PuttalamOnline

ஜும்மா சுருக்கம் – அஷ்ஷேய்க் அபுல் ஹுதா 25.05.2012, மஸ்ஜிதுல் பகா

| 0 comments

(SLJI Puttalam Branch – Media Unit)

ஒரு முஸ்லிமின் ஈமானியப் பண்புகளாக, நான்கு விடயங்களை இஸ்லாம் அறிமுகப்படுத்துகிறது.

1. தெளிவான உறுதியான நம்பிக்கை (அகீதாவின் மீதான நம்பிக்கை) – பெயரளவில் மட்டும் முஸ்லிமாக இல்லாமல், இஸ்லாமிய கொள்கையை முழுமையாக உள்வாங்கி வாழும் தெளிவு. வார்த்தைகள் கூட ஷிர்க்கை ஏற்படுத்தும், அவை கூட ஏற்படாத வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ளும் அளவிற்கான இஸ்லாமிய தெளிவு.

2. ஒழுங்கு படுத்தப்பட்ட செயல்கள் (இபாதத்) – முஸ்லிமுடைய செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்காக என்ற அடிப்படையிலும், அல் குர் ஆன், சுன்னாவின் வழிகாட்டலிலும் அமையவேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட இபாதத்துகள் களையப்பட வேண்டும். இஸ்லாம் கட்டாயப்படுத்திய (நிர்ப்பந்தித்த) இபதத்துகளோடு, முஸ்லிம் விரும்பி சுதந்திரமாகவும் இபாதத்துகள் செய்ய வேண்டும். இந்த இபாதத்துகள் உலக சுபீட்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைய வேண்டும்.

3. ஒழுக்க விழுமியங்கள் (பண்பாடுகள்) – முஸ்லிம்களின் பண்பாடுகளின் பிரதிபலிப்பு மற்றைய மனிதனில், சுற்றாடலில், ஏனைய உயிர்களிடத்தில், இயற்கை வளங்களில் பிரதிபலிக்க வேண்டும்.

4.பிரயோசமான வாழ்வு – ஒரு முஸ்லிமின் பிரயசனமான வாழ்வு, உலகத்தை, இதம் தரும் சோலையாக மாற்றவேண்டும்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)