(M.S.M. நஸ்ருதீன்)
புத்தளம் புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டு நிறைவையொட்டி இம்மாதம் 9,10,11 ஆம் திகதிகளில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலையின் அதிபர் A.H.M.அமீர் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானது. பாடசாலை மாணவர்களால் செய்யப்பட்ட பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விஷேடமாக பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, முற்பட்ட காலங்களில் இவ்வூர் மக்களால் உபயோகிக்கப்பட்ட புராதனப்பொருட்கள் அனைவருடைய கவனத்தையும் ஈன்றது மட்டுமல்லாமல் புழுதிவயலின் 130 வருடங்களுக்கு முன்னரான சனத்தெகை கணக்கெடுப்பும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இப்பாடசாலையின் பவளவிழா நிகழ்வையொட்டி 11.05.2012 அன்று பவள விழா சிறப்பு மலர் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வின்போது வலயக்கல்வி மணிமனையின் கல்வியதிகாரிகள் உட்பட மாகாண சபை உறுப்பினர்கலும் பாடசாலை அபிவிருத்தி சங்க உருப்பினர்களும் கலந்து கொண்டனர். மிகவும் சிறப்பாக நடந்து முடிந்த இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்களும் ஒத்துளைப்பு வழங்கினர்.









May 16, 2012 at 9:56 am
ஒரு முக்கியமான வைபவம் ஊடகவியலாளர்கள் எவருக்கும் அழைப்பின்றி வெளி உலகுக்குத் தெரியமல் நடந்து முடிந்திருக்கின்றது.
May 17, 2012 at 5:18 pm
உண்மைதான் 75 வருடத்தை சத்தமில்லாமல் கடந்த எமது பாடசாலை, பவள விழாவும் சத்தம் இல்லாமல் முடிந்துவிட்டது, அரசியல் வாதிகளை அழைப்பதில் போட்டி போட்ட ஏற்பாட்டுக் குழு(ஆசரியர்கள் உட்பட) ஊடகவியலாளர்கள் கல்வியாலர்கள், சமூக ஆர்வலாரகளையும், அழைப்பதில் குறை விட்டு விட்டார்கள்,