PuttalamOnline

கட்டாரின் தலைநகர் டோஹாவில் இடம்பெற்ற தீ விபத்தில் 19 பேர் மரணம்.

| 0 comments

(கட்டாரில் இருந்து அசாம்)

கட்டாரின் தலைநகர் டோஹாவில் இடம்பெற்ற தீ விபத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் சிறுவர் சிறுமியர் என்பது குறிப்பிடத்தக்கது. விலேஜியோ சென்டர் (villago center)  என்னும் கட்டிடடத்தில் இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஸ்பெய்ன், நியூசிலாந்து, பிரான்ஸ் நாட்டு சிறுவர் சிறுமியர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சிறுவர் பூங்கா பகுதியில் தீ பற்றிக் கொண்டதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்க் கொண்டுவர தீயணைப்புப் படையினர் பாரிய போராட்டம் நடத்தியதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் சேக் அப்துல்லா பின் நாசர் தானி தெரிவித்துள்ளார். தீயனைப்புப் படைவீரர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தீ விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


 

Azam-Qatar

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)