தரம் 08, 09 பகுதி மாணவர்களின் ஆற்றல்கள் அரங்கேறும் சந்தர்ப்பம் இன்று புத்தளம் ஸாஹிராக் கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் இடம் பெற்றது. மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு நண்பகல் 12.00 மணி முதல் 2.00 வரை கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற்றது,அதிபர் பிரதி அதிபர்கள் வகுப்பாசிரியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அதிபர் திரு றாஸிக் தமது பாடசாலை இளமை கலை வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
தனி, குழு பாடல். கவிதை, நாடகம், பேச்சு என் பல்சுவை அம்சங்களைத் தாங்கி இன்றைய கலை அரங்கம் இடம்பெற்றது. பாடசாலை காலங்களை இனிமையாக பயண்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி கல்லூரி அதிபர் வேண்டினார். மேலும் பாடல் உட்பட பிரதி அதிபரின் ஆங்கிலப் ஆசிரியர்கள் ஆஸாத், பஸீல் ஆகியோரின் பாடல்களும் அக்பர் ஆசிரியரின் முயற்சி திர வினையாக்கும் என்ற விஷேட நிகழ்வும் இடம் பெற்றது.
மாணவர்களின் மனப்பாங்குகளை விருத்தி செய்யும் நோக்கோடு இத்தகைய மாதமொரு முறை களம் அமைத்துக் கொடுப்பதாக மன்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பான ஆசிரியர் திரு பஸீல் தெரிவித்தார்.

