PuttalamOnline

கிழக்கு மாகான சபை தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒருமித்து செயற்பட தீர்மானம். ACJU – MCSL அறிக்கை

| 5 Comments

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது பிரதான மூன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒருமித்து செயற்பட இணக்கந் தெரிவித்துள்ளன.

பொது இலக்கை அடிப்படையாகக் கொண்டு ஒருமித்து செயற்படுவதற்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியன இணக்கந் தெரிவித்துள்ளன.

முஸ்லிம் சிவில் இயக்கங்களின் கூட்டமைப்பான இலங்கை முஸ்லிம் கவுன்ஸில்ää அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஆகியவற்றின் கூட்டுத் தலைமையில் கடந்த 06.07.2012 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற விஷேட கூட்டமொன்றிலேயே இவ்விணக்கப்பாடு பெறப்பட்டது.

தேர்தலும் அதன் பிரசார நடவடிக்கைகளும் புனித ரமழானில் நடைபெறயிருப்பதால் ரமழானின் கண்ணியத்தைப் பேணும் வகையில் தேர்தல் பிரசார மேடைகளில் எவரையும் சாடாத வகையில் பிரசார முன்னெடுப்புகளை மேற்கொள்ள இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கில் அனைத்து அரசியல் பிரமுகர்களும் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அதாவுல்லா ஆகியோரின் ஆசிர்வாதத்துடனேயே இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹ{னைஸ் பாரூக், கட்சியின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீத் மற்றும் சட்டத்தரணி என்.எம். ஷஹீத் ஆகியோர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவ10த் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம் ஆகியோர் அங்கு பிரசன்னமாயிருந்தனர்.

அத்தோடு இக்கூட்டத்தில் பெறப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸும் இணக்கம் தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்திää செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முபாரக், பொருளாளர் மௌலவி கலீல் மற்றும் ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் கவுன்ஸில் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் எஸ்.ஏ.அஷ்கர் கான் மற்றும் உறுப்பினர்களான எம்.எச்.எம். நியாஸ், சட்டத்தரணி ரஷீம் எம். இம்தியாஸ், ஷிராஜ் மஷ்ஹூர் ஆகியோரும் அக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

5 Comments

  1. Dear Br. In Islam,

    I’m very humbally requesting all puttalam muslims and tamil to gether one umbrella to beat the present Govt. as you know every one specially people in puttalam what was haapended in the past to the minority tamil/muslim people in this small Island. please hold the rope titely without losing and show our unity aleast this time. don’t belive the funny politician around you they never come closer if your in danger

  2. அன்புள்ள வாசகர்களே,

    “எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது பிரதான மூன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒருமித்து செயற்பட இணக்கந் தெரிவித்துள்ளன.”

    எப்படி என்று யாராவது விளக்குவீர்களா? அரசாங்க கூட்டு கட்சிகளுடன் சேர்ந்து ரிஷாத் பதியுதீன் ஆள் யாரும் போட்டிபோடவில்லையா?

    ரவுப் ஹகீம் தனித்தா போட்டிபோடுகிறார்?
    அவருக்கு ரிஷாத் பதியுதீன் ஆதரவு தருகிறாரா?

    இந்த கட்டுரையின் விளக்கம் தான் என்ன? ஏதோ எல்லாருமா சேர்ந்து ஒரு முஸ்லீம் முதல் அமைச்சர் வருவதை தடுக்காமல் இருந்தால் சரி.

    அது சரி அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுடன் அ. இ.தே.மு.கா புத்தளம் அமைப்பாளர் ? அலிசப்ரி மூதூர் சென்றதாக செய்தி வ ந்துள்ளதே. பட்டானி ராசிக் அவர்களின் கொலை(?) பற்றி இவருக்கு ஏதும் தெரியாதா?

    என்ன அரசியல்வாதிகள் இவர்கள்? (அவர்களின்) அரசியலாக அவர்கள் நினைப்பதற்கும் ( உண்மையான) அரசியலுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?

    அல்லாஹு அஹ்லம்! என்று சொல்லிவிடாதீர்கள்.

    • நிச்சயமாக அல்லாஹு அஃலம்! அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன். நீங்கள் எழுப்பியிருக்கும் வினாக்களுக்குப் பதிலளிக்கும் நேர்மை தான் இங்கு பிரச்சினை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் உலமாக்கள், இஸ்லாமிய இயக்கத்தின் ஆட்கள், அரசியல் வாதிகள் ஆகியோரிடம் உண்மையான சமூகப் பற்றும், மக்கள் நலன் மீதான ஆர்வமும் உள்ளதா அல்லது தமது இயக்க – கட்சியின் நலன்களையே அவர்கள் மக்கள் நலன் என்று கருதுகிறார்களா?

      Sincerely we have no say on national politics. But Puttalam peoples interests are unilaterally surrendered I suppose! Counting my days in Grand Mosque as Secretary!

  3. முஸ்லிம் கௌன்சில் – ஜம் இய்யதுல் உலமா பிரமுகர்களின் புத்தளம் வருகை ஏனோ தவிர்க்க முடியாது நினைவு வருகிறது. முஸ்லிம் கௌன்சில் ஒப் ஸ்ரீ லன்காவின் செயலாளர் சகோதரர் அஸ்கர் கான்! உங்களின் இப்படியான பணிகளால் புத்தளத்துக்குப் பெருமை தேடித் தருவீர்கள். நிச்சயம்!

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)