Puttalam Online
current

புத்தளம் தீ விபத்து: மெனிக் ஸ்டுடியோ உரிமையாளரின் நன்றிக் கடிதம்

ஜீ.டீ.எஸ். குணசேகர
மெனிக் ஸ்டுடியோ
இல. 11,
குருனாகல் வீதி,
புத்தளம்.

திகதி: மே 09, 2012

பிரதம ஆசிரியர்
புத்தளம் ஒன்லைன் இணையத் தளம்

அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு,

விடயம்: நன்றி கூறுதலை புத்தளம் ஒன்லைனில் பிரசுரித்தல்

தொடர்பு: புத்தளம், குருனாகல் வீதியில் வியாபார நிலையங்களில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் பொழுது உதவி புரிந்த புத்தளம் மக்களின் மனிதாபிமானம்.

கடந்த மே 03 ஆம் திகதி பிற்பகல் வேளை புத்தளம், குருனாகல் வீதியில் வியாபார நிலையங்களில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் போது தீயை அணைக்கவும் விபாயாபர நிலையங்களில் இருந்த பொருட்களை பாதுகாப்பதற்கும் அர்ப்பணத்துடன் பங்களிப்பு செய்த புத்தளம் நகர மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றயை இக்கடிதத்தின் மூலம் உரித்தாக்குகின்றேன். குறிப்பாக, இனங்களுக்கிடையில் நல்லுறவை மேம்படுத்துவதற்கு இக் கடிதத்தின் மூலம் கூறப்படும் விடயம் பேருதவியாகும் என்பதனால் இக் கடித்தை புத்தளம் ஒன்லைனில் பிரசுரிக்குமாறு மிக தேவையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மேற்படி முகவரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எனது வியாபார நிலையமும் பாதிப்புக்குள்ளானது. அங்கிருந்த புகைப்பட கெமரா மற்றும் கலையக ஒளிக் கருவிகளை வெளியே இழுக்கும் போது சிறு பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் கூட அவை முழுமையாக தீக்கிரையாவதில் இருந்து பாதுகாத்துக்கொடுப்பதற்கு அவ்விடத்தில் ஒன்று கூடிய மக்கள் மிக சுருசுருப்பாக செயல்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களாக இருந்ததுடன் தமிழ், சிங்கள மக்களும் இருந்தனர்.

இச் சந்தர்ப்பத்தில் எனது வியாபார நிலையத்தில் இருந்த பௌத்த சமய மேலங்கி, பாத்திரம் பூசைப் பொருட்களையும் கௌதம புத்தரின் சிலைகளையும் பாதுகாத்துக்கொடுத்தவர்கள் புத்தளம் நகர முஸ்லிம்களே. அவர்கள் இப் பூசைப் பொருட்களை தமது இரு கைகளினால் கண்ணியத்துடன் சுமந்து வெளியில் வைத்த விதமும், சமய இன வேறுபாடில்லாத அவர்களின் முன்மாதிரியும் மனிதாபிமானமும் மிகவும் உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பமாக அமைந்தது என்பதை விசேடமாகக் குறிப்பிடுகின்றேன்.

இவ் விபத்தின் மறுநாள் புத்தளம் நகரிலிருந்து தூர பிரசேமொன்றில் தொழில்புரியும் எனது நண்பனொருவனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்குக் காரனமான விடயம் தொடர்பாக எனது கடும் விசனத்தை அவசியம் தெரிவித்தாக வேண்டும். அதாவது, அன்மைக் காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட குழப்ப நிலைகளுடன் தொடர்புபடுத்தி புத்தளம்வாழ் பௌத்தனான எனது வியாபார நிலையத்தை புத்தளம் நகரின் முஸ்லிம்கள் சிலர் உடைத்து விட்டதாக வதந்தியொன்று பரவியிருந்தது. அத் தொலைபேசி அழைப்பில் எனது நண்பன் வினவியது இதன் உண்மை தன்மையையாகும். இவ்வாறான கட்டுக் கதைகளை பரப்பி இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குழைக்க வேண்டாம் என மிகவும் உணர்வுபூர்வமான மனதுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலைளைக் கருத்திற்கொண்டு, காலத்திற்கேற்ற முக்கியத்துவம் வாய்ந்த இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு முன்மாதிரியாக அமைந்த இந் நிகழ்வினை உங்கள் பத்திரிகையில் பிரசுரிக்குமாறு மீண்டும் மீண்டும் வேண்டிக்கொள்கின்றேன். இவ் வேண்டுகோள் குறித்து உங்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும் என்றும், உங்கள் இணைய தளத்தில் பிரசுரப்பீர்கள் என்றும் மிகுந்த தேவையுடன் எதிர்பார்க்கின்றேன்.

நன்றி.

இவ்வண்ணம்,
உண்மையுள்ள,
ஜீ.டீ.எஸ். குணசேகர

————————————————————————————————————————————————————

ජී.ඩී.එස්. ගුණසේකර

මැණික් ස්ටූඩියෝ,
අංක 11,
කුරුණෑගල පාර,
පුත්තලම.

දිනය: මැයි 09, 2012

ප්‍රධාන කතෘ
පුත්තලම ඔන්ලයින් වෙබ් අඩවිය

හිතවත් මහත්මයාණෙනි.,

කාරණය: ස්තුති ප්‍රකාශය පුත්තලම ඔන්ලයින්හි පළකරවීම
සම්බන්ධය:
පුත්තලම, කුරුණෑගල පාරේ වෙළඳ ස්ථානවල ඇති වූ හදිසි ගිනි ගැනීම අවස්ථාවේදී එම ගින්න නිවීමටත්, වෙළඳ භාණ්ඩ ආරක්ෂා කිරීමටත් උදව් උපකාර කළ ජනතාවගේ මානුෂිකත්වය

පසුගිය මැයි 03 වැනි බ්‍රහස්පතින්දා දින පස්වරුවේදී පුත්තලම, කුරුණෑගල පාරේ වෙළඳ ස්ථානවල ඇති වූ හදිසි ගින්න නිවීමටත් වෙළඳ ස්ථානවල තිබූ භාණ්ඩ ආරක්ෂා කිරීමටත් කැපවීමෙන් දායක වූ පුත්තලම නගරයේ ජනතාවට මගේ හෘදයාංගම ස්තුතිය මෙම ලිපිය මගින් පුද කරමි. විශේෂයෙන්ම, ජාතින් අතර සුහදතාවය වර්ධනය කිරීමට මෙම ලිපියෙන් ප්‍රකාශ කෙරෙන කරුණු මහෝපපකාරි වන බැවින් මෙම ලිපිය පුත්තලම ඔන්ලයින්හි පළකරවන මෙන් ඉතා උවමනාවෙන් ඉල්ලා සිටිමි.

ඉහත ලිපිනයේ හදිසි ගිනි ගැනීම සිදු වූ අවස්ථාවේ දී මගේ වෙළඳ ස්ථානයත් ගින්නට හසු විය. එහි තිබූ ඡායාරූපාගාර කැමරා සහ ආලෝක ආම්පන්න එළියට ඇදීමේදී සුළු හානි සිදු වුවත් සම්පූර්ණයෙන් ගිනිබත් වීමට තිබූ අලාභයෙන් ආරක්ෂා කර දීමට එම ස්ථානයට එකතු වූ ජනතාව යුහුසුළු වූහ. ඔවුනගෙන් බහුතරයක් මුස්ලිම් ජාතිකයින් වූ අතර දෙමළ හා සිංහල ජාතිකයින් ද සිටියහ.

මෙම අවස්ථාවේදී මගේ වෙළඳ ස්ථානයේ තිබූ සිවුරු, අටපිරිකර ඇතුළු පූජා භාණ්ඩ හා ගෞතම බුදු පිළිම ආරක්ෂා කර දුන්නේ පුත්තලම නගරයේ මුස්ලිම් ජනතාවයි. ඔවුන් ‍බෞද්ධාගමික පූජණීය භාණ්ඩ දෝතින් ඔසවා ගෞරවාන්විතව එළියට ගෙනැවිත් තැබූ ආකාරයත්, ආගම් භේදවලින් තොර ඔවුන්ගේ ආදර්ශමත්භාවය හා මානුෂිකත්වයත් ඉතා හැඟීම්බර අවස්ථාවක් වූ බව මෙහිලා විශේෂයෙන් සටහන් කරමි.

මෙම සිදුවීමෙන් පසුදින උදයේ පුත්තලම නගරයෙන් දුර ප්‍රදේශයක රැකියාවේ නියුතු මගේ මිතුරෙකුගෙන් ලද දුරකථන ඇමතුමට හේතු වූ කාරණාව පිළිබඳව මගේ දැඩි අප්‍රසාදය ප්‍රකාශ කළ යුතුව ඇත. එනම්, පසුගිය කාලවල රටේ ඇති වූ නොසන්සුන්කාරි තත්වයන් හා සම්බන්ධ ‍කර පුත්තලමවාසි බෞද්ධයෙකු වූ මගේ වෙළඳ ස්ථානය පුත්තලම නගරයේ මුස්ලිම් පිරිසක් කඩා බිඳ දැමූ බව රාවයක් පැතිරී ඇත. එම දුරකථන ඇමතුමෙන් මගේ මිතුරා විමසා සිටියේ මෙහි ඇත්ත තත්වයයි. මෙවන් දූෂමාණ ආරංචි පතුරුවා ජාතින් අතර සුහදතාවය ‍කඩා බිඳ ‍නො දමන මෙන් දැඩි සංවේදී සිතින් ඉල්ලා සිටිමි.

පසුගිය කාලවල රටේ ඇති වූ නොසන්සුන්තාවයන් හමුවේ, කාලින වැදගත්කම සහිත ජාතික සමගියට පූර්වාදර්ශී වූ මෙම සිදුවීම ඔබතුමාගේ ‍පුවත්පතේ පළකරන මෙන් නැවත නැවතත් ඉල්ලා සිටිමි. මෙම ඉල්ලීම කෙරෙහි ඔබතුමාගේ පුද්ගලික අවධානය යොමු වනු ඇතැයි ද, පුත්තලම ඔන්ලයින්හි පළකරනු ඇතැයි ද ඉතා උවමනාවෙන් අපේක්ෂා කරමි.

ස්තුතියි.

මෙයට,
විශ්වාසී වූ,
ජී.ඩී.එස්. ගුණසේකර


4 thoughts on “புத்தளம் தீ விபத்து: மெனிக் ஸ்டுடியோ உரிமையாளரின் நன்றிக் கடிதம்

 1. […] පුත්තලම් online වෙබ් අඩවියේ පළවූ පුවත එලසින්ම. […]

 2. […] පුත්තලම් online වෙබ් අඩවියේ පළවූ පුවත එලසින්ම. […]

 3. MH AbduL RahmaN says:

  சந்தோசமாக இருக்கிறது. முஸ்லிம்களின் பண்புகளை சரியாக புரியவைத்த நிகழ்வு அது!
  இப்படியே ஒவ்வரு நமது நடவடிக்கையும் நல்லதாக அமையட்டுமாக!

 4. நானும் புத்தளத்தில் வாழும் முஸ்லிம்,
  மார் தட்டி பூரித்து போனேன்!!!
  எடுத்துக் கூறுவோம் உலகுக்கு,
  நாம் இனவாதிகள் அல்ல,
  இனங்களை காக்கின்ற முஸ்லிம்கள்….
  மதங்களுக்குரிய மதிப்பை கொடுத்து,
  வேற்றுமைப் பாராது உதவிடுவோம்…
  புத்தளத்து முஸ்லிம்கள்,
  நாம் மதீனத்து வாசிகள்!!!
  என்பதையும் நினைவுக் கூறுவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All