புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் PULSED அமைப்பானது பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஆக்கத் திறன் போட்டி நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடுகளை செய்துள்ளது. இப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்ற தெரிந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள்:
- Zahira College (National School), Puttalam
- Asenkuddhoos Muslim Maha Vidayalaya, Vettaalai, Puttalam
- Presidents Science College, Puttalam.
- Fathima Muslim Ladies College, Puttalam
- Al-Ashraq Muslim Maha Vidyalaya, Manalkunru, Puttalam
போட்டி நிகழ்ச்சிகள் தொடர்பான அறிவுறுத்தல்களும், நிபந்தனைகளும்
1. போட்டியாளர்களாக பங்குபற்றுவோர் :- நிகழ்ச்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் தற்போது கல்வி பயிலும் மாணவர்கள்.
|
நிகழ்ச்சிகள் |
பிரிவு 01 (தரம் – 09) |
பிரிவு 02 (தரம் – 10,11) |
பிரிவு 03 (தரம் – 12,13) |
|
கட்டுரை |
02 பேர் |
03 பேர் |
03 பேர் |
|
கவிதை |
02 பேர் |
03 பேர் |
03 பேர் |
|
ஓவியம் |
02 பேர் |
03 பேர் |
03 பேர் |
2. போட்டியாளர்களின் விபரங்கள் குறித்த பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் எதிர்வரும் 2012 ஜூலை 09 ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
செயலாளர்,
PULSED,
இல. 14, நெடுங்குளம் வீதி, புத்தளம்
3. போட்டிகள் யாவும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2012 ஜூலை 14 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 09 மணி தொடக்கம் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் (Infant Zahira) நடைபெறும்
4. போட்டி நிகழ்ச்சிகளுக்காக வருகை தரும் மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் வருகை தரல் வேண்டும்.
5. ஆக்கங்களுக்கான வரைதாள்கள் மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
6. போட்டியாளர்கள் யாவரும் குறித்த நேரத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு சமுகமளித்தல் வேண்டும்.
7. பின்வரும் தலைப்புகளில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைப்பில் தமது ஆக்கத்தை மாணவர்கள் தரப்பட்ட நேரத்தில் தயார்படுத்தல் வேண்டும்.
ஆக்கங்களுக்கான பொது தலைப்புகள்
கட்டுரை,கவிதை போட்டிக்கான தலைப்புகள்
- போதைப்பொருள், புகைபிடித்தலுக்கான இஸ்லாத்தின் தடை, ஆரோக்கியமான சமூகத்திற்கு வழிகோலுகின்றது.
- இளைஞர்கள் மத்தியில் புகைத்தல்,போதைப்பொருள் பாவனை தொடர்பாக நவீன கால ஊடகங்களின் பங்களிப்பு.
- குடும்பங்கள் மத்தியில் உடல், உள ரீதியான தாக்கங்களை ஏற்படுத்துவதில் புகைத்தல், போதைப்பொருள் பாவனையின் முக்கியத்துவம்.
ஓவியப் போட்டிக்கான தலைப்புக்கள்
- போதைப்பொருட்கள், புகைத்தலற்ற ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினர்
- புகை பிடித்தலும் அது ஏற்படுத்தும் சமூக, சூழல் ரீதியான பாதிப்புகளும்
- போதைப்பொருட்களும், புகைத்தலும், சுகாதார சீர்கேடுகளும்
8. போட்டி நிகழ்ச்சிகளுக்கான நேர ஒதுக்கீடும், ஆக்கங்களின் அளவும் பின்வருமாறு நிபந்தனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
|
பிரிவு 01 |
பிரிவு 02 |
பிரிவு 03 |
|
|
கட்டுரை |
750 சொற்கள் (01 மணி) |
1000 சொற்கள் (01 ½ மணி) |
1500 சொற்கள் (02 மணி) |
|
கவிதை |
10 பந்திகள் (01 மணி) |
15 பந்திகள் (01 ½ மணி) |
20 பந்திகள் (02 மணி) |
|
ஓவியம் |
02 மணி |
2 ½ மணி |
2 ½ மணி |
மேற்படி நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே போட்டியாளர்கள் தமது ஆக்கங்களை மண்டபத்தில் தயார்படுத்தல் வேண்டும்.
9. தெரிவு செய்யப்பட்ட சிறந்த ஆக்கங்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும்.
10. சிறந்த ஆக்கங்கள், எதிர்காலத்தில் உள்ளூர், மற்றும் தேசிய சஞ்சிகைகளிலும் பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
11. போட்டி நிகழ்ச்சிகள் தொடர்பான மேலதிக விபரங்களை 0772120900 அல்லது 0776686835 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
12. போட்டி நிகழ்ச்சிகள் தொடர்பாக PULSED அமைப்பின் போட்டிக்குழு நிர்வாகத்தின் முடிவே இறுதியானதும் முடிவானதும் ஆகும்.

