PuttalamOnline

ஆயிஷா ஷெரீபின் கவிதை: எம் தாய் ….

| 2 Comments

(ஆயிஷா ஷெரீப்)

 

 

 

 

 

 

 

 

 

எம் தாய் ……

தடம் பதித்தோம், உன் கருவறையில் களம் கொடுத்தாய்
தவழ்ந்து திரிந்தோம், உன் முக்காட்டினால் நிலம் துடைத்தாய்
தள்ளாடி நடந்தோம், விழுந்து விடாமல் உன் கரம், விரல் கொடுத்தாய்
தரம் படித்து தரம் ஏறினோம், நீ தாள்களாய் கொடுத்தாய்
தடைகள் பல தாண்டினோம், நீ உற்சாகம் கொடுத்தாய்
தடுக்கியும் விழுந்தோம், நீ தட்டி கொடுத்தாய்
தடுமாறி நின்றோம், நீ தன்னம்பிக்கை தந்தாய்
தளம் இறங்கி தரம் பார்த்து கரம் பிடித்தும் தந்தாய்
தடை போட்டு கசப்புகளையும் இனிப்பாக்கினாய்
தலை நிமிர்ந்து வாழ வைத்தாயே, தாயே !!!

தவித்து நிற்கிறோம், தற்போது !
தாயே ! எம் அன்புத்தாயே !!!
தவமிருந்தாலும் திரும்பி வரமாட்டாய் எம்
தாயாக!!!! மீண்டும் இவ்வுலகில்

தாயே உன் பிஞ்சுகளை, மழலைகலாக்கினாய்
மழலை குழந்தைகளை சிருமிகளாக்கினாய்
சிறுமிகளும் குமரிகளாஹி, தாரமாகவும்
மாற்றி தந்து சென்றாயே தாயே !!!
உன்னை எமக்கு உன் மேலான
“தாய்” என்ற பதவியை
தந்து சென்றாயே தாயே !!!

உன் சேய்களை “தாய்களாக”
தரமுயர்த்தி சென்றாயே தாயே !!!

நாமும் உன்னைப்போல் ஒரு
“தாயாக” மாற வேண்டும்
எம் குழந்தைகள் போற்றும்
“தாயாக” மாற வேண்டும்

நிரந்தரமாக நீ இல்லாத போது
நாம் யார் குழந்தைகள் ???
உரிமையோடு என் மகள், மகன் என்று
யார் அழைப்பார் எம்மை ???

இவ்வுலகில் இளைப்பாறியது போதும் என்று
ஓய்வு பெற்று சென்று விட்டாயே !!!
உண்மையான உறுதியான நிலையான
நிரந்தரமான இடத்தை நோக்கி ……

எம் பிரார்த்தனைகள் உமக்காக
என்றும் நீவிர் நிலையான
மேலான சுவர்கத்தில்
வாழ வேண்டும் !!!

அன்புத்தாயே எம் தந்தைக்கும்
உம் உயிர் குழந்தைகளின்
இனிய சலாத்தை எத்தி வைப்பாயாக !!!

தொப்புள் கொடியுறவு சுடுகாடு வரையல்ல
அது எமக்கு சுவர்க்கம் வரை
அல்லாஹ்வின் எழுத்தில்
நீங்கள் முந்தியவர்கள்
நாம் பிந்தியவர்கள்

அன்புத்தாயே நாமும் பயணிக்கிறோம்
சுவர்கத்தை நோக்கிய இலட்சிய பாதையில்
பிரார்த்திக்கிறோம் உமக்காகவும் எமக்காகவும்
நாம் உங்களை மேலான சுவர்கத்தில் கண்டுகொள்ள !!!

எல்லாம் வல்ல அல்லாஹ்
எம் துஆவை ஏற்றுக்கொள்வானாக
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் !!!!

 

 

2 Comments

  1. ஆமீன் ஆமீன் …

  2. congratz ……

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)