Puttalam Online
uncategorized

புத்தளம் பொலிசாரின் நடமாடும் சேவையில் குவைத் வைத்திய சாலையின் மருத்துவ முகாம்

  • 4 July 2012
  • 906 views

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுல பிரதேசத்தில் மக்கள் நடமாடும் சேவை ஒன்றினை புத்தளம் பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பகுதி ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த 30.06.2012 அன்று நடைபெற்ற மேற்படி நடமாடும் சேவையில் புத்தளம் பொலிஸ் பிரிவின் அனைத்து சேவைகளும் கிவுல பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்டதோடு, புத்தளம் குவைத் வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை, தள வைத்தியசாலையின் மருத்துவ வழிகாட்டல் நிகழ்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகியனவும் இடபெற்றன.

இந்நிகழ்வில், புத்தளம் பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு. சுகதபால, புத்தளம் பொலிஸ் நிலைய இடைக்கால பொறுப்பதிகாரி திரு. குமார, மக்கள் தொடர்புப் பிரிவு பொறுப்பாளர் திரு. ரோகன ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All