PuttalamOnline

ஆசிரியர்களுக்கான கணினிப் பயிற்சிப் பாசறை

| 0 comments

ஆசிரியர்களுக்கான International Pedagogical ICT License எனும் கணினிப் பயிற்சிப் பாசறையொன்று புத்தளம் Gateway College இல் நடைபெற்று வருகிறது. பாடசாலைகளில் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை கணினியினூடாக மேற்கொள்வதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் Education For Knowledge Society எனும் செயற்றிட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்படி கணினி பயிற்சிப் பாசறை நடைபெற்று வருகிறது.

18 நாட்களைக் கொண்ட இப்பயிற்சிப் பாசறையில் 8 பாடஅலகுகளைக் கொண்ட கையேடுகள் வழங்கப்படுகின்றன. இதன் ஒவ்வொரு அலகுக்கும் தாம் விரும்பிய பாடமொன்றுக்கு கணினியைப் பயன்படுத்தி கற்றல்-கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பாடத் திட்டம் தயாரிப்பதற்கான பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

வாராந்தம் இரு பிரிவுகளாக நடைபெறும் இப் பயிற்சிப் பாசறையில் புத்தளம் தமிழ் மொழி மூல பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 40 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)