Puttalam Online
sports

Puttalam Premier League (PPL) 2012

புத்தளம் நகர சபை மைதானத்தில் ஞாயிற்றுக் கிழமை(08) மாலை நடைபெற்ற மெகா கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் புளிச்சாக்குளம் அணி சம்பியனாகி ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பணத்தையும் வெற்றிக்கிண்ணத்தையும் சுவீகரித்துக் கொண்டது.

புத்தளம் நகர பிதாவும் ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸின் பூரண அனுசரணையுடன்  நடாத்தப்பட்ட அணிக்கு 11 பேர்களை கொண்டதும் 8 ஓவர்களைக் கொண்டதுமான இப்போட்டித் தொடர் கடந்த ஒரு வார காலமாக தொடராக நடாத்தப்பட்டது. மொத்தமாக 64 அணிகள் தொடரில் பங்கேற்றன.

இறுதிப் போட்டிக்கான தகுதியை புளிச்சாக்குளம் அணியும், புத்தளம் சுகத அணியும் பெற்றிருந்தன. இறுதிப்போட்டியில் முதலில்  துடுப்பெடுத்தாடிய புளிச்சாக்குளம் அணி 8 ஓவர் முடிவில் 45 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  புத்தளம் சுகத அணி 8 ஓவர் முடிவில் 41 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம் 4 மேலதிக ஓட்டங்களால் புளிச்சாக்குளம் அணி வெற்றி பெற்றதோடு சுகத அணி 2ம் இடத்தைப் பெற்றது.

சுகத அணிக்கு 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது. நகர பிதா கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி வைத்தார் தொடர் நாயகனாக சுகத அணியின் தினேஷ் என்பவரும் ஆட்ட நாயகனாக புளிச்சாக்குளம் அணியின் பைசானும் தெரிவாகினர்.


One thought on “Puttalam Premier League (PPL) 2012

  1. isfairooz says:

    Waw…………….. what wonderful victory made by Pulachchakulam youth … go ahead youths go………. show your similar power in education as well.
    be a good citizan and true muslim

    Ishan Fairooz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All