PuttalamOnline

புத்தளத்தானிடமிருந்து இம் மாதம்: முச்சக்கர வண்டியும் மீட்டரும்

| 1 Comment

‘என்ன இந்த ஆட்டோ காரன், இப்படி அடாத்தா கேட்கிறான்? போகிற நேரம் அவன் அம்பது ரூபாத்தான், வழமையாக அம்பது ரூபாத்தான் எல்லாரும் கேக்கிறது, இவன் எம்பது ரூபா கேட்கிறான். தொலைந்து போகட்டும்’ இது எமது ஊரில் சில ஆட்டோக்காரர்கள் அநியாயமாக அளவுக்கு மீறி வாடகைக்கூலி கேட்கும் போது எமது ஊரவர்கள் தனக்குள்ளும், பிறர்களிடமும் முறையிட்டு கொள்ளும் பழக்கப்பட்ட வார்த்தை. ‘ஆட்டோ காரனுகள் எப்பவும் இப்படிதான்’ என சில ஆட்டோக்காரர்களின் தவறான நடைமுறையினால் சகல ஆட்டோக்காரர்களினையும் திட்டி தீர்க்கும் மற்றுமொரு குழுவினர். இதுவும் எமது ஊரில் பழக்கப்பட்ட வார்த்தைகளே.

இது போன்று ‘என்ன எழுவது ரூபா கேட்கிறீங்க? அம்பது ரூபா போதும்’ என்று ஆட்டோக்காரரின் கையில் (பொதுவாக எழுபது ரூபா எடுக்கும் தூரத்திற்கு) பலவந்தமாக காசினை திணித்து விட்டு திரும்பி பார்க்காமல் செல்லும் ஒரு குழுவினரை மனதிற்குள் திட்டி தீரக்கும் ஆட்டோ சாரதிகளினையும் நாம் மறந்து விட முடியாது.

இவ்விடயங்களினை நாம் அலசி ஆராயும் போது சில ஆடடோ சாரதிகள் முறையற்ற விதத்தில் அளவுக்கு மீறி வாடகைக்கூலி கேட்பதினால் பொது மக்கள் பாதிக்கப்படுவதுடன் மறுப்பக்கத்தில் அநீதியாக நடந்து கொள்ளும் பயணிகளினால் ஆட்டோ காரர்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.

எனவே இங்கு இரு சாராரும் பாதிக்கப்படாமல் பொதுவானதும், உறுதிப்படுத்தக்கூடியதுமான வாடகைக் கூலியினை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வழிவகை தேவைப்படுகின்றது.

அவ் வழிவகையில் ஒன்றாகத்தான் ஆட்டோக்களில் மீட்டர் பொறுத்தப்பட்டு, மீட்டர் தூரத்திற்கு வாடகைக் கூலி வழங்கும் திட்டமாகும். இதில் மிக குறைந்த தூரத்திற்கு குறிப்பிட்ட ஒரு தொகை அமுல்படுத்-துவதுடன் அதன் பின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் குறிப்பிட்ட மற்றுமொரு தொகையினை அதிகரித்துச் செல்லலாம். இதன் மூலம் பொதுவானதும், உறுதிப்படுத்தக்கூடியதுமான, எவருக்கும் பாதிப்பில்லாத வாடகைக்கூலி வழங்கலாம்.

எனினும் இவ்விடயத்தில் மற்றுமொரு சிக்கல் நிலையும் உள்ளதினை மறந்து விட முடியாது. குறித்த மீட்டர் பெட்டியொன்றின் விலை எறத்தாழ பன்னிரெண்டாயிரம் ரூபா ஆகும். இதனை விட இவ் மீட்டரினை பொறுத்த மற்றுமொரு சிறிய தொகை தேவைப்படும். எனவே ஆட்டோக்காரர்கள் எல்லோருக்கும் தற்போதை வாழ்க்கை செலவுக்குள் இது உடனடியாக சாத்தியமாகுமா என்பது கேள்வி குறியான விடயம்.

எவ்வாறாயினும் இவ்விடயத்துடன் தொடர்புடைய அரச நிறுவனங்கள் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஆட்டோ காரர்களுக்கு சலுகையடிப்படையில் அல்லது தவனை முறையில் பணம் செலுத்தும் வசதியில் அல்லது இலசமாகவோ மீட்டர் பெட்டியினை வழங்கினால் அநீயாய காரர்களின் செயல் முடிவுக்கு வரும் என்பதில் ஐயமில்லை.

இதே வேளை தற்போது கொழும்பில் பல ஆட்டோக்கலில் மீட்டர் பெட்டி பொறுத்தப்பட்டுள்ளதுடன் மீட்டர் பெட்டி பொறுத்திய ஆட்டோக்களினையே மக்கள் விரும்பி வாடகைக்கும் அமர்த்துகின்றனர். இதே வேளை கொழும்பில் தற்போது பாவனையிலுள்ள மீட்டர் டெக்ஸி புத்தளம் பிரதேசத்திற்கு வருவதற்கு மிகுந்த காலம் எடுக்காது என்பதினையும் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

இது தொடர்பாக வாசகர்களின் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

One Comment

  1. பெட்டாஹ் வில் இருந்து பொரளை விபத்து வாட்டுக்கு செல்ல மீட்டர் இல்லாத ஆட்டோவில் 250 தொடக்கம் 300 ரூபா வரை எடுக்குகிறாக்கள் ஆனால் மீட்டர் ஆட்டோவில் 130 தொடக்கம் 150 ரூபா வரைதான் கட்டணம் அறவிடபடுகிறது இருந்தாலும் மீட்டர் ஆட்டோகாரன் மீட்டர் வேலை செய்யவில்லை என்று கூறி அதிக பணம் எடுக்கும் பார்கிறான்

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)