PuttalamOnline

வலய மட்ட பரிசளிப்பு நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றன.

| 0 comments

புத்தளம் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் அகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் மற்றும் மீலாதுன் நபி தின போட்டிளுக்கான வலய மட்ட பரிசளிப்பு வைபவம் இன்று புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு 2012.06.21 அன்று காலை 10. 00 மணியளவில் பிரிதிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்ப் பிரிவு) திரு M.A.M. அனீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் U.M.B ஜெயந்திலா அவர்கள் கலந்து சிறப்பித்தார். புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும் நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

போட்டி நிகழ்ச்சிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களின் நிகழ்ச்சிகள் மேடையை அலங்கரித்தன. மேலும் புத்தளம் பிரிதிக் கல்விப் பணிப்பாளர் திரு M.A.M. அனீஸ் அவர்களினால் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர்.(தமிழ்ப் பிரிவு) U.M.B ஜெயந்திலா  அவர்கட்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 Zahira Media Unit

Photos Hasni Ahamed

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)