(SLJI Puttalam Branch – media unit)
உலகம், அதிலுள்ள ஜீவன்கள் முதல் ஜீவராசிகள் வரை, அனைத்தும் அல்லாஹ்வின் மகிமையை, படைப்பின் ஆற்றலை வெளிப்படுத்தும் நிஜத்தின் நிழல் உதாரணங்கள். இவற்றை தேடி சென்று அல்லாஹ்வின் மகிமையை, படைப்பின் ஆற்றலை விளங்கி முஸ்லிமாக, இஸ்லாத்தின் தூணாக வாழ வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் பொறுப்பு. ஆனால் இன்று எமது பிரயாணங்கள் எதன் அடிப்படையில் அமைந்திருக்கின்றன? தேவைகளுக்காக, பொழுது போக்குகளுக்காக என்று எமது பிரயாணங்கள் வியாபித்திருக்கின்றன. இவை எவற்றிலும் இஸ்லாம் வேண்டும் பயண ஒழுங்குகள் பேணப்படுகின்றனவா? பயண துஆக்கள் ஓதப்பட்டு பயணங்கள் தொடரப்படுகின்றனவா? பயணத்தில் பர்ளுகள் தவறவிடப்படாமல் பின்பற்றப்படுகின்றனவா? பயணத்தின் போது எமது தக்வாவை பாதுகாத்து தருமாறு பிரார்த்திக்கின்றோமா? வீடு, சொத்து, பிள்ளைகள், மனைவி ஆகியாரை அல்லாஹ்வின் பாதுகாப்பில் விட்டு விட்டு செல்கின்றோமா? இல்லை மாறாக பொழுதைக் கழிக்க இசையும், மதுபானமும், சிகரட்டும் தான் எமது துஆக்கள் போன்று எம்மோடு துணைக்கு வருகிறது.
சஹாபாக்கள், இப்படியான பிரயாணங்களில் தக்வாவை புதுப்பிக்க வாருங்கள் என்று அல்லாஹ்வின் மகிமையை, படைப்பின் ஆற்றலை பார்த்து தமது தோழர்களை ஒன்று சேர்த்துக்கொள்வார்கள்.
இந்த நிலையில் நாளும் பொழுதும் பயணத்தில் கழிப்பவர்கள், மற்றும் எப்பொழுதாவது பிரயாணம் செய்பவர்கள் இஸ்லாத்தை, தக்வாவை கட்டுச்சாதமாக எடுத்துக்கொண்டு பிரார்த்திக்க வேண்டும். இஸ்லாத்தை தவிர வேறொன்றும் இல்லை உலகிலும் மறுமையிலும் வெற்றி பெற.

