PuttalamOnline

ஐ.ஓ.எஸ் 6 இல் யூடியூப்புக்கு இடமில்லை: வலுக்கும் அப்பிள்- கூகுள் மோதல்

| 0 comments

அப்பிளின் மொபைல் இயங்குதளமான ஐ.ஓ.எஸ் இன் அடுத்த தொகுப்பான ஐ.ஓ.எஸ் 6 இல் யூடியூப் அப்ளிகேசன் இணைக்கப்படவில்லை என்ற அறிவிப்பை அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக மேற்கொண்டுள்ளது. இவ்வருடத்தின் ஆரம்பத்தில் ஐ.ஓ.எஸ் இலிருந்து கூகுளின் மெப் வசதியை நீக்குவதாக அப்பிள் அறிவித்திருந்ததுடன் இதற்குப் பதிலாக தனது சொந்த மெப் வசதியையும் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் யூடியூப் அப்ளிகேசனை தனது அடுத்த மொபைல் இயங்குதளத் தொகுப்பில் இணைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. யூடியூப் அப்ளிகேசனை இணைப்பதற்கான அனுமதிப்பத்திரம் நிறைவடைந்த காரணத்தினாலேயே இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக அப்பிள் தெரிவிக்கின்றது.

ஆனாலும் பாவனையாளர்கள் சபாரி உலாவியினூடாக யூடியூபினை உபயோகிக்க முடியுமென தெரிவிக்கின்றது அப்பிள்.

இதேவேளை அப்பிள் பாவனையாளர்கள் ‘எப் ஸ்டோரிலிருந்து’ தரவிறக்கக் கூடிய வகையிலான புதிய யூடியூப் அப்ளிகேசனை கூகுள் உருவாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. எனினும் அப்பிளின் இந்த அதிரடி முடிவுக்கு பல காரணங்கள் உள்ளன.

கூகுளுக்கும் அப்பிளுக்கும் நீண்டகாலமாக நிலவும் போட்டியும் இம்முடிவுக்கான காரணங்களில் ஒன்றாகக் கருதமுடியும். குறிப்பாக அண்ட்ரோய்ட் இயங்குதளம் தொடர்பில் நிலவும் மோதல், உரிமங்கள் தொடர்பில் நிலவும் மோதல். இவற்றைக் கருத்தில் கொண்டே அப்பிள் கூகுளிடம் இருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக்கொள்ளும் வகையிலான வியூகங்களை வகுத்து வருவதாகத் தெரிகின்றது. இதன் ஓர் அங்கமாகவே யூடியூப், கூகுள் மெப்ஸ் ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. தனது ஐ பேட் மற்றும் ஐ போனுக்குள் பேஸ்புக்கினை இணைத்தது  கூகுளின் ‘கூகுள் +’ சமூகவலையமைப்புக்கு போட்டியளிக்கும் வகையிலேயே இம்முடிவை மேற்கொண்டதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும் கூகுளுக்கு அதன் சேவைகளுக்கென கட்டணம் செலுத்துவதை அப்பிள் விரும்பவில்லையென்பதும் இம்முடிவுக்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கவே செய்கின்றன.

  ஐ.ஓ.எஸ் 6

அப்பிளின் ஐ பேட் மற்றும் ஐ போன் போன்ற மொபைல் சாதனங்களுக்கான 6 ஆம் தலைமுறை இயங்குதளமே ஐ.ஓ.எஸ் 6 ஆகும். கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.ஓ.எஸ் 6 சுமார் 200 க்கும் அதிகமான புதிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

தகவல்: வீரகேசரி

நன்றி: S.I.M. Akram

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)