PuttalamOnline

பயனுள்ள றமழான் விடுமுறையுடன் ஸாஹிரா கல்லூரி மாணவர்கள்.

| 0 comments

எதிர்வரும் றமழான் விடுமுறையை  வினைத்திறனுடன் கழிப்பதற்கு புத்தளம் ஸாஹிரா கல்லூரி தரம் 10,11 பகுதி முயற்சி எடுத்துள்ளது. இதன் படி க.பொ. த சா.த மாணவர்களது அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களுள் ஒரு கட்டமாக முன்னெடுக்கப்படும் இச் செயற்பாடுகளுக்கு வலு சேர்ப்பதன் பொருட்டு வருகின்ற றமழான் விடுமுறையில் மாணவர்களுக்கான முழு நேர தொடர் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது.

இதனடிப்படையில் முக்கிய பாடங்களுக்கான கருத்தரங்கு கால அட்டவணை தயார்படுத்தப்பட்டுள்ளன. இவ்வட்டவணை தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளதோடு தரம் 10, 11 பிரிவில் காட்சி படுத்தப்பட்டுள்ளது, எனவே மாணவர்களது இக்கற்றல் செயற்பாடுகளை உறுதி செய்யுமாறும் இது தொடர்பான ஒத்துழைப்புக்களை நிருவாகத்திற்கு வழங்குமாறும் உதவிப் பகுதித் தலைவர் ஆசிரியர் திரு பயிலுர் றஹ்மான் பெற்றார்களைக்  கேட்டுள்ளார்.

இதன் மூலம் றமழான் விடுமுறையை பயனுள்ளதாக கழிப்பதோடு கல்லூரியின் அடைவு மட்டத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

- Zahira Media Unit

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)