புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரியில் இன்று பொதுச் சிரமதானப் பணிகள் நடைபெற்றன. சர்வதேச சுற்றுப்புறச் சூழல் தினத்தை முன்னிட்டு கல்லூரியின் விவசாயக் கழகத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்துள் நடைபெற்ற இச் சிரமதானப் பணிகள் இரண்டாம் பாடவேளை வரை இடம் பெற்றது.
வகுப்பறை உள், வெளிச்சுத்தம் உட்பட இனங் காணப்பட்ட பல இடங்கள் மாணவர்களால் துப்பரவு செய்யப்பட்டன.
ஆசிரியர்களோடு மாணவர்கள் இணைந்து இச் சிரமதானப் பணிகளில் உட்சாகமாக ஈடுபட்டனர். இதேவேளை விவசாயக் கழகத்தினால் பயிர்கள் நடும் வேலைத் திட்டம் உட்பட பகுதி 10,11 மாணவர்களால் மலர் தோட்டம் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை விஷேட அம்சமாகும். இதன் மூலம் மாணவர்களின் கற்றல் சூழல் உருவாக்கப்படுவதாக விவசாய ஆசிரியர் திரு ஹதீத் தெரிவித்தார். மேலும் மைதான சூழலை அலங்கரிக்கத் தேவையான அசோக் மரக் கன்றுகளை தந்ததவுமாறு கல்லூரி அதிபர் Mr M. H. M. றாஸிக் அவர்கள் பெற்றொர், நலன்விரும்பிகளை கேட்டுள்ளார்.


June 7, 2012 at 2:17 am
சாகிரா கல்லூரியின் ஊடகப் பிரிவின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள், நாம் வாழுகின்ற நவீன யுகத்தில் செய்திகளுடன் ஒரு சில புகைப் படங்களும் பிரசுரிக்கப் பட்டால் நன்றாக இருக்குமே