இவ்வருடத்தின் முதல் ஆறு மாத காலத்துக்குள் சுமார் 900 பாலியல் தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.
இவற்றுள் சுமார் 700 முறைப்பாடுகள் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்த முறைப்பாடுகள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார்.
அண்மைக்காலமாக நாட்டில் பரவலாக இடம்பெறும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களையடுத்து சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றிலேயே மேற்படி அவர் தெரிவித்தார்.

