Puttalam Online
technology

கைவிடப்பட்ட இறால் பண்ணைகளில் கடலட்டை வளர்ப்பு

  • 2 June 2012
  • 2,001 views

(லங்காதீப – 2012.05.31 )
சிங்களத்தில் – பத்மா குமாரி கண்கானமிகே, கல்பிட்டி.
தமிழில் – அர்ஷாத் அலி

வடமேல் மாகாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் இறால் பண்ணைகளை பிரயோசனப் படுத்துவதர்க்கான மாற்று திட்டத்தை செயற்படுத்த  NARA (National Aquatic Resorce and Research Agency ), தேசிய நீரியல் வள மற்றும் ஆராய்ச்சி முகவர் அமைப்பு முன்வந்துள்ளது. 

கைவிடப்பட்ட இறால் பண்ணைகளில், கடல் கெக்கிரி அல்லது கடல் அட்டை வளர்ப்பை மேற்கொள்வதே இந்த மாற்றுத் திட்டமாகும். வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள 400 ha இறால் பண்ணைகளில் 95% ஆன பண்ணைகள் இன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இந்த கடலைட்டைகளுக்கான கேள்வி சீனா, தாய்வான், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தக் கேள்வி வருடமொன்றில் 400 -500 மில்லியன் ரூபா அந்நிய செலவாணியை பெற்றுத்தரக்கூடியதாக இருப்பதோடு அதிகரித்தும் செல்கிறது. இந்தக்கடலட்டை வளர்ப்பு வடமேல் மாகாணம், வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு, 5000 இற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகளையும் பெற்றுத்தருகிறது.

விலங்கு இராச்சியத்தில் முள்ளந்தண்டு இல்லாத Echinodermata வகையைச் சார்ந்த 1400 இனங்களில் 200 இனங்கள்  இந்து சமுத்திரத்தில் வாழுகின்றன. அவற்றில் 27 இனங்கள் இலங்கையின் கடற்பரப்பில் வாழுகின்றன. இந்த கடலட்டைகள் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இவற்றில் பொருளாதாரப் பெறுமதி வாய்ந்த இனமாக “ஜப்பான் அட்டை” அல்லது “sand fish” என்று அழைக்கப்படுகிறது.

“70 களின் ஆரம்பத்தில் புத்தளக் கடற்பரப்பில் அதிகமான கடலட்டைகள் காணப்பட்டன. இழுவை வலையின் ( trawl net ) மூலம் பொறுப்பற்ற முறையில் அறுவடை செய்யப்பட்டதன் காரணமாக, கடலைட்டையின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, இழுவை வலையைப் பயன்படுத்தி இறால் பிடித்தலில் மீனவர்கள் அக்கறை காட்டினர்.’ என்று, இந்த தேசிய செயன்முறையை மேற்கொண்டு வரும் NARA இன் ஆராய்ச்சி அதிகாரி G. A. D. அஜித் குமார தெரிவித்தார்.

எங்களுடைய நோக்கங்களாக, அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்ற கடலட்டை இனங்களை மீண்டும் எமது கடற்பரப்பில் நிறுவுதல், இயற்கைச் சூழலில் வாழும் கடலைட்டைகளின் அறுவடையைக் குறைத்தல், செயற்கை முறையில் குஞ்சு பொறித்தல் கைத்தொழிலை அறிமுகப்படுத்தல், அந்நிய செலவாணியை பெற்றுத்தரும் இந்த உற்பத்தியை பிரபல்யப் படுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு உரமூட்டுதல், வடமேல் மாகாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள இறால் பண்ணைகளில் கடலைட்டைகளை வளர்ப்பதன் மூலம் இறால் பன்னையாளர்களுக்கான மாற்று வழிமுறையை ஏற்படுத்திக் கொடுத்தல். எனபனவாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கல்பிட்டி NARA காரியாலயத்தில் செயற்கை முறையில் குஞ்சு பொரித்தலை மேற்கொள்ள முடியும். 400g இற்கு அதிகமான நிறையை உடைய கடலட்டைகள் தாய் விலங்குகளாக தெரிவு செய்யப்படும். பெண் கடலட்டை ஒரு முறையில் 1 முதல் 2 மில்லியன் வரையான முட்டைகளை இடும். அம் முட்டைகள் இருபத்து ஐந்து முதல் முப்பது வரையான நாட்களில் பல குடம்பிப் பருவங்களைக் கடந்து கண்களுக்குத் தென்படும். தாவரப் பிளந்தன்கள், தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டு பொரிப்பகங்களுக்குள் உள்ள தாங்கிகளில் அக் குடம்பிகள் வளர்க்கப்படும். குடம்பிகள் 1g நிறையை அடைந்ததும் பொரிப்பகங்களுக்கு வெளியே உள்ள தாங்கிகளில் வளர்க்கப்படும். 5g நிறையை அடைந்த குஞ்சுகள் பண்ணைகளில் வளர்க்கப்படும். களப்பினுள் அமைக்கப்பட்ட பாதுகாப்புக்கூடு, களியினால் அமைக்கப்பட்ட கூடு ஆகியவற்றினுள் இக்குடம்பிகள் விடப்படும்.
கிடைக்கப்பெற்றிருக்கின்ற ஆராய்ச்சி முடிவுகளின் படி செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட குஞ்சுகள் ஆறு  மாதங்களில் பாலியல் முதிர்ச்சி அடைவதோடு பத்து அல்லது பன்னிரண்டு மாதங்களில் சந்தைப் படுத்த முடியும். 700g நிறையுடைய கடலட்டை உள்நாட்டு சந்தையில் 1200 ரூபா முதல் 1500 ரூபாவிற்கு சந்தைப்படுத்தப்படுகிறது. காயவைத்த கடலட்டை 1kg அமெரிக்க டொலர் 100 முதல் 250 இற்கு விற்கப்படுகிறது.

NARA இன் தலைவர் Dr. S. J. சமர சுந்தரம் அவர்களது மேற்பார்வையின் கீழ் NARA இன் ஆராய்ச்சி அதிகாரி G. A. D. அஜித் குமார, Dr. சாமரி திசநாயக்க, ஆராய்ச்சி அதிகாரி J. s. ஜெயநாத் ஆகியாரின் பங்களிப்புடன் இச்செயல் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகி


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All