PuttalamOnline

ஜும்மா சுருக்கம் – அஷ்ஷேய்க் அபுல் ஹுதா(பாகவி), 22.06.2012 மஸ்ஜிதுல் பகா

| 1 Comment

அல்லாஹ் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து கூறுகிறான், நபியே நீர் அவர்களுடன் மென்மையாகவும், மிருதுவாகவும் நடந்து கொண்டீர், நீர் அவர்களுடன் கடினமாகவும் கடின சித்தை உடையவராகவும் நடந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டும் வெருண்டோடி இருப்பார்கள். மற்றுமொரு வசனத்தில் அல்லாஹ் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து கூறுகிறான், அண்ணலாரிடம் அகிலத்தருக்கான அழகிய முன்மாதிரி காணப்படுகிறது என்று…

அல்லாஹ் வழங்கும் இந்த சான்றிதழ் நாயகம் அவர்களிடம் காணப்படும் விட்டுக்கொடுப்பு, மன்னிக்கும் தன்மை, அன்பு போன்ற பல பண்பாடுகளின் அடிப்படையிலே,

இன்றைய ய்லகில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை விட்டுக்கு வீடு, சமூகத்துக்கு சமூகம்… என்று அதன் வியாபகம் திரிபடைந்து செல்கிறது.. இந்த நிலையில் வீடுகளுக்குள் குளிர்ச்சி இன்று இல்லை. காரணம் எம்மிடம் பண்பாடு இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகள் உறவுகள் ஈனோ தானோ என்ற நிலையில் பிடிப்பில்லாத வாழ்க்கை.

அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்த பாக்கியங்களில் ஒன்று சாளிகான மனைவி, மனிதன் மறு உலக வாழ்வுக்காக மனிதன் சேர்க்கும் செல்வம் சாலிகான பிள்ளை. இன்று ஒவ்வாரு குடும்பத்திலும் இவர்களது பிடிப்பான வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தால் இளைஞ்சர்கள் தங்களது வாழ்வின் பருவத்தை நாசமாக்கமாட்டர்கள். மனைவிமார்கள் தங்கள் போருப்புகை மறந்து வாழமாட்டார்கள். நாயகம் (ஸல்) அவரகளது பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்த விதம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இவ்வாறு எம்மில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளுடன் குறிப்பாக ஆண் பிள்ளைகளுடன் நடந்து கொள்ளுகிரோமா? சர்வதேஷ சதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கின்ற போது நாமே எமது பண்பாட்டை இழந்து நமக்காக  தோண்டிக்கொள்ளும் சதி தான் எங்கள் பிள்ளைகளை குட்டிச் சுவராக வளர்த்தல். இது பற்றி இனியாவது சிந்திப்போம்.

SLJI Puttalam Branch – Media Unit

One Comment

  1. முக்கியமான விடயம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
    பிரார்த்தனை.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)