PuttalamOnline

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை சிறையில் அடைப்பு

| 0 comments

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 13 தமிழக மீனவர்கள், அனுராதபுரம், புத்தளம் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையிலிருந்து கடந்த ஜூன் 29 ல், நாட்டுப்படகில் பல லட்சம் மதிப்புள்ள பீடி பண்டல்கள், பான்பராக் பாக்கெட்டுகளை இலங்கைக்கு கடத்தி சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மாரி, பாலமுருகன், ஜீவா ஆகியோரை இலங்கை கடற்படையினர் பிடித்து, கல்பிட்டி போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், மூவரும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோல், கடந்த ஜூன் 30 ல் மீன்பிடிக்க சென்று, நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த 10 ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் பிடித்து, இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், ராமேஸ்வரம் மீனவர்களை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜூலை 11ல் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டுமென, நீதிபதி உத்தரவிட்டதால், 10 மீனவர்களும் அனுராதபுரம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

மூலம்: தினமலர்

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)