PuttalamOnline

இன்று மூன்று மாகாண சபைகள் கலைப்பு?

| 0 comments

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணசபைகள் இன்று கலைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாண முதலமைச்சர்களின் ஆலோசனைகளுக்கு அமையவே இம்மூன்று மாகாணசபைகளின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பாகவே கலைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை,மாகாணசபைகள் கலைப்பதற்கு மாகாண முதலமைச்சர்களும் உறுப்பினர்களும் விரும்பவில்லை என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துமாறு எதிர்க்கட்சிகளும் தேர்தல்கண்காணிப்பு அமைப்புக்களும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

எனினும்,அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு காணப்படுகின்றது என்பதனை சர்வதேச அரங்கில் உறுதி செய்யும் நோக்கில் அரசாங்கம் அவசர அவசரமாக மாகாணசபைகளைக் கலைத்து தேர்தல் நடாத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை,மாகாணசபைகள் கலைக்கப்படுவது பற்றியோ அல்லது தேர்தல் நடாத்துவது பற்றியோ தேர்தல் திணைக்களம் இதுவரையில் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)