தயவுசெய்து இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறு தயவுடன் வேண்டுகிறோம்.

கடத்திப் படுகொலை செய்யப்பட்ட ராசிக் குடும்பத்தவர்கள், புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா, புத்தளம் பெரிய பள்ளி


One thought on “நாளை 17.05.2012 கொழும்பில் நடைபெறவிருக்கின்ற “மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்” என்ற நூல் வெளியீட்டு விழா தொடர்பாக விடுக்கப்படும் அறிக்கை

  1. Abo Haafidh says:

    மறுமை இன் அடையாலக்களில் ஒன்று தகுதியற்றவர் ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All